1/20/2019

பேஷன் டிசைனர்(FASHION DESIGNER)


                  பேஷன் டிசைனர்
என்னாப்பா, “நம்ம கம்பெனிக்கு வெளிநாட்டுல இருந்து புதுசா மெஷின் வரப்போகுதாம், அது வந்தா அதுவே அளவு எடுத்து, அதுவே தைச்சுக்குமாமேஅப்படிப்பட்ட மெஷின் வாங்கத்தான் நம்ம எம்.டி.யியோட பையன் வெளிநாடு போய் இருக்காராம்.

பேஷன் டிசைனர்

                          
நாமத்தான் அவா; ரை சுற்றி பார்க்க போய் இருக்கிறதா நெனைச்சுக்கிட்டிருக்கோம்.  அவர் ர் திரும்பினதும்நம்ம வேலைக்குத்தான் வேட்டு.கார் மென்ட் தொழில் நிறுவன வாசலில் தொழிலாளர்கள் கூட்டமாய் நின்று விவாதித்தனர்
            அந்த நேரத்தில் எம்.டியின் கார்  கம்பெனி கேட்டுக்குள்  நுழைய,  நீங்க எங்க வயித்துல அடிக்காதீங்க, ஒங்க பையன்  மெஷின்ன வாங்கி வருகிறாமே வெளிநாட்டுல இருந்து, அது வந்தா…. எங்க வேலை போய்….குடும்பம்நடுத்தெருவுல வந்துடும்நியாயமா நீங்க செய்யறதுகோரஸாக கோஉமிட்டனர்

அதெல்லாம் இல்லேப்பா, . வெளிநாட்டுல படிச்ச பிரண்ட்ஸ்ஸை பார் க்கத்தான் போய் இருக்கான்பா...மெஷி ன் வாங்கறதுக்கு இல்லேப்பா என்றார்
            …. நீங்க பொய் சொல்றீங்கஎன  ஒரு குரல் சப்தம் போட்டது
              ”இதோடா! வியாபாரி மகன் சும்மாவா வெளிநாடு போவான்… நம்மகிட்டேயே காதுகுத்தறாரு” இன்னொரு குரல்
              ”எம்.பி.ஏ படிக்க வைச்சுட்டு….. வியாபாரம் பார்க்காம பிரண்ட்ஸை பார்க்க போனாறாம்” இந்த சால்ஜாப்பெல்லாம் நம்ம கிட்ட வேணாம்” இப்படி ஒரு குரல்
            ஆளுக்கொருவராய் கோஉமிட்டனர்
     ஆமாம்யா  பொய்தான் சொல்றேன். குடும்ப வியத்தை உங்களுக்கெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லைஒழுங்கா வேலைய பாருங்க இல்லே கம்பெனியை லாக்-அவுட் பண்ணிடுவேன் மிரட்டினார்.
            ”எங்களை மீறி மூடிடுவீங்களா. மூடுங்க பார்க்கலாம்” கேட்டின் முன் ஐம்பது பேர் படுத்துக் கொண்டனர்.
            சரி! சரி! சண்டை எதுக்கு ? . “ஓங்க யூனியன் லீடர என் சேம்பருக்கு வரச்சொல்லுங்கஅவர் கிட்ட பேசிக்கிறேன் என்று ஆபிஸ் ரூமுக்குள் நுழைந்தார்.
                சேம்பரில் , யூனியன் லீடரிடம், மெஷின் வாங்க போகல, அவன் பெர் சனல் வேலையா போயிருக்கான் என்று பலமுறை சொல்லியும் யு+னியன் லீடரின் …. முகத்தில் திருப்தி தென்படவில்லை.
                                                அவருக்கு எப்படி புரிய வைப்பது நீண்ட நேரம் யோசித்தார்.
                  யோசனைக்கு பிறகு…  சிவானந்தம், “நாளை மறுநாள் என்கூட ஏர் போர்ட்  வா , இது விஉயமா என் பையனை பாரு ..விஷயத்தைக் கேட்டு தெரிஞ்சுக்கோ” என்றார்.
                        யூனியன் லீடருக்கு சந்தோஷம். ”நம்மள கார்ல ஏர்போர்ட்டுக்கு கூட்டிட்டு போறார்ன்னா… அவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காரு” என்று  மனதிற்குள் மகிழ்ச்சி கொண்டார்.
                 ர்போர்ட் உள்ளேயிருந்து நுழைவாயிலை நோக்கி அவரது  மக்ன   வெளியே வந்துக் கொண்டிருந்தான் வெறுங்கையாய் இருந்தான்
.  புது மெஷி ன் எதுவும் கொண்டு வந்தததாய் தெரியவில்லை…..
  ஒரு வேளை லக்கேஜ் பின்னால் வருமென்று காத்திருந்தார் யூனியன் லீடர்.
ஆனால் லக்கேஜ் வெறும் சூட்கேஸ்கள் மட்டும் வந்தன. மெஷின்கள் எதுவும் காணவில்லை.
                ஆனால், கூடவே, அழகான வெளிநாட்டு பெண் ஒட்டிக் கொண்டு நடந்து வந்தாள்.
                டாட், “இதுதான் ஒங்க மருமகள்…..எப்படிப்பா என் சாய்ஸ் என கேட்டதுடன், இனிமேல் நம்ம கம்பெனியோட புது பேன் டிசைனர் இவதாம்பா, ஓ.கே.வாமூச்சுவிடாமல் பேசி முடித்தான்.
                  புது பேன் டிசைனர் என்பதை யாரோ புது மெஷின் என்று கிளப்பி விட்ட புரளி என்று புரிந்தது யூனியன் லீடருக்கு.                                 
                                                                                                               


No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...