ரஜினிகாந்தின் சிறப்பான
பத்து படங்கள் –ennathuli
தளபதி – இந்த படம் 1991-ல் வெளியானது. இதில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் குடிசைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக போராடுவார். பின்னாளில் இவரது வாழ்க்கை மாற்றத்திற்கு தேவா என்ற கதாபாத்திரம் பேருதவியாக இருந்த்து.
ஆறிலிருந்து அறுபது
வரை
இந்த படம்
1979-ம் ஆண்டு வெளியான படமாகும். இந்த படத்தில் ஒரு குடும்பத்தின் மூத்த சகோதர ர் கதாபாத்திரம்
. உடன் பிறந்தவர்களுக்காக உழைத்து அவர்களாலேயே உதாசீனப்படுத்தப்படுகிறார்
முள்ளும் மலரும்
– இந்த படம் 1978-ல் வெளியானது. இந்த படத்தில் ஒரு பெண்ணுக்கு அண்ணனாக, மலையில் இருக்கும்
விஞ்ச் ஆபரேட்டர் கதாபாத்திரம் இவரது வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறார். இந்த
படத்தில் ”நித்தம் நித்தம் நெல்லு சோறு” இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் ” மற்றும்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் போன்ற அருமையான பாடல்கள் படத்துக்கு மெருகு சேர்ப்பவையாகும்.
பாட்ஷா – 1995-ம்
ஆண்டு வெளியான படம். இந்த படத்தில் ரஜினி ஒரு ஆட்டோ டிரைவராக வருவார். ஆட்டோ டிரைவராக
வாழும் போது அவர் தம்பி தங்கைக்காக நேர்மையாக வாழும் கேரக்டர். ஒரு கட்டத்தில்…. வில்லன்களின்
பிடியில் சிக்கும் போது… அவருடைய பழைய வரலாறு ”மாணிக் பாட்ஷா” என்று தெரியும் போது
தியேட்டர் களைக்கட்டியது.j
தில்லுமுல்லு
– இந்த படம் 1981-ல்வெளியானது. இந்த படம்
1979-ல் இந்தியில் வெளியான கோல்மால் என்ற திரைப்படத்தின் தழுவலாகும். இதில் இரட்டை
வேடத்தில் நடித்திருப்பார். ஒரு வேடம் சந்திரன் என்றும் ஒரு வேடம் இந்திரன் என்று கலக்கி
இருப்பார். நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்று நிருபித்து காட்டி
இருப்பார்.
படையப்பா
– இந்த படம் 1999 –ல் வெளியானது படையப்பாவை ஒரு குடும்பத்தினர் அவரது பெரிய வீட்டிலிருந்து
விரட்ட…பின் ஒரு கல் குவாரியில் படிப்படியாக உழைத்து முன்னேறுவதுதான் காட்சி இதில்
நடிகர் திலகமும் நடித்திருப்பது சிறப்பாகும்.
பதினாறு
வயதினிலே – 1977-ல் வெளியானது. இந்த படத்தில் கமலஹாசன் சப்பாணி கேரக்டரிலும், ரஜினி
பரட்டை கேரக்டரிலும், நடிகை ஸ்ரீதேவி மயில் கேரக்டரிலும் தூள் கிளப்பி இருப்பார்கள்
மயிலை ஒரு டாக்டர் காதலித்து ஏமாற்ற…. சப்பாணி கேரக்டர் பாதுகாக்கிறது. இந்த படத்தில்
ரஜினியின் சின்ன சின்ன வில்லத்தன உரையாடல்கள் படத்தை அருமையாக நகர்த்தி விடும் இயக்குநர்
பாரதி ராஜா
ஜானி
– இந்த படம் 1980 –ல் வெளியானது. இந்த படத்தில் நடிகை ஸ்ரீதேவி அருமையாக பாடகியாக வலம்
வருவார். பாடல்கள் அருமையாக இருக்கும்.
முத்து
1995-ல் வெளியானது. ஒரு மிகப்பெரிய பணக்கார ராக பிறந்தும் ஏழை கேரக்டராக வலம் வருவார்.
இந்த படத்தின் கதாநாயகி மீனா. ஒருவன் ஒருவன் முதலாளி, என்ற பாடல் படத்திற்கு மெருகேற்றும்
பாடலாகும்.
அண்ணாமலை 1992 ல் வெளியான படம். நண்பர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை பின்னாளில் பகையாக மாறி ஒருவரை ஒருவர் வெற்றி பெற நடைபெறும் போராட்டம்தான் படம். கடைசியில் நண்பர்கள் இணையும் காட்சி சிறப்பாகும்