இத்தளத்தின் ஆசிரியர் ஆசிரியர் தமிழக அரசு பொருள்இயல்
மற்றும் புள்ளிஇயல் துறையில் பணிபுரிந்து 31-12-2013-ம்
ஆண்டில் ஓய்வு பெற்றவர். நூலாசிரியரின் இளவல் திரு இரவியின் ” மௌனம்” கையெழுத்து பிரதியில் 1982-ல் ஆரம்பித்த எழுத்து பணி…. தாய்மண் இலக்கிய கழகம், உரத்தசிந்தனை, கடற்கரை கவியரங்கம்… சோவியத் பண்பாட்டு கழகத்தின் புஷ்கின் இலக்கிய பேரவை போன்ற பல்வேறு இலக்கிய
அமைப்புகளில் தொடர்ந்து, கவிதைகள் வழங்கி… பரிசுகளும்… பாராட்டு சான்றுகளும் பெறப்பட்டுள்ளது.
முதன்முதலாய் தாய்மண் என்ற பத்திரிகையை வாங்கி படித்த போது அதில் கவிதை வரிகளால் ஈர்க்கப்பட்டு…உடனே அந்த பத்திரிகை ஆசிரியர் திரு.அருமைநாதன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியபோது…அவர் என்னுடைய குடும்பம் மற்றும் எழுத்தார்வத்தை கேட்டறிந்து..அதற்கேற்றவாறு… அவர் எங்கு கவியரங்கம் நடத்தினாலும்..அவ்விடத்தில்..அங்கேயே..அப்போதே.. தலைப்
பு கொடுத்து கவிதை எழுது ஊக்குவித்து மேடை ஏற்றுவார்.
பு கொடுத்து கவிதை எழுது ஊக்குவித்து மேடை ஏற்றுவார்.
பின்பு அதனை பத்திரிகைகளிலும் பதிவு செய்து ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே.
அதே போல என் இளவல் மௌனம் கையெழுத்து பிரதி நடத்தும்போது அது தொடர்பாக உரத்த சிந்தனை உதயம் ராம் அவர்களை அவரது இல்லத்தில் கலந்து பேசியபின…. உரத்த சிந்தனை அமைப்பில் என்னை உறுப்பினராக்கி…பல்வேறு மேடைகளில் பேச வைத்து அழகு பார்த்தவர்களில் அவரும் ஒருவர்.
காலச்சுழலால்…… அரசுப் பணியில் சேர்ந்து விட… எழுத்துப் பணிக்கு தொய்வு ஏற்பட்டது…இருப்பினும். துறையில் ஆண்டு தோறும் நடைபெறும் கலைவிழாவிற்கு…. கவிதைகள் வாசிப்பதும்… கவியரங்கிற்கு… வசனச்செம்மல் திரு.பாக்யராஜ் அவர்களின் படக்குழுவில் முக்கிய அங்கம் வகித்த கவிஞர். குருவிக்கரம்பை சண்முகம் அவர்கள் எனது ஆர்வத்தை மேலும் தூண்டி படைப்புகள் பல உருவாக்க உதவி புரிந்தார்.
ஆதே போல…. பொதிகை தொலைக்காட்சியில் கவிதை வாசிக்க வாய்ப்பு வந்த போது… கவிதை எழுதி அவை சரியான முறையில் உள்ளதா? என்ற ஐயத்தை யாரிடம் கேட்பது என்று யோசித்த போது…நினைவில் வந்தவர் கவிஞர் இளந்தேவன் அவர்கள்.
அவரிடம் கவிதைகள் கொடுத்து அதனை சரிபார்த்து…. நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டி எனது எழுத்தார்வத்தை மெருகேற்றினார்.
ஒரு கவியரங்கத்தில்…. இத்தள ஆசிரியர் ஒரு கவிதையை படிக்க… பலத்த கைத்தட்டல்கள் எழ.. அந்த கவிதைக்கு… பரிசு தரலாம் என்ற அங்கிகாரத்தை அளித்தவர் கவிஞர் நா.காமராசன் அவர்கள்.
இதுபோல கடற்கரை கவியரங்க தலைவர் கவிஞர் பொன்னடியான்… கவிஞர் எஸ்.அறிவுமணி…. அழகிய லைலா பாடல் வாயிலாக பட்டித்தொட்டி எங்கும் புகழ்பெற்ற கவிஞர் பழனிபாரதி… இன்னும் பல கவிஞர்களின் தொடர்பாலும்…. ஊக்கத்தாலும் எழுத்துப்பணி சிறப்பாக நடைபெற்று வருவது மகிழ்ச்சியே.
அமுதசுரபி, கல்கி, பாக்யா, கலைமகள் மற்றும் சிற்றிதழ்கள் பலவற்றில் மரபு கவிதை மற்றும்
புதுக்கவிதைகள் வெளியாகி உள்ளன.
நமது நம்பிக்கை. வளா்தொழில். நமது தொழில் உலகம், ஆளுமைச் சிற்பி, குங்குமம்
மற்றும் புதிய சுற்றுச்சுழல்கல்வி அகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.. ஊக்கப்படுத்தி வரும் அனைத்து பத்திரிகை ஆசிரியர்களுக்கும்
மனதார நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்
மேலும், தமிழ் இந்து நாளிதழில் சிறுவர்களுக்கான மாயாபஜாரில் சிறுகதையும் இடம் பெற்றுள்ளது
பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகளை ஒருங்கிணைத்து, ”அம்மா” என்ற தலைப்பினில் நூலாக அனுராகம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.
தொடர் முயற்சியாக சிறுகதைகள்.காம், எழுத்து.காம் தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் பிரதிலிபி ஆகிய வலைத்தளங்களிலும் கவிதைகள், கட்டுரைகள், மற்றும் சிறுகதைகள் பதிவிடப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர் என்பது நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.
அனைத்து பத்திரிகை ஆசிரியர்கள், வலைத்தள ஆசிரியர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி
மேலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குருப் ஆகியவைகள் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்