7/12/2021

நா. முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

 

ennathuli

நா. முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

 

பாட்டொன்று  வேண்டு மென் றால்

பசிதூக்கம் அறவே மறந்து போவார்

மெட்டினை நினைவில் அசை போட்டு

மெல்லிசை அதனில் கரைவ தற்கே

இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு

இனியதாய் புன்னகை சிந்திடு வாய்!

பூட்டிவைத்த இதயங் கொண்ட பேரும்

பொன்னான உன்பாட்டில் கரைந்த னரே!

 

வெள்ளித் திரையதற்கு பாடல் போதுமென

வான்திரைக்கு வந்ததுவே ஆசை கொஞ்சம்

அள்ளித்தான் அணைத்ததே உன்னு யிரை!

ஆர்தான் பாடிடுவார் அன்னை அன்பினை

அள்ளிதான் குவித்து வைத்தாய் அழகு

ஆபரணமாய் தேசிய விருதுகள் தாமே

வெள்ளித் திரைதான் மறந்தி டுமோ?

வையகம்தான் மறந்திடுமோ உன் பேரை!

 

 

                    ---கே. அசோகன்,

 

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...