Skip to main content

அரசனின் தண்டனையிலிருந்து தப்பித்த திருடன் எப்படி தெரியுமா?

வார்த்தைகள்சாதாரணமாக வார்த்தைகள் என்று சொல்லி விடுகிறோம்ஆனால் அந்த வார்த்தைகளின் தாக்கத்தை உணர்ந்தால்தான்  புரியும்..
                        ஒருவனை மாடு என்றால்…..சுருக்கென்று கோபம் வந்து நான் என்ன மாடா என்பான்.  நீ குருடா? என்றால் எப்படி கோபிப்பான்.   அதையே, நீங்கள் பசு மாதிரி  இருக்கீங்கஎன்றால் அவருக்கு உச்சி குளிரும்.  மாடும், பசுவும் ஒன்றேதான். அதைக் கையாளும் விதத்தில் இருக்கிறது. தே நீ குருடா  என்பதை, “நீங்க கவனிக்கலைப் போலிருக்கேஎன்பது மனதைக் காயப்படுத்தாத வார்த்தையாகும்.ennathuli
                        அலுவலகத்தில் பணியாளார் ஒருவர் சற்றே கண்ணயர்ந்து விடுகிறார்  நீங்கள் ஒரு உயர் அலுவலர்  .. உடனே என்ன மிஸ்டர்? ஆபிஸ்ல தூக்கமா? தூங்கறதா இருந்தா வீட்டுக்கு போங்கஎன்றால்…. பணியாளர்  உள்ளுக்குள் குமைவார் . அதையே…. “ என்ன மிஸ்டர்  “ஒடம்புக்கு சுகமில்லையா….. இல்லே இராத்திரி  ரியா  தூங்கலையாஎன்று கேட்டால்…. அடுத்த நிமிடமே  ஓடிப்போய் முகத்தை கழுவிக்கொண்டு தெளிவாக இருக்கைக்கு திரும்புவார்..  
   அரசனின் தண்டனையிலிருந்து தப்பித்த திருடன் எப்படி தெரியுமா?        
     
            
    



           வீட்டில் வைக்கும் ரசத்தில்  உப்பு சற்று தூக்கல்உடனே  மனைவியிடம் சேஒரு ரசம் வைக்கக்கூட துப்பில்லேஒங்கம்மா  என்ன சமையல் சொல்லிக் கொடுத்தாங்களோ என்று     தாம்-தூம் என்று குதித்தால்அன்று இரவு என்னங்க எனக்கு ஒடம்பு அசதியா இருக்குஎன்பாள் மனைவி…..  நீங்கள் ட்டலைத் தேடி போக வேண்டும் சாப்பிட….motivated articles
                  ஆனால்... என்னம்மா உன்னை எப்பவும் நெனைக்கிற மாதிரி  செய்யறீயேஅப்படின்னு கேட்டு, ரசத்தில் உப்புத்தூக்கலை நாசுக்காக சொன்னால்     எம் புருனைப் போல வருமாஎன்று அடுத்தவீட்டுக்காரியிடம் பெருமிதம் கொள்வாள்.
                        ஒரு குடிலுக்கு திருடப் போகிறான் ஒருவன்….அக்குடிலில் திருவோடுதவிர ஏதுமில்லைதிருடனுக்கு கோபமோ கோபம்…. குடிலில் இருந்த பெரியவரை ஏகத்துக்கும் பேசினான்.. ஆனால் அவர் கோபப்படவில்லை. இவர்  ஒருமாதிரி ஆசாமியோ என முணுமுணுத்துக் கொண்டு வெளியே போக… “டேய் கதவை    மூடிவிட்டு ….நன்றி சொல்லி விட்டு போடா….கடுமையான குரல்அவன் எதிர் பார்க்கவில்லைஅவனும் கதவை மூடிவிட்டு நன்றி பெரியவரேசொல்லி கிளம்பினான்.short stories
                        சிலநாள் கழித்து, திருடனை கைது செய்து அரசனின் முன்நிறுத்தினார்கள். அவன் எவ்வளவோ வாதித்தும்அரசன் ஏற்கவில்லைகடைசியாக ஒனக்கு தெரிந்த யாராவது ஒருநபர் ; உனக்கு உத்திரவாதம் அளித்தால் விட்டுவிடுகிறேன் என்றார்  அக்குடிலில் இருந்த பெரியவரின் ஞாபகம்வர அதனைச் சொன்னான். அரசவைக் காவலர்கள் பெரியவரை அழைத்து வந்து அரசன் முன்னால் நிறுத்த ...அவரும் அவனை எனக்கு தெரியும்எனக்கு நன்றி சொல்லி விட்டு போன நண்பன்தான் என்றவுடன், திருடனை விடுதலை செய்தார்  அரசன்.  திருடனைக் காப்பாற்றிய பெரியவர்  ஒரு துறவி என்பது திருடனுக்கு தெரியாது.
                             வசந்த வார்த்தைகளைக் கையாண்டு  ….வளமாக வாழலாமே.    

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...