எழுத்தாளர்கள் ஒரு பார்வை(WRITERS
BIOGRAPHY) –வெ. ராம்குமார் நூல் நயம்
தமிழகமெங்கும் பரவிக் கிடக்கின்ற பத்திரிகைகளில் ஜோக்ஸ், சிறுகதைகள், ஒரு பக்க கதைகள், கவிதைகள்,
மற்றும் துணுக்குகள் ஆகியவற்றைப் படித்து மகிழ்ந்து சிரித்து விட்டு
போய் விடுவோம். ennathuli
|
எழுத்தாளர்கள் ஒரு பார்வை(WRITERS BIOGRAPHY) –வெ. ராம்குமார் நூல் நயம் |
அந்த துணுக்கு அல்லது ஜோக்கின் கீழே சிறியதாய் அதை எழுதியவரின் பெயர் தொடர்புடையவரின்
பெயர் மற்றும் ஊர் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அவரை நாம்
நேரில் சந்தித்திருக்க மாட்டோம்.
அவரை எதிர்பாராமல் சந்தித்து விட்டாலோ சாதாரணமாக விசாரித்து விட்டு சென்று
விடுவோம். நடிக நடிகையரைப் போற்றும் அளவிற்கு இருக்காது.
அப்படியாகப் பட்ட எழுத்தாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக இயங்கினால்
என்ன நடக்கும். பெரும்பாலும்
இலக்கியவாதிகள் இருவர் சந்தித்து கொண்டாலே அங்கே போர் பதட்டம் போல காணப்படும்.
ஆனால் அப்படி ஏதுமில்லாமல்… ஒருவருக்கொருவர் விட்டு
கொடுத்து. இன்றைக்கு உங்கள் படைப்பு வந்த தா மகிழ்ச்சி எனது வரவில்லை
முயற்சி என்ற நோக்கில் சகோதர உள்ளம் கொண்ட பெரும்பாலான எழுத்தாளர்களின் விவரங்கள் அடங்கிய
சுருக்கமான நூல்தான் இது.Book review
இந்நூல் உருவாகியதே மிகச் சுவாராஸ்யமான ஒன்றாகும்.
வேலூரை இருப்பிடமாக கொண்ட திரு.வெ. ராம்குமார் அவர்கள் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கவில்லையே என்ற
ஆதங்கம் அவரின் காதுகளில் பட்டு அதை எப்படி செயலாக்குவது என்ற சிந்தனையின் வெளிப்பாடாக
”எழுத்தாளர்கள் ஒரு பார்வை” என்ற பதிவாக நாள்தோறும்
ஒரு எழுத்தாளர் என்கிற வகையில் சுமார் 101 எழுத்தாளர்களின் அனுபவம்
எழுத்துக்கள் பத்திரிகைகளில் வெளிவர அவர்கள் எடுத்துக் கொண்ட விடாமுயற்சி, பத்திரிகைகளில் வெளிவர என்ன வழிமுறைகள் பின்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற
சூட்சும ம் ஆகியவற்றை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள முகநூலில் பதிவிட்ட அவர்.
தஞ்சாவூர் சந்திப்பின் போது அத்துணை எழுத்தாள அன்புள்ளங்களையும் நேரில்
கண்டு உவகை அடைந்த போது இதை ஏன் நூலாக கொண்டு வரக் கொண்டு வரக்கூடாது என்ற வினாவின்
விளைவாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது.short stories
இந்நூலில் இடம் பெற்றுள்ள பட்டியலில் முதன்மையாக இடம் பெற்றுள்ள திரு எஸ்.
ராஜேந்திரன் அவர்கள் ஒரு ராணுவ வீர ராக பணியாற்றி பின்பு எல்.ஐ.சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரின் இராணுவ பணியில் ஏற்பட்ட அனுபவங்கள். பத்திரிகைகளில் எழுத்து
துறையில் அனுபவங்கள் ஆகியவற்றை துவக்கமாக கொண்டு பிற எழுத்தாளர்கள் நூறு பேரை உள்ளடக்கியதாக
உள்ளது.
இந்நூல் மெருகேற பெரும்முயற்சியும்
உழைப்பும் நல்கிய திரு..கமலக்கண்ணன் அவர்கள் திரு.ராம்குமாரோடு ஒன்றிணைந்து உருவாக்கி உள்ளார்.
சமீபத்தில் நாகையில் நடைபெற்ற ஐந்தாம்
கூட்டத்தில் இந்நூல் பாவையர் மலர் மாத இதழின் ஆசிரியர் திருமதி வான்மதி அவர்களால் வெளியிடப்பட்டது.
அந்நிகழ்வின் இன்னொரு சிறப்பாக குழுவின் பாரி வள்ளலாக திகழும் திரு.
ஆர். மணிவண்ணன் அவர்கள் குடும்ப திருமண விழாவில்
அரங்கேறியது மிக சிறப்பாகும்.
தற்போது குமுதம் இதழில் கலகல கலப்பூட்டும் எழுத்தாளர்ஈ பி.பி. ரெடியூஸர் திரு ந ந்தகுமார் அவர்கள் மற்றும் இன்னும்
பிற எழுத்துலக சிற்பிகள் இடம் பெற்றுள்ளது மிகவும் சிறப்பாகும்.motivated
இப்படி ஒருங்கிணைப்பட்டு இயங்கி
வரும் தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழும அட்மின்கள் திரு. வைகை
ஆறுமுகம் மற்றும் வெ. பாண்டியன் ஆகியோரின் மிக சிறந்த நிர்வாக
திறனும்… ஆளுமையும் பாராட்டத்தக்கதாகும்.
இந்நூல் பாண்டியன் – வைகை பதிப்பகத்தால் மார்ச் 2019 ல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூல் விலை ரூ.200 பக்கங்கள் 218 ஆகும்.
நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள
பாண்டியன் – வைகை பதிப்பகம்
எண்.1, பாரதிநகர், கழனிவாசல்
காரைக்குடி -630 002
அலைபேசி எண்.9942847919 – 9688303124