1/27/2019

சாமீ கொடுத்த வரத்தைவிட, புத்தியை பயன்படுத்தினாத்தான் “என்ன நாய்படாத பாடு, ஓடியோடி ஒழைக்க வேண்டியதாயிருக்குது,


                                                 சாமீ கொடுத்த வரத்தைவிட,  புத்தியை பயன்படுத்தினாத்தான்          
  என்ன நாய்படாத பாடு, ஓடியோடி ஒழைக்க வேண்டியதாயிருக்குது, ஒக்காந்த இடத்திலேயே வருமானம் வர்றா மாதிரி, வரம் கொடு சாமீ  வேண்டினான் வேணு
               சாமீ கொடுத்த வரத்தைவிட,  புத்தியை பயன்படுத்தினாத்தான்     

        வேணு இப்படி வேண்டிக் கொண்டதற்கு காரணம் அவனோட அப்பதான்  ஏன்டா இந்த வயசிலேயே சோம்பேறியா இருந்தா வயசான பிறகு உடம்பு வணங்காது அதனால எல்லா வேலையும் நீதான் செய்யற என்று கஷ்டப்படுத்தி வேலை வாங்கி சொல்லி சொல்லி வளர்த்த்தோடு அவனை உட்கார வைத்து நல்ல நல்ல தன்னம்பிக்கை சிறுகதைகளாக சொல்லி வளர்த்தும் ..அவன் இப்படி வேண்டிக் கொள்ளும் நிலைமைக்கு வந்து விட்டான். motivation stories

          இன்னொரு இடத்தில, சாமீ, இந்த ஒடம்பு வணங்கவே மாட்டேங்குது, சுறுசுறுப்பா இருக்கிறதுக்கு வழி இருந்தா காண்பீ   கேட்டுக் கொண்டான் சுந்தரம். ஏன்டா செல்லம் நீ இந்த வீட்டுக்கு ஒரே பிள்ளை நீ கஷ்டப்படலாமா? என்று வெறும் ராஜா கதைகளை  சொல்லி சொல்லி வளர்த்த தால் அவன் இப்படி வேண்டிக் கொள்ளும் நிலைமைக்கு வந்து விட்டான்.
        இரண்டு பேரும் நடைப்பயணமாக காட்டு வழியில் ஆளுக்கொரு திசையாக  சென்று கொண்டிருந்தார்கள் அந்த காட்டின் ஒரு மரத்தடியில் துறவி ஒருவர் அமர்ந்து சத்தமாக மந்திரம் உச்சரித்தார். அது அவர்களின் காதுகளில் கவிதைகளாக விழுந்த து.  அதைக் கேட்டதும் அவர் அருகில் சென்று வணங்கியவுடன் ., நீ நெனச்சபடி நிறைவேறும் என தனித்தனியே இருவருக்கும் அருள்பாலித்தார். சாமீ. motivation stories
            காடு மிகவும் அடர்த்தியாக இருந்த து. ஒரிடத்தில் ஆற்றின் நீரோடை சலசலப்பு கேட்க அது வேணுவின் காதில் விழுந்த து. நீண்ட பயணக் களைப்பினால் நீரோடையில் தண்ணீர் குடிக்கும் போது ஒரு வட்டவடிவமான கல்லொன்று கிடைத்தது. அது மிகவும் சொரசொரப்பாக இருந்த்து. அதை மேலும், கீழும் பார்த்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தான்.
        அதைக் கொண்டு என்ன செய்யலாம் என்று தீவிர ஆலோசனையில் மூழ்கினான் அப்படியும் மனதில் எதுவும் தோன்றவில்லை.
           அந்த நேரத்தில், சுந்தரம் எதிரில் வரஇருவரும் சந்தித்து ஒருவருக்கொருவர் விசாரித்த பின் இந்த காட்டிலே நடமாட்டம் குறைவாக இருக்கிறது. ஆகையால்  நாம் ஒருவருக்கொருவர் துணையாய் இருப்போம் என்று இருவரும் பேசிக் கொண்டே சென்றனர். பேச்சின் நடுவில்       எனக்கு ஒரு வட்டவடிவ கல் கிடைத்த்து. இதை வைத்து என்ன செய்வது என்று புரியவில்லை என்று  வேணு சொன்னான். motivation stories
           உடனே அப்படியா? எனக்கு ஒரு கூர்மங்கிய அரிவாள் ஒன்று கிடைத்த து. அதனால் ஒரு சிறுகுச்சியைக் கூட வெட்ட முடியவில்லை. இதை வைத்து என்ன செய்வது தூக்கி வீசி விடலாமா? என்று பார்க்கிறேன் என்று சொன்னான்., ,
            நாம் ஏன் குழம்பிக் கொள்ள வேண்டும். வரும் வழியில் ஒரு துறவி அமர்ந்திருந்தாரே ! அவரைப் பார்த்தால் ஏதாவது ஆலோசனை தருவார் என்று இருவரும் துறவியைச் சந்தித்தனர். motivation stories
            அங்கு போய் சாமீ, ஆளுக்கொரு பொருளைக் கொடுத்து அல்லாட விடுறீயே, நியாமா, அப்படின்னு கேள்வி கேட்டனர்.
              அதற்கு, நீங்கள் கேட்டபடி வரம் கொடுத்துவிட்டேன். இந்த வரத்தை நாளைக் காலைக்குள் பயன்படுத்தாவிட்டால், வட்டவடிவ கல், ஒன் தலையை தாக்கிவிடும்.    அரிவாளும் சுந்தரத்தின் கழுத்தை பதம் பார்க்கும். ஒங்களைக் காப்பாற்றி கொள்வது உங்கள் கையில்தான் என அசரிரியாக சொல்லி மறைந்து விட்டார்.
          பயத்தால், இருவருக்கும் தூக்கம் வரவில்லை. , பொழுது புலரும்வேளையில், வேணு உட்கார்ந்த இடத்திலிருநதே  இந்தாப்பா, அந்த அரிவாளைக் கொடுன்னு கேட்டு  வாங்கி. வட்டவடிவக் கல்லில் தீட்ட..தீட்ட, அரிவாள் கூர்மையாக மாறிவிட்டது.
        அரிவாள் தீட்டிக்கொடுத்த்தற்கு காசு கொடுன்னு சுந்தரத்திடம் கேட்டு வாங்கி கொண்டான் வேணுகோபால்.
        தீட்டிய அரிவாளால் காய்ந்த மரங்களை  ஓடியோடி சுறுசுறுப்பாக வெட்டினான், சுந்தரம்.
          சாமீ கொடுத்த வரத்தைவிட,  புத்தியை பயன்படுத்தினாத்தான் நல்லது என்றான் வேணுகோபால். அதற்கு, ஆமாம்ஆமாம், இல்லேன்னா, நம்ம கதை முடிஞ்சிருக்குமேன்னான் சுந்தரம்.           


No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...