”ஆ” அம்மாவென அலறினான்”
எதிரே பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவள் காதில் …என்ன விழுந்த த்தோ… ஸ்மார்ட் போனில்… இலாகவமாய் விரல்களால் விளையாடினாள்.
உயிருள்ள வரை கூடவே வரும் உ(ப்பு)மா காரணம் |
அடுத்த ஐந்தாவது நிமிடம்…..
சைரன் ஒலி கேட்டது. ஏதோ, ஆம்புலன்ஸ் என்று பார்த்தால் போலிஸ் ஜீப்
… காலோரம் உரசியபடியே நின்றது.ennathuli உயிருள்ள வரை கூடவே வரும் உ(ப்பு)மா காரணம்
”ஏன்டா ! ராஸ்கல்!” பஸ் ஸ்டாப்பில நிக்குற பொம்பள புள்ளைகளை டீஸ் பன்றீயா? ஏறுடா வண்டியில” மிரட்டினார் சப்-இன்ஸ்பெக்டர்.
”ஸார் ! நா என்ன தப்பு செய்தேன்?”
”ஸ்டேஷனுக்கு வா சொல்றேன்..
கொத்தாக சட்டையைப் பிடித்து ஜீப்பில் ஏற்றினார்.
காலையில்தான் அயர்ன் பண்ண இஸ்திரி கடைக்கார்ரிடம்
கொடுத்து..கையோடு வாங்கி போட்ட ஷர்ட் கசங்கியது. அது கூட பரவாயில்லேshort stories
காரணமே இல்லாமல் மனசைக் கலங்கடித்து விட்டாரே
! காரணம் என்னவாயிருக்கும்… யோசித்து கொண்டிருக்கும் போதே… ”மிஸ், மேடம், வர்றீங்களா?
இந்த ராஸ்கல்தானே!” உறுதி செய்து கொண்டார்.
அப்பொழுதுதான்
முழுதாய் அவளைப் பார்த்தான்.
“ச்சும்மா அரிஞ்சு வைச்ச ஆப்பிளை பிரிட்ஜில் வைத்து அப்போதுதான் எடுத்து வெளியே எடுத்து வைத்த து
போல ஜிவ்வென்றிருந்தாள்.
”ஸார் ! நா எதிர்க்க பஸ் ஸ்டாப்பில நிற்குறபோது… இவர் என்னை கிண்டல் செய்தார்.
என்றாள்.
”ஐயோ, ஸார், நான் அம்மா”ன்னுதான் அலறினேன்.
கால்ல முள் குத்திக்கிச்சி ” என்றான்.
”ஏன்டா! மவுண்ட் ரோடுல ஏதுடா?
முள்… முள்ளாய் நெஞ்சில் குத்தினார்.
ஜீப் கிளம்பும்போது… ”மேடம்! நீங்க ஆட்டோவுல ஸ்டேஷன் வந்திடுங்கோ… ஸ்டேட்மென்ட் வாங்கணும்.
ஸ்டேஸனில் நீளமான பெஞ்சில்… ஒரு ஓரமாய் உட்காரவைத்து… ”ஸாருக்கு… வேலை ஏதாச்சிலும் இருக்கா ? இல்லே இதுதான் வேலையா?”
”ஸார் !, நான் வேலைத் தேடிகிட்டு இருக்கேன்”
”அப்ப, சைட் அடிக்கறதும் ஒரு வேலைங்கறீயா?
எப்படி பேசினாலும்… கேட் போடுற ஆசாமிகிட்ட வய திறக்க கூடாதுன்னு… அமைதியாயிருந்தான்.motivated
stories
”என்ன மௌன விரதமா
,? ஸாமீ வாய துறக்காதோ?”
நினைச்சேன்… காலையிலேயே காலண்டர்ல தேதி கிழிக்கும்போதே…இன்னைக்கு சந்திராஷ்டம்ன்னு ஆதனால கஷ்டமன்னு போட்டிருந்த து.
”நெசமாயிடுச்சே” ஆட்டோவில் வந்திறங்கியவளுக்கு ராஜஉபசாரம்….”வாங்க..மேடம், ஒக்காருங்க….ஏட்டய்யா, ரெண்டு கூல் டிரிங்கஸ்”சொல்லுங்க என்றார்
பராவாயில்லையே!
விசாரணைகு வர்றவங்களுக்கு கூல் டிரிங்கஸ்லாம் தர்றாங்களே!.. நாக்கு அப்போதே அவனுக்க இனித்த து.
கூல்டிரிங்ஸ் வந்த து…
ஸ்டரா போட்டு ஒண்ணு…
சப்-இன்ஸ்பெக்டருக்கு
ஒண்ணு… ஏட்டய்யா அவளுக்கு அன்பாய் வழங்கினார்.
”ஸார் ! மேடம் என்ன கம்ப்ளையின்ட் கொடுத்திருக்காங்கன்னு”
தெரிஞ்சுக்கலமா?
தெரிஞ்சுக்கணுமா
? நீ பஸ் ஸ்டேன்ட் வந்து நின்னது முதல் இப்ப வரைக்கும் விலாவரியா ஒண்ணு விடாமா எழுதிக் கொடுத்துருக்காங்க. நிச்சயமா மூணு மாசம்தான்ஃ
கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தன.astrology
tips
”ஏட்டய்யா ! இந்த ஆளை லாக்கப்ல வை” குரல் கொடுக்க ,ஏட்டு… ”வாய்யா, மன்மத ராசா”
கூப்பிட எழுந்து நடக்க ஆரம்பித்தான்… காலை அழுத்தி வைக்க முடியாமல் சாய்த்து சாய்த்து நடந்தான்.
சாய்வான பார்வை பார்த்து சைட் அடித்த தாக கம்ப்ளெயின்ட் கொடுத்த பைங்கிளி…
”சப்-இன்ஸ்பெக்டர் ஸார், ஒரு நிமிஷம்ன்னு கிட்டே போய் மெதுவாக ஏதோ சொன்னாள்.
”ஏட்டு, அந்த ஆளை வெளியெ விடு…”டேய், இனி அங்கன, இங்கன பார்த்தேன் தொலைச்சிடுப்பூடுவேன்” என்று வெளியே அனுப்பினார்.
வெளியேறும் போது…”பைங்ளி பார்த்த து.
”ஸார், தப்பா நினைச்சுக்காதீங்க, ஏதோ என் காதில தப்பா விழுந்துட்டுது.
”என்ன விழந்த து?”
”ச்சீ! போங்க வெட்கமாயிருகு”
”என்ன !”அம்மா” என்றுதானே அலறினேன்.
அவ காதுல என்னவா விழுந்திருக்கும். அராய்ச்சியில் மனம் அலைபாய் ”மிஸ்டர் இந்த கனவெல்லாம் வேண்டாம்” அதட்டினாள்.
”சரி மேடம், நா கிளம்புறேன்”
”எங்க கிளம்பறீங்க, ஒங்ளால ஆட்டோ செலவு இப்ப போறதுக்கு ஆட்டோ செலவு குடுத்திட்டு வேணா போங்க… வேணுமின்னா ஷேர் பண்ணிட்டு நீங் றங்க வேண்டிய இடத்தில இறங்கிக்கோங்க” என்றாள்.
”கூப்பிட்டவுடன்
வருவது அந்த கண்ணன் கூட இல்லே”
இந்த ஆட்டோதான்” கமெண்ட் அடிக்க
..”களுக்கென சிரித்தாள்.
ஆட்டோவில் இன்னும் இரண்டு பேர் ஏற…
இறுக்கி..நெருக்கி உட்கார்ந்தார்கள்.
”தூரத்தில் ”அம்மா”வென்று அலறியதற்கு பனிஷ்மெட்…
பக்கத்தில உரசுவது பொல உட்காருவதற்கு..”? யோசித்தான். ஆட்டோ பறந்து இறங் வேண்டிய இடத்தில் இறங்கினான்.
மாலை வீட்டில்… டேய், நாளைக்கு நாம பொண்ணு பார்க்க போறோம்”
என்றாள் அம்மா.
மறுநாள் தடபுடலாய் கிளம்பி…
பெண் வீட்டைத் தேடிப் போய்… பெண் பார்க்கும் படலத்தில் பார்த்தால்… ”கம்ப்ளெயின்ட் கொடுத்த பைங்கிளி” ””ஆ”அம்மா”வென அலறினான்.
”என்னடா ஆச்சு ? அம்மான்னு அலறுகிற”ன்னு அம்மா டேடக,
ஒண்ணுமில்லேம்மா
சமாளித்து… ஒரு வழியாய்…சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு… ”என்னம்மா? மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா? ன்னு அவளோட அப்பா கேட்டார்.
”அப்பா ! கொஞ்சம் பேப்பர் கொடுங்க!
” என்றாள்.
”ஐயோ, மறுபடியும் கம்ப்ளயிண்டா? உள்ளுக்குள் கலக்கம்.
பேப்பரில் எழுத ஆரம்பித்தாள். ஐயோ இது ஒரு வகையான கிறுக்குத்தனமோ.. கிறுக்கி பார்ப்பதில் எ ன்ன ஆனந்தமோ கலங்கினான்.useful
tips
ஒரு வழியாய் காகித த்தை கையில் கொடுத்தாள் ..அதில் அவளுக்கு என்னவெல்லாம் தெரியாது என்பதைப் பட்டியலிட்டிருந்தாள்.
”தெரியும்ன் என்பதாய்…கடைசியாய் ஒரே வார்த்தை…அது எனக்கு செய்ய தெரியும் ..உப்புமா! இப்படிக்கு…
உமா” என்ற கையெழுத்திட்டிருந்த து.
”ஐயோ, அப்பா ! என்று இப்போது அலறினான்.
”என்னடா ஆச்சு! அப்பா அலறினார்.
”இல்லேப்பா… பொண்ணுக்கு சமையல் எதுமே செய்ய தெரியாதாம்… உப்புமா மட்டும் நல்லா கிண்டுமாம்” என்றான்.
“உறா…உறா..உறா..”அந்த வீடே அதிரும்படி சிரித்தார் அப்பா. டேய் இது குடும்ப தோஷம்மடா, ஒங் அம்மாவும் இதே கேஸ்தான் கல்யாணத்தப்ப. ennathuli
”சரி கட்டிக்க, இதுதான்டா பேர் சொல்லும் பிள்ளைம்பாங்க” என்றார்.
”இதோ பாருங்க…டிபன் பாக்ஸல உப்புமாதான் இருக்கு… உயிருள்ள வரை…
உமா கட்டிக் கொடுத்த உப்புமாதான்… வாழ்க்கைன்னு ஆயிடுச்சு… அதுக்காக நான் கலங்கிட்டேனா? இல்லேயே, டேக் இட் ஈஸி”
என்று ஜாலியாக பஸ்ஸில் பயணித்தபடி வேலைக்கு போய்க் கொண்டிருந்தான் இக்கதையின் கதாநாயகன்..
சங்கர்.
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்