3/23/2019

வயசுப் பெண்கள் மூக்கில் ஜொலிக்கும் வைர மூக்குத்தி வரலாறு என்ன


 ”அந்த மாமி காதுல என்னமாய் ஜொலிக்குது வைரத்தோடு” என்று வாய் பிளப்பவர்கள் அதிகம். வயசுப் பெண்கள் மூக்கில் மூக்குத்தி வைரமாயிருந்தால் அழகே அழகுதான்.
https://ennathuli.blogspot.com
வயசுப் பெண்கள் மூக்கில் ஜொலிக்கும் வைர  மூக்குத்தி வரலாறு என்ன


                   அப்படிப்பட்ட வைரம் நமக்கு கிடைத்தால் நல்லதுதான் ..ம். பெருமூச்சு விடுவது கேட்கிறது. வைரத்தை வைத்து வாழ்ந்தவர்களும் உண்டு வீழ்ந்தவர்களும் உண்டு அப்படி ஒரு தன்மைக் கொண்டதாகும். அப்படிப்பட்ட வைரம் பற்றி தெரிந்து கொள்ள ஆவலா? மேலும் படியுங்களேன்! ennathuli

                                    உங்கள் கையில் ஒரு கரித்துண்டைக் கொடுத்தால் என்ன செய்வீர்கள்? என்னப்பா கிண்டலா என்று தூக்கி எறிவீர்கள். அதையே வைரக்கல் இத்துணுண்டு கொடுத்தால் கூட பத்திரமாய் பாக்கெட்டில் வைத்துக் கொள்வீர்கள் அவ்வளவு மதிப்பு அதற்கு
 வயசுப் பெண்கள் மூக்கில் ஜொலிக்கும் வைர  மூக்குத்தி வரலாறு என்ன
                     வைரமென்பது…வைரமல்ல அது ஒரு கரித்துண்டு. ஆம். பூமிக்குள் பல்லாண்டுகள் புதைந்து போய்… அது கருப்பாய் கரித்துண்டாய் இருந்து கடைசியில் ஒரு சின்ன வைரத்துண்டாய் வெட்டியெடுக்கப்படுகிறது.
                     கரித்துண்டு எப்படி வைரமாகிறது?
                     பூமியின் ஆழத்தில் வெப்பம் உருவாகிறது. அந்த வெப்பமும் அழுத்தமும் சேர்ந்து கரித்துண்டை வைரமாக்குகிறது.
                     இப்படிப்பட்ட வைரங்கள் திருப்பதி வெங்கடாஜலபதி கிரிடத்திலும் இருக்கும் அரசர்களின் கிரிடத்திலும் இருக்கும். தற்போது அரசர்கள் இல்லாத தால் அவர்களுக்கு இணையான பெரும் செல்வந்தர்கள் தங்கள் பணத்தை வைரத்தில் முதலீடு செய்கிறார்கள்.stories
                     உடனே வைர வியாபாரி ஒருவரை நினைத்து டென்ஷன் ஆக வேண்டாம். அவர் வந்து விடுவார் அவரிடமே வைரம் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்து கொண்டு மேலும் தொடரலாம்.
                                    வைரத்திற்கு தமிழில் ”வயிரம்” என்று அழைக்கிறார்கள். கட்டான உடல்வாகுடைய ஒருவரை வயிரம் பாய்ந்த தோள் என்று பாராட்டுவார்களே அப்படி.

                     அப்படியாகப்பட்ட வைரத்தின் அடர்த்தி எண் பத்து என்று வகுத்துள்ளார்கள்.
                     உலகில் ஆப்பிரிக்காவின் மத்திய பகுதிகளிலும் தென்மேற்கு பகுதிகளிலும் பெருமளவு காணப்படுகிறது. கனடா, இந்தியா பிரேசில் ரஷ்யா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வைரக்கற்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.

                                    வருடந்தோறும் சுமார் 130 மில்லியன் காரட் சுமார் இருபத்து ஆறாயிரம் கிலோ என்கிறார்கள். Useful articles

                                    முந்தைய காலத்தில் இந்தியாவில் மட்டும் கிடைத்த தாகவும் தற்போது தென்னாப்பிரிக்காவில் தொண்ணூற்று ஆறு சதவீதம் வெட்டியெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                    இந்தியாவில் சிற்சில இடங்களில் உதாரணமாக
கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ள சம்பல்பூரிலும் நிஜாம் மற்றும் பல்லாரியிலும் வைரங்கள் கிடைக்கின்றன. பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் வைரங்களை விட ஆற்றுப்படுகையில் கிடைக்கும் வைரக்கற்கள் சிறந்த தாக கருதப்படுகிறது.

                     வைரத்தை தங்கள் விரலில் மோதிரத்தில் பொருத்தி பயன்படுத்துவார்கள். இந்த வைரக்கல் சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் சிலருக்கு பொருந்தாத பலன்களையும் ஏற்படுத்தும் என்றும் நம்ப்ப்படுகிறது.


                                    ஒரு வைரக்கல்லின் மீது லென்ஸ் பயன்படுத்தி சூரியக்கதிர்களைப் பரப்பினால் அது கார்பன்-டை-ஆக்ஸடை வெளிப்படுத்தும் என்பதை அந்தோனி லெவாய்சர் என்பதை நிருபித்தார். அதனைத் தொடர்ந்து ஸ்மிதசன் டெனட் விரிவுப்படுத்தினார்.

                                    மொத்த த்தில் வைரம் முப்பரிமாண தோற்றம் கொண்டது. அதை பட்டைத் தீட்டி மெருகேற்ற ஒளிச்சிதறல் அதிகமாய் கிடைக்கும். அந்த சிதறல்கள் பல்வேறு வண்ணங்களாக காட்சியளித்து நம்மை மகிழ்விக்கும்.
                     அப்படி விலையுயர்ந்த கோஉறினூர் வைரக்கல் இப்போது பிரிட்டிஷ் அரண்மனையில் அலங்கரிப்பதாகவும். அதை இந்தியா நினைவு பரிசாக வழங்கியதாகவும் அறியப்படுகிறது.
                                     என்ன வைரம் வாங்க புறப்பட்டு விட்டீர்களா? சபாஷ்
           
























No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...