“வார்த்தைகள்”சாதாரணமாக வார்த்தைகள் என்று சொல்லி விடுகிறோம்… ஆனால் அந்த வார்த்தைகளின் தாக்கத்தை உணர்ந்தால்தான் புரியும்..
ஒருவனை மாடு என்றால்…..சுருக்கென்று கோபம் வந்து “நான் என்ன மாடா என்பான். நீ குருடா? என்றால் எப்படி கோபிப்பான். அதையே, நீங்கள் “பசு
மாதிரி இருக்கீங்க” என்றால் அவருக்கு உச்சி குளிரும். மாடும், பசுவும் ஒன்றேதான். அதைக் கையாளும் விதத்தில் இருக்கிறது. அதே நீ குருடா என்பதை, “நீங்க கவனிக்கலைப் போலிருக்கே” என்பது மனதைக் காயப்படுத்தாத வார்த்தையாகும்.ennathuli
அலுவலகத்தில் பணியாளார் ஒருவர் சற்றே கண்ணயர்ந்து விடுகிறார் நீங்கள் ஒரு உயர் அலுவலர் .. உடனே “என்ன மிஸ்டர்? ஆபிஸ்ல தூக்கமா?
… தூங்கறதா இருந்தா வீட்டுக்கு போங்க” என்றால்…. பணியாளர் உள்ளுக்குள் குமைவார் . அதையே…. “ என்ன மிஸ்டர் “ஒடம்புக்கு சுகமில்லையா….. இல்லே இராத்திரி சரியா தூங்கலையா” என்று கேட்டால்…. அடுத்த நிமிடமே ஓடிப்போய்
முகத்தை கழுவிக்கொண்டு தெளிவாக இருக்கைக்கு திரும்புவார்..
அரசனின் தண்டனையிலிருந்து
தப்பித்த திருடன் எப்படி தெரியுமா?