வாய் திறந்து பேசாதவன் பேசிய வார்த்தைகள் என்ன
“ஜோசியரே, இந்த குறிப்பை
வைச்சு, குழந்தைக்கு நல்ல
பேரா குறிச்சு கொடு, அப்படியே ஜாதகமும்
கணிச்சு, எதிர்காலத்தையும் சொல்லிடு” என்றார்
கணேசலிங்கம்.
வாய் திறந்து பேசாதவன் பேசிய வார்த்தைகள் என்ன
|
குறிப்பை
பார்த்து, பேப்பரில் ஏதோ..ஏதோ கணக்கு போட்டார். பஞ்சாங்கத்தைப் பார்த்தார். அலமாரியில்
இருந்த எல்லா ஜோதிட சம்பந்தமாக புத்தகங்களையெல்லாம் எடுத்து போட்டு பிரித்து பார்த்து விட்டு, முகத்தை சுழித்தார்
ஜோசியர். ENNATHULI
“என்ன ஜோசியரே! முகத்தை
சுழிக்கிறீர், ஏதாவது கோளாறா”? என கேட்டார் கணேசலிங்கம்.
”கோளாறு இல்லே, இந்த குறிப்பை
பார்த்தா, ஜாதகம் வித்தியாசமா
இருக்கும்போல இருக்கு, பேரே கிடைக்க
மாட்டேங்குது. என்ன பேர் வைக்கலாம்-ன்னுதான் புரட்டி…புரட்டி பார்க்கிறேன். ஒண்ணும் புலப்படமாட்டேங்குதே” என்றார் ஜோசியர்.
” ---ம்ம்” சொல்லுங்க ஜோசியரே”! என்று கணேசலிங்கம் கேட்டவுடனே…. அட! கிடைச்சுடுச்சு, ”ஒங்க குழந்தைக்கு ---ம்ம்”-ன்னு வெச்சிடுங்கோ, குழந்தை ஜாதகம் ஆமோகமா இருக்கும்” என்றார் ஜோசியர்.
”என்ன ஜோசியர! , விளையாடிறீங்களா? யாராவது குழந்தைக்கு ---ம்ம்-ன்னு வைப்பாங்களா,” கேட்டார் கணேசலிங்கம்.
”எனக்கு தெரிஞ்சு, இதுதான் சரியான
பேர், நீங்க வேணுமின்னா, வேற ஜோசியர்கிட்டே கேட்டுக்கோங்க” என்று முடித்து கொண்டார்.
கணேசலிங்கத்திற்கு, குழந்தை பிறந்த சந்தோஷம், பேர் வைப்பதில்
காணாமல் போனது. குறிப்பை எடுத்து
கொண்டு எல்லா ஜோசியர்களையும் பார்த்தார். ஜோசியர்களோ குறிப்பை வாங்கி பார்த்து விட்டு…. ”கையெடுத்து கும்பிட்டு, இந்த ஜாதகக்காரனுக்கு பேர் ஒண்ணும் பிடிபடல” என்றும் ஒதுங்கி கொண்டனர்.
வீட்டுக்கு போய் மனைவியிடம் சொல்ல, ”ஏன்யா, ஒனக்கு கிறுக்கு
பிடிச்சுக்கிச்சா ? என் பையனுக்கு ---ம்ம்”- ன்னு வைக்க சொல்றீயே. அதெல்லாம் ஒண்ணும்
வேணாம். நான் ராசா-ன்னு அழகா கூப்பிட்டுக்கறேன்”. என்றாள்.
குழந்தை வளர்ந்து, பேச ஆரம்பித்தது. ம்ம்”ன்று ஆரம்பித்த்து. பெற்றவளோ எல்லா குழந்தைகளும், அரம்பத்தில் ---ம்ம்-என்றுதானே சொல்லும், போக போக சரியாகிவிடும் என்று விட்டுவிட்டாள்.
ஆனால்,
நன்கு
வளர்ந்த பின்னும்…. –எது கேட்டாலும்……----ம்ம்-ன்ன்னு உதடு
பிரியாமல் சொன்னான். ”என்னடா ராசா, -ம்ம்-ங்கறே, வேற
ஒண்ணும் பேச வரலீயா” கேட்டாள். அதற்கும் …--ம்ம்-தான் பதிலாக
கிடைத்தது.
கணேசலிங்கமோ, ஜோசியர்களிடமிருந்து, இப்போது டாக்டர்களிடம் ஓடினார். ஒன்றும் சரிப்படவில்லை. சரி ஸ்கூல்ல சேர்த்தா, பசங்களோட சேர்ந்து
பேசினா, --ம்ம்-வை தவிர
வேற ஏதாவது பேசுவான்னு, ஸ்கூல்ல சேர்த்தா, அங்கேயும் --ம்ம்-ன்தான்.
ஒன்றும் புரியாமல், தலையை பிய்த்து
கொண்டார்கள். காலம் கடந்தன.
படிப்புக்கு
வழியில்லை. சரி கல்யாணம்
செய்து வைத்தால், மனைவி வந்தால், ஒரு வேளை, மனைவியிடமாவது, வாயைத்
திறக்கலாம் இல்லையா என பெண் பார்க்க திட்டமிட்டனர்.
வாயைத்
துறக்காத பையனுக்கு பொண்ணா? –ன்னு காததூரம் ஓடினார்கள்.
கவலையாக
வீட்டின் முன்னார் உட்கார்ந்திருந்தபோது, கந்தலான
ஆடையணிந்த ஒருவர், ”ஐயா, தண்ணீர்
கொடுங்கள்” என்று கேட்டார்.
”டேய், ----ம்ம்----தண்ணீ கொண்டுவாடா, என்று கணேசலிங்கம் குரல்
கொடுக்க.
---ம்ம்-என்று முணுமுணுத்தவாறே தண்ணீர் கொண்டுவந்தான் –ம்ம்.
பையனை, மேலும், கீழம்
பார்த்து, ”ஐயா, ஒங்களைத்தான்
தேடிவந்திருக்கேன், வாங்க போகலாம்” என
–ம்ம்-மைக் கூப்பிட்டார்.
பையனும், -ம்ம்-ன்றுஅவர் பின்னால்
கிளம்பிவிட்டான்.
கணேசலிங்கத்திற்கு, கோபம் கொப்பளிக்க, மனைவி குய்யோ முறையென புலம்ப, ----எதையும் சட்டைசெய்யாமல் ----ம்ம்- அந்த கந்தலான
ஆடையணிந்த நபர்கூடவே சென்றான். SHORT STORIES
கவலையில்
மூழ்கி தத்தளித்து, ஒருவாறு தெளிந்து, ஆண்டுகள் பலகடந்த
பின்,… அந்த ஊருக்கு ஓரு பெரிய மகான் வருவதாக ஊர்மக்கள் பரபரப்பாயினர்.
அந்தநாளும்
வந்தது.
காலை
புலர்ந்தவுடன், ஊர்க்கோடியில், மகான் வந்து விட்டதாகவும், ஆசிர்வாதம் வாங்க போகலாம் என மக்கள் கூட்டம் சேர, அந்த
கூட்டத்தை விலக்கி விட்டு எட்டிப்பார்த்த , கணேசலிங்க தம்பதியரின் காதுகளில் . ”லோகாக, ஸமஸ்தாக, சுகினோ பவந்து” என்றும்,
”மக்களே, எல்லோருக்கும், எல்லா நண்மைகளும் உண்டாகட்டும் என்ற கணிரென்ற குரலில் ஆசிர்வாதம் வழங்கியது
–ம்ம்—”என்ற பையன்தான்.
.