தமிழாலே ஈர்க்க
கதிரவனும் மேற்றிசையில்
சாய
–
கன்னியவள் காதலனை
ஆய
மதியொளியும் நிலந்தனில்
பாய
மன்னவன் மார்பில்
சாய
வழிப் பார்த்திருந்தாள்!
விழி பூத்திருந்தாள்!
காலொலி செவிகளில்
கேட்க
காளையவன் தழிழாலே
ஈர்க்க
தோள்வலியோன் இருவிழியாள்
பார்க்க
துடியிடையாள் நிலத்தினை
நோக்க
கன்னம்
சிவப்பேற – இரு
கனியிதழ்களும்
வெளுத்தனவே!
சோலைக்குயில் மரத்தினிலே
இரண்டு அந்தசோடிகளின் காதல்லீலைக்
கண்டு
பாளைதனில் ஒளிந்தனவே
ஒண்டி
அன்பு பெருக்கினாலே
மனம்சுண்டி
நம்மைக்
கவர்ந்தன-உடன்
தம்மை
மறந்தனவே
மாலைமங்கும் பொழுதினில்
மன்னன்! –
முத்தமழைகளைப் பொழந்தாலோ
கன்னல்மாலையென மார்பில் படர்ந்தாள் – காதல்
மயக்கமதில் லீலைகளைத் தொடர்ந்தாள்
ஈருடலும் ஆங்கே – கலவியில்
முத்தமழைகளைப் பொழந்தாலோ
கன்னல்மாலையென மார்பில் படர்ந்தாள் – காதல்
மயக்கமதில் லீலைகளைத் தொடர்ந்தாள்
ஈருடலும் ஆங்கே – கலவியில்
ஓருடல்
ஆனதுவே!
கவிதையை ரசித்தேன்.
ReplyDeleteரசித்தமைக்கு மகிழ்ச்சி
Deleteஅழகான கவிதை...
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாகட்டும்
Delete