செல்பி
எடுக்கலையோ செல்பி
செல்பி எடுக்கலையோ செல்பி
அக்காலத்தில் தொலைபேசி வைத்திருப்பவர்
வசதியானவர் என்றும் அந்தஸ்து மிக்கவர் என்றும் கருதினோம். ஆனால்,
காலத்தின் சூழலில் அறிவியலின் முன்னேற்றத்தால், அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டு முதலில் பேசுவதற்கு பயன்படுத்தினோம். பின்னாளில்.. அதுவே எல்லா பயன்பாட்டுக்கும் உரியதாக மாறிவிட்டது.
ஒரு அலைபேசி,
முப்பத்து மூன்று பொருட்களை விழுங்கிவிட்டதாக அறிவியலாளர்கள் தகவல் அளித்துள்ளனர்.
நீங்களே யோசித்து பாருங்கள். கைக்கடியாரம் முதல் இத்யாதி அநேக
பொருட்களின் பயன்பாட்டை குறைத்துள்ளது. பாராட்ட வேண்டியதுதான். ஆனால், அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் பயன்படுத்துவது
நம் கையில்தான் உள்ளது.
இரயில் பாதையைக் கடக்கும்போதும்
அலைபேசி….பேருந்தில் ஏறும்போதும், இறங்கும்போதும்
அலைபேசி. அப்படி என்ன அவசரம் இவர்களுக்கு…. ? இவர்கள் இப்படி பேசுவதால் மற்ற பயணிகளுக்கு இடையுறு அல்லவா ஏற்படுகிறது. செல்பி எடுக்கலையோ செல்பி
அலைபேசி ஆபத்துக்கு
உதவும் தோழனாக முதலில் நம் சட்டைப்பைக்குள் நுழைந்த்து. ஆனால்,
ஆபத்துக்கு துணைபோகும் வில்லனாகவம் மாறிவிட்டது அல்லவா? ஆம், காமிரா கொண்டு புகைப்படம் எடுப்பது போய் அலைபேசியின்
வாயிலாக புகைப்படம் எடுக்கிறார்கள். தவறில்லை. பயன்படுத்தி கொள்வது புத்திசாலிதனம்தான்.
ஆனால், அந்த அலைபேசியை எடுத்து கொண்டு அதி உயரத்திலே ஏறி, அண்ணாந்து
பார்த்து முகத்தை அஷ்டகோணலாக்கி ”தன்னையே” செல்பியாக எடுத்து மகிழ்கின்றனர். அத்தோடு விட்டார்களா?
இல்லை. அதனை உடனே முகநூல் மற்றும் சமுகவலைத்தளங்களுக்கு
நண்பர்களுக்கு என அனுப்பி…அது உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவி…
அது விஷமிகளின் கையிலும் சிக்கி சின்னாபின்னாவதைத்தான் விரும்புகிறோமோ? செல்பி எடுக்கலையோ செல்பி
அற்ப சந்தோஷத்துக்காக
நம் வாழ்வை நாம் தொலைக்கலாமோ?
முதலில் நம்மை தொலைக்காட்சி
பெட்டி கட்டிப்போட்டது. இப்போது அலைபேசி.. அதிலும் விதம்விதமாக ஸ்மார்ட்போன் என்று வந்து இளைஞர்களின், இளைஞிகளின் வாழ்க்கையை அல்லவா பதம் பார்க்கிறது.
இதற்கு காரணம் யார்,
நாம்தானே. தேவைக்கும், சேவைக்கும் வாங்கிய அலைபேசி நம்மை அடிமையாக்கி
விடுகின்றதல்லவா. இரு சக்கர வாகனம் ஓட்டுவோர்கள் அலைபேசியை பேசிக்
கொண்டே வாகனத்தை இயக்குகிறார்கள். எதிரே வருபவரும், பக்கத்தில் வருபவர்களுக்கும் அல்லவா அது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
வாகனம் ஓட்டும்போது அலைபேசியை இயக்குபவர்களுக்கு
குறைந்தபட்ச அபராதம் வசூலிப்பதை தவிர்த்து அதிகபட்ச அபராதம் விதிக்கலாம்.
சுற்றுலா தலங்களில்….
ஆபத்தான இடங்களில் ”அலைபேசியில் செல்பி எடுப்பவர்களுக்கு
அபராதம் விதிக்கலாம். கட்டுப்படுத்தா விட்டால், நாளைய சமுதாயத்தின் கண்களுக்கு இது தவறல்ல என்ற எண்ணம்தான் தோன்றும்.
ஆலயங்களில் அங்கொரு
கண்ணும் இங்கொரு கண்ணும் என்பது போல ஆண்டவனிடம் ஒரு கண்ணும் அலைபேசியில் ஒரு கண்ணும்
இருப்பதை தவிர்க்கலாம்
கல்விக்கூடங்களில் அலைபேசி
பயன்படுத்துவதை கட்டாயம் தடைசெய்ய வேண்டும். ”இளைய சமுதாயத்தின்
கூக்குரல் எழுப்புவார்கள். எங்கள் உரிமை என்று. அவர்கள் உரிமை என்பது அடுத்தவர்களுக்கு இடையூறு இல்லாத வரையே. அடுத்தவர்களுக்கு இடையூறு ஆனால். பாதிப்புதானே.
அறிவியலில்
ஆகாயம் தொட்டுவிட்டோம் என்று பெருமைப்பட்டு கொள்கிற அதே வேளையில். அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்கு நாம் அடிமைப்பட்டு விட்டோம் என்பதே இக்கால
நிகழ்வுகள் சாட்சியாக அமைந்து வருகிறது.
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அறிவியலின் அசூரவளர்ச்சியும் நஞ்சாகத்தான்
மாறி வருகிறது என்பதை உணரும் காலம் வரத்தான் போகிறது.
ஏற்கெனவே உணர்ந்திருக்க வேண்டிய விஷயம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி
Delete