1/18/2019

உம்.மூச்சே விடமாட்டேங்கிறாங்க மர்மமாகவே இருக்கு


                                                               
               
                உம்....மூச்சே விடமாட்டேங்கிறாங்கமர்மமாகவே இருக்கு
                               
                              
என்னப்பா, ஒங்க கடைல என்னதான் நடக்குது? அப்படின்னு..... அந்த கடைல வேலை செய்யற யாருகிட்ட கேட்டாலும், உம்....மூச்சே விடமாட்டேங்கிறாங்கமர்மமாகவே இருக்குஅக்கம்பக்கத்து பெரிய கடைக்காரர்களின் ஆதங்க பேச்சு 
   உம்....மூச்சே விடமாட்டேங்கிறாங்க” மர்மமாகவே இருக்கு
               
                  பரபரப்பான வியாபார நிறுவனங்கள் அதிகமுள்ள அந்த தெருவில், எல்லா கடைகளும் திறந்த பின்பு தாமதமாய் ஒன்பது மணிக்குத்தான் திறப்பார்கள். ஆனால், பணியாளர்களும், தொழிலாளிகளும் காலை எட்டு மணிக்கே வந்துவிடுவார்கள். யாரும் கண்ணுக்கு தென்படமாட்டார்கள். அந்த கடை முதலாளியும் எட்டுமணிக்கே வந்து விடுவார்.
           ஊழியா்களை, பணியாளர்களை நம்ம கடைக்கு வந்திடுங்குப்பான்னு கூப்பிட்டால்...உறிம்..உறிம் வரமாட்டார்கள். அப்படி என்னதான் மாயமந்திரம் பண்ணி வைச்சுருக்காரோ? தெரியவில்லை என போட்டியாளர்கள் பேசிக் கொள்வார்கள்.
           அந்த கடையின் ஊழியா்கள், பணியாளர்களிடம், வேலைக்கு சேரும்போதே, ஒரு படிவம் தந்து, அதில் தினமும் காலை எட்டு மணிக்கே வந்து விடுவோம்.... வந்து முதலாளி என்ன சொல்றாரேர... அதை அப்படியே செய்கிறோம்  நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை... வெளியாட்களிடமோ, வேறு வியாபார முதலாளி, தொழிலாளிகளிடம் சொல்ல மாட்டோம் என உறுதிமொழி வாங்கிக் கொள்வார்கள்.
           வியாபாரத்திற்கு காலை ஒன்பது மணிக்கு திறந்து இரவு ஒன்பது  மணிக்கே ,மூடிவிடுவார்கள். மற்ற கடைகளெல்லாம், பதினோரு மணிக்குத்தான் மூடுவார்கள்.  ஆனால், மற்ற கடைகளைவிட வியாபாரம் ஆமோகமாய் நடந்து, முண்ணணியில் இருக்கும்.
           அந்த கடையில் வேலை செய்த ஊழியா்கள், பணியாளர்கள் நிறைய பேர் தனியாகவே தொழில் தொடங்கி, , பழைய முதலாளி ராமசுந்தரத்தின் பெரிய அளவிலான புகைப்படத்தை கடையின் கல்லா பெட்டியின் பின்னால் மாட்டிவைத்து, வணங்கி விட்டுத்தான் வியாபாரத்தையே ஆரம்பிப்பார்கள்.
               
                          அப்படி என்னதான் செய்கிறார்... அந்த கடை முதலாளி ராமசுந்தரம். அவர் . பத்தாம் வகுப்புதான் படித்திருந்தார். ஆனால்... பழுத்த அனுபவசாலி
           காலை எட்டு மணிக்கு வருகிறவா், கடையின் மொட்டை மாடியின் கூட்ட அரங்கில் அமர்ந்து விடுவார். ..  
               மேனேஐர், எடுபிடி என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா... பணியாளர்களும்; அமர்ந்திருப்பார்கள்.
              .. இராமசுந்தரம், யதார்த்தமாகவும், சகஐமாகவும், ”என்னப்பா, வீட்டுல எல்லாரும் சௌக்கியமா? ஒங்களுக்கு உடம்பு ஆரோக்கியமா இருக்கா?  என ஆரம்பித்து.... .. ஒவ்வொரு நாளும்வேறு...வேறு வியாபார வெற்றியாளரின் வரலாற்றை  எளியமையாக  எடுத்து சொல்லுவார்.
                 வியாபார விருத்திக்கு ஆலோசனைகள் கேட்டு குறித்து வைத்து கொள்வார்.  வியாபார விருத்திக்கான சிறந்த ஆலோசனைக்கு, பரிசு தொகையை, அப்போதே வழங்கி விடுவார்.
                  நான் இந்த கடைக்கு முதலாளியாக இருக்கலாம். ஆனால், உண்மையான முதலாளி  வாடிக்கையாளர்கள்தான். அவர்களின் திருப்திதான், நமது முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகள்.
            அதனால், வாடிக்கையாளர்கள் திருப்திபடும் வகையிலும், மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.  ஒரு வாடிக்கையாளரை நீங்கள் மரியாதைக் குறைவாக நடத்தினால், அந்த வாடிக்கையாளர், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்தில், நமது கடையில் நடத்திய விதத்தை மிகைப்படுத்தி கூறிவிடுவார்கள்.  ஒரு வாடிக்கையாளரை இழந்தால், அது நூறு வாடிக்கையாளர்களை இழப்பதற்கு சமம் என்று வாடிக்கையாளர்களிளடம் நடந்துகொள்ள வேண்டிய முறைகளை விளக்குவார். இது காலையில் நடக்கும்.   
              இரவிலோ... வியாபாரம் நல்லமுறையில் நடத்தி கொடுத்ததற்கு அனைவருக்கும் நன்றிஎன்று சொல்வதோடு.... யாருக்காவது... தனியா தொழில் துவங்கணும்ன்னா.... நாளையில் இருந்து வேலைக்கு வரவேணாம்... என் வீட்டுல நேர்ல வந்து பாருங்கோ.. பணஉதவியும் செய்யுறேன்  என முடித்து கொள்வார்.  இந்த அன்றாட நடைமுறைதான்  அவரின் அமோக வியாபாரத்திற்கான  மர்மமாகும்.
                                          


No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...