1/26/2019

எந்த கட்டத்தில் சூரியன் நின்றிருந்தால் என்ன என்ன நண்மை தருவார் பார்க்கலாம் வாருங்கள்


             எந்த கட்டத்தில் சூரியன் நின்றிருந்தால் என்ன என்ன நண்மை தருவார் பார்க்கலாம் வாருங்கள்
       எதிர்காலம் பற்றி  கவலைப்படாதவர் உலகில் எவரும் யாரேனும் இருப்பார்களா?
       எல்லோருக்குமே எதிர்காலம் பற்றிய ஆவலும் பயமும் கலந்தே இருக்கம். ஆனால் எதிர்காலம் என்பதை நாம் கண்களால் காண இயலாது. எதிர்காலத்தைக் காத்து காத்திருக்கையில்நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பொம். எதிர்காலத்தின் மாயஜாலமே அப்படித்தான்.
எந்த கட்டத்தில் சூரியன் நின்றிருந்தால் என்ன என்ன


       அப்படியாக எதிர்காலம் பற்றிய கனவில் இருக்கும் அனைவருக்கும் தங்கள் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள் நண்மை செய்யுமா? துன்பங்கள் குறையுமா? எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று கவலைப்படுபவர்கள் தங்கள் ஜாதக க் கட்டத்தில் சூரியன் எந்த கட்டத்தில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து உங்கள் வாழ்க்கை அமையும்.
           உலகில் சகல உயிரினத்திற்கும் ஒளியை வாரிவழங்கி இயற்கையை பசுமையாக வைப்பதில் இவருக்கு நிகர் இவர்தான். ஆதலால்தான் வருடத்தில் ஓர் நாள் தென்னிந்தியாவில் தைப் பொங்கல் திருவிழா என்றும் வட இந்தியாவில் மகர சங்கராந்தி என்றும் கொண்டாடுகிறார்கள்
        இந்த உலகில் நீலவானத்தில் ஒளிவீம் கதிரவனின் சிறப்பைக் காண்போம். அவருக்கு கோயில் கட்டி வழிபடவும் செய்கிறார்கள். ஒடிசாவில் கோனார்க்கில் சூரியனார் கோயில்… கோவில் நகரமென்று அழைக்கப்படும் கும்பகோணத்திற்கும்…ஆடுதுறைக்கும் இரண்டு கிலோமீட்டருக்கு இடையே ஒரு கோயில் குஜராத்தில்…. காஷ்மீரில் மார்த்தாண்ட சூரியன் என்ற பெயரிலும்… ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளத்தில் அரசவல்லி சூரியனார் என்ற பெயரிலும் ஆட்சி செய்கிறார். அவர் அருளைப் பெற….
            நீங்கள் பிறக்கும் போது ஜன்ன ராசியில் அமர்ந்திருக்கும் சூரியனைப் பற்றியது. கோச்சார அமைப்பில்லை
       மேஷராசியில் இருக்குமேயானால்வாழ்க்கைக்கு தேவையான செல்வ்வளம் உண்டு என்பது கட்டம் காட்டும் சிறப்பு
       நீங்கள் இசையில் அலாதி பிரியரா? இசைஞானி ரசிகரா? தெருமுனையிலிருந்து ஒலிப்பெருக்கியில் இசைநிகழ்ச்சி ஒலிப்பரப்பாகி கேட்டவுடன் ஓடுகிறீர்களா? அப்படியென்றால்ரிஷபத்தில் சூரியன் அமர்ந்திருப்பார்.
       உங்களுக்கு கைவசம் வித்தைகளும்செல்வமும் சேர்ந்தே உள்ளதா? அப்படியானால் மிதுனத்தில் நாற்காலி போட்டு சூரியன் அமர்ந்திருக்கிறார் என்று பொருள் மேலும்…. ஐயா! தர்ம ம் போடுங்கன்னு குரல் கேட்டால் சட்டென பாக்கெட்டில் கையை விட்டு தர்ம்ம் செய்யும் தர்மவான் நீங்கள்.
       சந்திரனின் ஆதிக்க வீடான கடகத்தில் சூரியனா? நீங்கள் செய்யும் செயல்கள் சற்றே தாமதமாகி வெற்றி பெறும். கவலைப்படாதீர்கள்.
       கைவசம் நாட்டியம் இசை கதைவசனம் கவிதைகள் இப்படி  கலைகள் கற்றும்கொஞ்சம் தந்திரத்தனமும் உங்கள் மனதில் இருக்கிறதா? அப்படியானால்சிம்மராசியில் சூரியன் இருக்கிறார் என்று அர்த்தம். எதிரிகள் உங்கள் முன் நிற்கமாட்டார்கள்.
       உங்கள் மனதில் பணத்தை தீவிரமாக தேடும் ஆசை இருக்கிறதா? கூடவே உங்கள் உடல் மென்மையாக பெண்மைத்தனம் இழையோடுகிறதா? அப்படியென்றால்…. கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கிறார்.
       நேருக்கு நேர் மோதிப் பார்க்கலமா? சவால் விடுபவரா? நீங்கள் அப்படியென்றால்.. துலாம் ராசியில் சூரியன் அமர்ந்திருக்கிறார்
       உங்கள் ஏரியாவில்…. அல்லது  நீங்கள் செல்லும் இடமில்லாம் புகழ்மாலை சூட்டப்படுகிறதா? அப்படியென்றால்விருச்சிகத்தில் சூரியன்.
        உங்கள் மனதில் எப்போதும் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு தோன்றுகிறதா? தனுசுவில் சூரியன் நின்றிருப்பதை ஜாதகத்தைப் பார்த்து கொள்ளுங்கள். குறைந்தபட்சம் பெட்டிக்கடையாவது திறந்து வியாபாரம் செய்வீர்கள்
       எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்று முடிக்கும் ஆசாமியா? மகர ராசியில் சூரியன் அமர்ந்திருக்கிறார்.
       கும்பத்தில் சூரியன் என்றால் சன்னை விட உங்களுக்குபென்-சன்தான் கைக்கொடுக்கும் இந்த சன்
       நீங்கள் வசதியானவர்களாக நகரத்தில் வாழ்ந்தாலும்உங்களுக்கு பிடித்த கிராமத்தில் சிறிய அளவில் விவசாயம் செய்து மனநிறைவு பெறுபவரா? அப்படியென்றால் உங்களுக்கு மீன ராசியில் சூரியன் இருக்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.
       சூரியனுக்கு பின்னாலேயே வரும் இன்னும்கிரகங்கள்.
      

2 comments:

  1. Replies
    1. பாதியில் நிறுத்தி விட்டீர்களே

      Delete

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...