மரத்தின் சுயநல ஆசையால்
என்ன நடந்த து?
பசுமைமிகுந்த லையில்…அழகாய்…உயரமாய்..செழிப்பாய் வளர்ந்திருந்த
ஒரு மரத்திற்கு ஏனோ வெறுப்பு தோன்றியது.
அது கடவுளிடம் இவ்வாறு முறையிட்டது
”இந்த பூமியிலிருந்து என்னை பிரித்து விடு,
அப்படி பிரித்து
விட்டால், மனிதனுக்கு உதவியாய் இருப்பேன். இந்த பூமியில் உபயோகமில்லாமல் இருப்பதற்கு பயனுள்ள வகையில்
இருக்க உதவி
செய் கடவுளே” என முறையிட்டது.
மரத்தின் சுயநல ஆசையால் என்ன நடந்த து |
”ஏ
மரமே, நீ இங்கிருப்பதுதான் மதிப்பு.
நீ காற்றை பரவ செய்கிறாய். நிழல் தருகிறாய்
ஆதலால் இங்கிருப்பதில் உனக்கு என்ன பிரச்சினை பூமியிலிருந்து விலகி விட்டால், மனிதர்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்று
தெரியாது, விடலாம். உன்னை துண்டு
துண்டாக வெட்டி அடுப்பில் வைத்து கூட எரிக்கலாம்.
ஆதலால் பூமியிலேயே
இருப்பதுதான் நல்லது”
என்று அறிவுரை
கூறினார்.
. ”வேண்டாம்
கடவுளே, என்னை எடுத்து அதில்
பயனுள்ள பொருளாக
செய்தால், மனிதருக்கு உதவியாக இருக்கலாம்
என்றுதான் ஆசைப்பட்டேன்”
என்றது மரம்.
”இல்லை
மரமே, மனிதர்கள் சுபாவம் மாறிக்
கொண்டேயிருக்கும், சில
நேரத்தில் சந்தோஷத்தில் தூக்கி
வைத்து கொண்டாடுவார்கள்.
சில நேரத்தில்
கோபத்தில் தூக்கியெறிந்து விடுவார்கள், ஆதலால் யோசிப்பதற்கு
நேரம் தருகிறேன்”
என்றார் கடவுள்.
”வேண்டாம்
கடவுளே, என்னை நீக்குவதற்கு ஏற்பாடு
செய்யுங்கள்” என்று
மன்றாடியது.
”அப்படியே
ஆகட்டும்” என்றார் கடவுள்.
கடவுளின்
ஆசிப்படியே, மரத்தினை
ஒரு தச்சன் தன்னுடைய கோடாரியால் வெட்டி
வீட்டிற்கு எடுத்து
சென்றான்.
வீட்டில்
அந்த மரத்தினை
பலகைகளாகவும், துண்டுகளாகவும் அறுத்தான். அழகான வேலைப்பாடுள்ள ஒரு நாற்காலி செய்தான்..
நாற்காலியாக மாறிய பின்பு
, அரசவையில் இருந்தால், அதில் ” இராஜா அமருவார். இந்த நாற்காலியை கொடுத்தால் நமக்கு பரிசுகள் தருவார்.
நமக்கும் நாம் செய்த நாற்காலியில் ராஜா அமர்ந்துள்ளார் என்பதே நமக்கு மிக
பெருமையாக இருக்குமே”
என எண்ணினான்.
அதை உணர்ந்த நாற்காலி.
”ஆகா அரசவைக்குள் போகப்போகிறோம். ராஜாவின் சிம்மாசனமா மாறப்போகிறோம் என்ற சந்தோஷம்
அதனை திக்குமுக்காட வைத்தது. அதன் எண்ணத்திற்கேற்ப, அந்த
நேரத்தில், அந்த நாட்டின் இளவரசரின்
பட்டாபிஷேக விழா
ஏற்பாடாகியிருந்த்து.
அரண்மனை
பணியாளர்களிடம் விவரத்தைச் சொல்ல… தச்சனிடமிருந்த அழகிய
வேலைப்பாடுள்ள நாற்காலியை
எடுத்து சென்றார்கள். இப்போது,
அந்நாட்டின் அரசவையில் இருந்த்து. அதில் கம்பீரமாக
அமர இளவரசர்
தன்னை தயார்படுத்திக் கொண்டு அமரும் வேலை
நெருங்கியது.
அப்போழுதான்,
அந்த எதிர்பாராத
சம்பவம் நிகழ
துவங்கியது.
அந்நாட்டு
மந்திரியின் மகன்,
”இளவரசரிடம், நீ
முடிசூட்டிக் கொள்ளக்கூடாது.
இந்த சிம்மாசனம்
எனக்குத்தான். முடிந்தால்
என்னுடன் மோதி
ஜெயித்து விட்டு
உட்காரலாம்” என
ஆவேசமாக குரல்
கொடுத்தான்.
இளவரசர், அங்குள்ள காவலர்களுக்கு ”மந்திரி
மகனை கைது
செய்யுங்கள்” என
ஆணையிட்டார். எவருமே
இளவரசரின் ஆணைக்கு
அடிபணியவில்லை. எல்லோருமே
மந்திரியின் ஆட்களாகவே
இருந்தனர்.
இளவரசருக்கும்,
மந்திரி மகனுக்கும்
மல்யுத்தம் நடந்த்து. மல்யுத்த த்தின்
உச்சகட்டத்தில் அடங்காத
வெறியோடு மந்திரி
மகன், சிம்மாசனத்தை தலைக்கு மேலே
தூக்கி இளவரசன்
மேலே வீசியெறிந்தான்.
இளவரசன் லாகவமாக
தப்பினான். அந்த சிம்மாசனம் கீழே
விழுந்து சுக்கல்
நூறாய் நொறுங்கியது.
சுக்கல் நூறாய்
நொறுங்கிய சிம்மாசனத்தின் ஒரு பகுதி ”கடவுளே, மறுபடியும் என்னை
அந்த மரமாகவே
மாற்றி விடு”
என்று கடவுளிடம்
முறையிட்டது.
அதற்கு கடவுள் ” நீ மரமாக இருந்தபோது எல்லோருக்கும் பொதுவாக இருந்த்தால்
நிம்மதியும், சந்தோஷமும்
அடைந்தாய். ஆனால், நாற்காலியாக மாறிய
பிறகு சுயநல
எண்ணத்தோடு, தனிப்பட்டவருக்கு சொந்தமானதால் நீ துயரப்படுகிறாய் என்று
கடவுள் சொன்னார்.
இதுதான் பொதுநலத்திற்கும்
சுயநலத்திற்கும் உள்ள வேறுபாடு என்பதை இப்போழுதாவது உணர்ந்தாயே” என்று சொல்லி மறைந்தார்.
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்