வாழ வைக்கும் வார்த்தைகள்
ஸ்ரீஜா பூஜா, என்ற அக்கா தங்கை இருவரும் ஒரு
சிற்றூரில் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர்.
இருவருமே பருவமெய்தி,
திருமணத்திற்காக காத்து இருந்தனர்
அக்கா ஸ்ரீஜா படிப்பில் கெட்டி, பூஜா, சுமார்தான், இருந்தாலும்
சுறுசுறுப்பானவள்.. இருவருக்கும் வரன் பார்த்தார்கள்.
என்ன ஆச்சர்யம், இருவருமே ஒரே தெருவில் வசிக்கும் இருகுடும்பத்தாரின் பிள்ளைகளுக்கு
வாழ்க்கைப்பட்டனர்.. புகுந்த வீட்டிற்கு போன
பின்……பூஜாவின் கணவர்;, என்ன
பூஜா , வீட்டிற்கு
ஏதேனும் தேவையா, என்று கேட்டார்;.
“ஆமாங்க, மஞ்சள் பொடி வாங்கி வாருங்கள் என்றாள்.
மூத்தவள் ஸ்ரீஜா வீட்டில், அவள் அத்தையிடம் ” ஆத்தே, நம்ம வீட்ல துவரம் பருப்பு இல்லே, கடுகு இல்லே, மிளகு இல்லே. ஓண்ணுமே இல்லே” என்று சொன்னாள்.
மூத்தவள் ஸ்ரீஜா வீட்டில், அவள் அத்தையிடம் ” ஆத்தே, நம்ம வீட்ல துவரம் பருப்பு இல்லே, கடுகு இல்லே, மிளகு இல்லே. ஓண்ணுமே இல்லே” என்று சொன்னாள்.
அவள் அத்தை என்னடி எப்பவுமே இல்லேதானே, சில வார்த்தைகள் வாழவைக்கும் சில வார்த்தைகள் தாழ வைக்கும் என்றதற்கு இல்லாததை “இல்லை”ன்னுதானே சொல்ல முடியும் என்று மாமியாரை வார்த்தைகளால் மடக்கினாள். சில ஆண்டுகளுக்கு பிறகு, பூஜாவின் கணவன், வியாபாரத்தில்
முன்னேறி, அந்த தெருவிலேயே அரண்மனை போல ஒரு வீட்டைக் கட்டி குடியேறினான்.
ஆதற்கு ஸ்ரீஜாவின் குடும்பத்தையும் அழைத்தனர் ;. வீட்டைச் சுற்றிப் பார்த்த
ஸ்ரீஜாவுக்கு உள்ளுர பொறாமைத்தீ எரிய ஆரம்பித்தது. அவளுக்குள் பலமான யோசனை,
எப்படி தங்கை வீட்டுக்காரர்; வசதியானார் இவ்வளுவு
பெரிய அரண்மனை மாதிரி வீட்டைக் கட்டினார் ; இதை தெரிந்துக்
கொள்ள வேண்டுமே என்ன வழி என்று யோசித்து கடைசியில் ஒரு சாதுவை சந்தித்தாள். ”சாதுவிடம் விவரம்
சொன்னாள்” அப்படியா, நாளைக்
காலையில் உன் தங்கையையும் கூட்டிவா. அவளிடமிருந்தே அந்த விவரத்தை சொல்ல வைக்கிறேன்
என்றார்
அதைப்போலவே மறுநாள் அக்காவும்,,தங்கையும் சாதுவை சந்தித்தார்கள். சாதுவின் முன்னால் அக்காவும்,தங்கையும் அமர்ந்தார்கள்.
முதலில் ஸ்ரீஜாவிடம் கேள்விகளை கேட்டார்; சாது. “ஒன் வீட்டுக்காரா; திறமைசாலியா?” “இல்லை” சுவாமி என்றாள். ஓனக்கு குழந்தை இருக்கா? “இல்லை” சுவாமி உனக்கு வேளைக்கு பசி எடுக்கிறதா “இல்லை” சுவாமி
ஓன் மாமியார் ; ஒனக்கு அணுசரணையாக இருக்கிறாளா? “இல்லை” சுவாமி என்றாள். அவளிடம் கேள்விகைள முடித்துவிட்டு, பூஜாவிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார் சாது- “ஒன் வீட்டுக்காரா; திறமைசாலியா?” “ஆமாம்” சுவாமி என்றாள். ஓனக்கு குழந்தை இருக்கா? “ஆமாம்” சுவாமி உனக்கு வேளைக்கு பசி எடுக்கிறதா “ஆமாம் “சுவாமி
ஓன் மாமியார் ஒனக்கு அணுசரணையாக இருக்கிறாளா? “ஆமாம்” சுவாமி என்றாள்.இப்படியாக “ஆமாம்” என்ற வார்;த்தைகளே பதிலாக வர...வர …. சாது மௌனமாக ஸ்ரீஜாவைப் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் புன்னகைத்தார்.
தங்கையின்
முன்னேற்றத்திற்கான காரணம் எதுவென்று ஸ்ரீஜாவிற்கு புரிந்தது.

No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்