நல்லா இருந்த நூல்கண்டும்
சிக்கலாக்கிய மியூசிக் டீச்சரும்
“சின்ன வயதில் இருந்தே இசையில்
அலாதி பிரியம் இருந்த து. கூடவே இளையராஜா .இசையை எங்கு கேட்டாலும் மெய்மறந்து நின்று விடுவான் சங்கர்.
நல்லா இருந்த நூல்கண்டும் சிக்கலாக்கிய மியூசிக் டீச்சரும் |
இசையை முறைப்படி கற்றுக்
கொள்ள வேண்டுமென்ற ஆசை…அது நிறைவேறாமலேயே போய்விட்டது.
தனக்குத்தான் இப்படி ஆகிவிட்டது தன் பிள்ளைகளுக்காகவது இசையைக் கற்றுக்கொடுத்தால்
என்ன ? என்று யோசித்தான்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன்,
தன் இரண்டு பிள்ளைகளையும் கூப்பிட்டு, ”நான் ஒங்களை
மியூசிக் கிளாஸ் சேர்த்து விடறேன்” நல்லா கத்துக்கணும்.
இந்த அப்பாவாடோ ஆசையை நிறைவேற்றணும் என்று கேட்டுக்கொண்டான்.
ஒன்றுமறியாத வயதில்
இருந்த பிள்ளைகள் இருவரும் தலையாட்டிக் கொண்டனர்.
மறுநாள், மியூஸிக் பள்ளிக்கு கூப்பிட்டு போனான்.
ஐயா, இந்த ஏரியாவூலேயே, நீங்கதான் மியூஸிக்ல நல்ல திறமைசாலின்னு
சொன்னாங்க, ஆதனால எம் பிள்ளைகளுக்கும் மியூஸிக் கத்துக் கொடுங்கோ
” என்றான் சங்கர்.
மியூஸிக் டிச்சரோ…
”அப்படியா ? ”ஒன் இரண்டு பிள்ளைகளுக்கும் மியூஸிகல
ஆர்வம் இருக்கா… இல்லே வேற ஏதாச்சிலும் ஆர்வம் இருக்கா-ன்னு முதல்ல தெரிஞ்சக்கணும்.
ஆர்வமில்லாதவங்களை மியூஸிக்கல
சேர்த்துட்டு… ஒங்களுக்கும் பண நஷ்டம், எனக்கும் நேரம் வீணா போயிடும்” ஆதனால ரெண்டு பேருக்கும்
ஒரு டெஸ்ட் வைக்கணும். ஆதனால நாளைக்கு கூப்பிட்டு வாங்க என்றார்
மியூஸிக் டீச்சர்.
மறுநாள் மாலை..
மியூஸிக் கிளாஸ் டீச்சர் முன்னிலையில் இரண்டு பிள்ளைகளும் அமர்ந்தனர்.
அவர்கள் கையில் ஆளுக்கொரு ”நூல் கண்டினை
”கொடுத்தார். அது சிக்கலான நூல்கண்டு.
”பிள்ளைகளா…
இந்த நூல்கண்டு சிக்கல்களை பிரிக்கணும். ஆனா நுலை
அறுந்து விடாம பிரிச்சி யார் முதல்ல தருவீங்களோ. ஆவங்க மியூஸிக்
கிளாஸ் சேரலாம் என்று கன்டிஷன் போட்டார்.
”பெரியவன்
”நூல் கண்டினை வாங்கி திக்குதெரியாமல் திண்டாடி, அதனை அறுத்து” ஒரு வழி பண்ணிவிட்டான். சிறியவனோ நின்றுநிதானமாக , ”சிக்கல் எங்கு ஆரம்பிக்கிறது,
என்று ஆராய்ந்து, அறுக்காமல் பிரித்து கொடுத்தான்.
”சிறியவனை நாளை
முதல் மியூஸிக் கிளாஸ் வரலாம் என்றார்.
”இப்போது
”சங்கருக்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்து ”ஸார், மியூஸிக் கிளாஸ்க்கும், சிக்கலான
நூல்கண்டுக்கும். என்ன ஸார் சம்பந்தம், இதுக்கும்..அதுக்கும் முடிச்சு போட்டு ஒண்ணும் புரியலேயே
என்றான்.
”மியூஸிக் என்பது
ஒரு நுட்பமான கலை, அதில் ஆர்வமும் மிகுந்த பொறுமையோது கவனம் செலுத்துவம்
அவசியமான ஒன்று” சிக்கலான நூல்கண்டினை பிரிப்பது என்பது நிறையபேருக்கு
பொறுமை இருக்காது, ..நூலினை அறுத்து உடன் முடித்து விட நினைப்பார்கள்.
அதனால்தான் ரெண்டு பிள்ளைகளையும் சோதித்தேன். இதுதான்
நான் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடைமுறை என்று முடித்தார்.
”சரிங்க ஸார், சிக்கலான நூல்கண்டு கடைல எங்கேயாவாச்சும்
விக்குதா? இல்லே”அப்படின்னு கேட்டவுடன்.
சிரித்து கொண்டே ”நேத்து ராத்திரி நான்தாம்பா , புது நூல்கண்டுகளை வாங்கி
வந்து சிக்கல்களாக்கினேன் என்றார்.
அப்போதுதான்
”பிள்ளைகள் மேல் நமது ஆசைகளை திணிக்க கூடாது என்ற ஞானோதயம் சங்கருக்கு
ஏற்பட்டது.
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்