Skip to main content

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

 


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம்பூவில்
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்ம்மா ஆனந்தம் (2)
 
வளைந்து நெளிந்து செல்லும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
 
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
                              செந்தாழம்பூவில்
 
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்
 
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
                                             செந்தாழம்பூவில்
 
இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்கம் சிந்தனை
இதழில் வரும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
 
ஓடை தரும் வாடை காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
                                             செந்தாழம் பூவில்
 

 

Comments

Popular posts from this blog

நானெழுதும் பாடல்களில் நீ

 

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

  மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)   ஆத்துரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு   தண்ணிய ஏத்தம் பிடிச்சு இறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)   கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு                             ஏன்றா பல்லைக் காட்றீங்க                           அட வேலையைப் பாருங்க கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு   பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில ...