Skip to main content

உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

  உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

              ”உயிரே! இந்த கடிதத்தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும்..அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி! ennathuli



 

          காதல் கடித்த்திற்கு ”(பிள்ளையார் சுழி) எதற்கு ? அவரோ கட்டை பிரம்மச்சாரி

          உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக் கொண்டாயே! போதாதா?

          மொட்டை மாடியில் படுத்துஆகாயத்தைப் பார்த்த போது நிலா வட்டமாய் டாலடித்த்து. நட்சத்திரங்கள் கண் சிமிட்டின.

அப்போது… ”அத்தான்..அத்தான்அத்தான்என்ற குல்கந்து ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ஜன்னல் நிலாவாய் தெரிந்து வானத்து நிலா டல்லடித்த்து. நட்சத்திரங்கள் உன் விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்டனவே!love

          கடித்த்தில் ஆசைகளைக் கொட்டி விடத்தான் துடிக்குது மனசுஆனால் இந்த கடிதம் வேறு யார் கண்ணிலேயும பட்டு ஒரு தினுசுஎன்று நினைத்து விடுவார்களோ பயம்தான் கண்மணி!

 

          கவிதையில் இச்.இச்.இச் சத்த்த்தோடு முத்த கவிதை எழுத நான் என்ன முத்து ஆனந்த் சாரா?”

          இல்லை காதல் கடித்த்தையும்நகைச்சுவையாய் எழுத பாக்கியம் ராமசாமி போல லேடஸ்ட் நகைச்சுவை நாயகன் நந்து சுந்து சாரும் அல்ல. நான் டி.வீ சீரியல்களில் வரும் சீரியஸ் ஆசாமி அது ஒனக்கே தெரிந்திருக்கும் அல்லவா?romance mood

          உன்னால் என் தேகம் ஒல்லி குச்சி நரசிம்மன்போல மெலிந்து விட்டது.

          ஒரு நாள் நீ குடிக்க தண்ணீர் தரும்போது உன் கரம் என் கரம் பட்டதால்இந்த தேகம் இப்போது விஜயகாந்த் நரசிம்மா போல தெம்பு ஏறி விட்டதடி கண்ணே!

 

          என்னிதழ்கள் உன்னிதழ்களோடு சேர்ந்து கரும்பாய் தேனெடுக்க துடிக்கிறது. ஆனால்ச்சீ போடாஎன சொல்லி தாவணியை நழுவ விட்டு நழுவி விடுகிறாயே! நியாயமா?

 

          நமது கவிஞர் பாரதிதாசன் காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்..மண்ணில் மா-மலையும் ஓர் கடுகாம்என்று உணர்ந்துதானே பாடி உள்ளார். இளவட்டக்கல் ஒன்றும் இமயமலை அல்ல!

 

          …. அரைத்த மஞ்சள் பூசிய தாலியும் அட்சதை தூவ ஆட்களும் சேர்த்து விட்டேன்ஆட்டோவில் நீ மட்டும் வந்து விடு அன்பே! (பி.கு ஆட்டோவில் அடியாட்கள் அனுப்பி விடாதே)

 

          கடிதத்தைப் படித்தாயா?  காதலர்கள் பெரும்பாலும் அன்பே ஆரம்பித்து..உயிரேஎன்று முடிப்பார்கள்.

           நான் உயிரே ! என ஆரம்பித்து அன்பே! முடித்திருக்கிறேனே. ஆதலால் ஈருயிரும் ஓருயிராய் கலந்து ..மூன்றாம் உயிரைப் படைப்போம்என் உயிர் பறித்த மோகினியே!



Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

  மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)   ஆத்துரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு   தண்ணிய ஏத்தம் பிடிச்சு இறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)   கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு                             ஏன்றா பல்லைக் காட்றீங்க                           அட வேலையைப் பாருங்க கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு   பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில ...

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!