1/23/2019

விக்னேஷ் கேட்ட கேள்வி எடிட்டரின் பதில் என்ன “ஸார் அந்த கம்பெனி, அதன் முதலாளி பற்றி ஆஉறா, ஒகோ” என தாறுமாறா புகழ்ந்து நம்ம பத்திரிகைல” எழுதி இருக்கே அது உண்மையா” என நேருக்கு நேராக கேட்டான் புதிதாய் நிருபர் ; வேலைக்கு சேர்ந்திருந்த விக்னேஷ்


விக்னேஷ் கேட்ட கேள்வி  எடிட்டரின் பதில் என்ன
ஸார் அந்த கம்பெனி, அதன் முதலாளி பற்றி ஆஉறா, ஒகோ என தாறுமாறா புகழ்ந்து நம்ம பத்திரிகைல எழுதி இருக்கே அது உண்மையா என நேருக்கு நேராக கேட்டான் புதிதாய் நிருபர் ; வேலைக்கு சேர்ந்திருந்த விக்னேஷ்
விக்னேஷ் கேட்ட கேள்வி  எடிட்டரின் பதில் என்ன  “

           நீதான் ரிப்போர்ட்டர்  ஆச்சே நீயே விசாரிச்சுக்கோ என சின்ன புன்னகையோடு பதில் அளித்தார்.
          அந்த பதிலையே துணைக்கு கொண்டு, அந்த கம்பெனியின் பொறுப்பாளரிடம் , அந்த தொழில் நிறுவனத்தைப் பார்க்கவும் அதன் நிறுவனரிடம்  பேச வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தான்.        
          மறுநாள் காலை ஒன்பது மணி ...அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்டது.
          அதன்படியே காலை ஒன்பது மணிக்கு சரியாய் போனான்.
          தொழிலதிபர்  சேம்பருக்குள் நுழைய, அங்கு கோட்டு_சூட்டுடன்  மேற்கத்திய பாணியில்  டாம்பீகமாக இருந்தார்.
          ஸார் என் பேர் விக்னேஷ் என கூற, அவனை நன்றாக  உபசரித்து அமர  செய்யதார்
          பிளிஸ், கொஞ்சம் வெயிட் பண்ணுங்கஇதோ வந்துடறேன் என்று உள்அறைக்குள் போனவர்      திரும்பியபோது, அந்த கம்பெனி ஊழியர் கள் அணியும் யூனிபார்ம் உடையோடு காட்சியளித்தார்   அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வாங்க போகலாம் என அழைத்து போனார்.
          பேக்டரி  சைட்டில், ஒரு இயந்திரத்தின் முன் நின்றார்  அதில் போல்ட, நட்டுகள் பாலிஷ் போட்டு வந்தவண்ணம் இருந்தன. அவற்றை தானே சரி பார்த்து பாலிதின் கவர்களில்  பேக் செய்து, அதன் அளவுகள் குறித்து வைத்தார்.  பின்பு இன்னொரு பிரிவிற்குள் சென்று அங்கு ஓடும் இயந்திரத்தை தானே இயக்கிப் பார்த்தார். சரியாக ஓடுகிறது என்பது திருப்தியான பின்பே அங்கிருந்து நகன்றார்.  பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இருக்கிறதா என்றும் சோதனை செய்து பார்த்தார்.   இப்படி ஒவ்வொரு பிரி வாய் போய் அங்குள்ள சின்ன சின்ன வேலைகளை தாமே செய்து, தொழிலாளா;களை சுறுசுறுப்பாக இயங்க முன்மாதிரி யாக இருந்தார்
          இதற்குள் மதிய உணவு வேளை வர, வாங்க கேன்டின் போகலாம் என கூப்பிட்டு போனார்
          கேன்டினின் சமையல் அறையில் காய்கறிகளின் தரம், உணவுப் பொருட்கள் தகுந்த பாதுகாப்பாக வைக்கப்பட்ட்டிருக்கிறதா என்றும்…. சமையலுக்கான உபகரணங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்றும் பார்த்தார்.
 உணவு தரம் மற்றும் அளவு இவைகளை சரி பார்த்து ஆலோசனைகள் வழங்கினார் பிறகு ஒரு பிளேட்டை தாமே எடுத்து உணவு வாங்கிக் கொண்டும், விக்னேஷக்கு ஒரு பிளேட்டில் உணவு வாங்கி கொடுத்தார்
 பணியாளா;கள் ஒவ்வொருவராய் கேன்டின் வந்து, உணவு வாங்கி சாப்பிட்டனர்      அனைவரும் சாப்பிடும்வரை அங்கேயே இருந்தார்.
           அனைவரும் சாப்பிட்டபின், உணவு போதுமான அளவு வாங்கிக் கொண்டிர்களா?  எப்படி இருந்தது உணவு, ஆலோசனைகள் ஏதேனும் இருந்தால் சொல்ல சொன்னார்
          ஒரு பணியாளர் ஸார் தயிர் சாத த்திற்கு மாங்காய் ஊறுகாய்தான் பெஸ்ட். இங்கே எலுமிச்சை ஊறுகாய் போடுகிறார்கள் என்றார். அதையும் குறித்துக் கொண்டார்.
          எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த  விக்னேஷக்கு இதற்கு மேல் இருக்க வேண்டுமா? என மனதில் நினைத்துக் கொண்டே,,ஸார், உங்களிடம் ஒரு கேள்விஎன இழுப்பதற்குள்….    கேளுங்களேன் என்றார்.
          இவ்வளவு பெரிய கம்பெனிக்கு நீங்கதான் முதலாளி, அனா நீங்க ஒவ்வொரு பிரிவா போய் வேலை செய்யறீங்க, ஊழியர்கள் சாப்பிடறவரைக்கும் இருந்து விசாரிக்கறீங்க இதெல்லாம் நீங்க செய்யணும் அவசியமில்லையே… .
          தம்பி, நான் முதலாளி இல்லேப்பா என்றார்
          என்னது, நீங்க முதலாளி இல்லையா, அப்ப நீங்க யாரு,?
          …….இந்த கம்பெனியோட முதல் தொழிலாளி நான்தான்-ப்பா-என்றாh;.
          காலையில்,  எடிட்டரிடம்  கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்த திருப்தியில் பத்திரிகை அலுவலத்திற்கு திரும்பினான்,


2 comments:

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...