1/28/2019

வசூல் மன்னன் சந்தானம் பேச்சைக் கேட்டு ஏன் பதட்டமானவர் யார் ?


                    வசூல் மன்னன் சந்தானம் பேச்சைக் கேட்டு  ஏன் பதட்டமானவர் யார் ?

                           ஜனநாட்டமுள்ள ஒரு சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.   போக்குவரத்து காவலர்கள் சாலையை சீர்படுத்தி கொண்டிருந்தனர்.ENNATHULI
 வசூல் மன்னன் சந்தானம் பேச்சைக் கேட்டு  ஏன் பதட்டமானவர் யார் ?



                     கார்கள் அணியணியாக வந்து அதிலிருந்து இறங்கிய ஆட்களைப் பார்த்தால் எல்லோரும் செல்வந்தர்களாக அடையாளம் காட்டியது.               அதைப் பார்த்த மக்கள்எல்லாம் பணக்கார ர்களாக இருக்காங்கஏதோ வியாபாரத்தைப் பற்றி பேசுவாங்க போல இருக்கு ..நாம நம்ம பிழைப்பைப் பார்ப்போம் அன்று அவர்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டனர்.              வந்தவர்கள் அந்த கல்யாண மண்டபத்தில் கூட்டமாக அமர்ந்துஒருவருக்கொருர்     அவசர கூட்டம் என்று அழைத்தார்கள். பெரிய மனிதர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர்  எதுக்குப்பா?  எதுக்குப்பா? இந்த கூட்டம்  கேட்டுக்  கொண்டே இருந்தனர். அப்போது, ஒலிப்பெருக்கியில்….தலைவர் பேசினார்.
                    நாம எல்லோரும் வசதியாய் இருக்கிறோம். ஆனால் இந்த ஊர்ல  உயர்நிலைப்பள்ளி ஒன்று மட்டும்தான் இருக்குமேல்படிப்பு படிக்க கல்லூரி இல்லையே.  நம்ம பிள்ளைகளும் வெளியூர் போய் படிக்கிறாங்க. இந்த ஊர்    ஏழைப் பிள்ளைகளும் வெளியூர் போய் படிக்கிறாங்க ஆதனால அவங்க  படிக்க ஒரு பெரிய கல்லூரியை நாமளே  கட்டணும், அதுக்கு நிறைய செலவாகும் ஆதனால நன்கொடை வசூல் எப்படி பண்ணலாம் என்று ஆலோசிக்கத்தான் - இந்த கூட்டம்அடுத்து நமது டிரஸ்டின் செயற்குழு உறுப்பினர் சந்தானம்  பேசுவார்  என்று சொல்லி தலைவர் அமர்ந்தார்                         தலைவர் அவர்களே என்று ஆரம்பித்துகல்லூரி கட்டுவதற்கு தேவையான  பொருட்கள்பண உதவி ஆகியவற்றை எல்லோரும் மனமுவந்து தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆதலால் முதலில் நம்ம ஐயா அழகேசனிடம் ஆரம்பிப்போமே! என்று நாம கட்டப்போற கல்லூரிக்கு நன்கொடை கொடுக்கக் கூடாதா?” நீங்கதான் தர்மவான் ஆச்சே-ன்னு அழகேசன் என்பவரிடம் ஆரம்பித்தார்,          நீ தர்மவான் சொன்னா நான் குடுத்துடுவேனாக்கும், என்கிட்ட பாச்சா பலிக்காது,  எனக்கு அவசரமா வேலைக்கு இருக்குன்னு வேகமாக வெளியேறினார்  அழகேசன்.
                பெரிய மனிதர்கள் எல்லாரும் அதிர்ச்சியானார்கள். “என்ன இப்படி போய்ட்டாரேஎன பேசிக்கொண்டனர். அவர்களில் ஒருவர்  ஸார் அவருக்குதான் முகஸ்துதி பிடிக்காதே,  அவரை தர்மவான்னு புகழ்ந்தா அதான் முடுக்கினு போய்ட்டார்
          அவருக்கு முகஸ்துதி பிடிக்காதா?
              முதலிலேயே சொல்லியிருந்தால் அவரிடம் முதன்முதலாய் நன்கொடை கேட்பதைத் தவிர்த்திருக்கலாமே இருந்தாலும் அவரை நம் வழிக்கு கொண்டு வந்து அந்த முகஸ்துதி பாடியே நான் வசூல் பண்ணிக் கொடுத்தா எனக்கு என்ன தருவீங்கோசவாலோடு கேட்டார் சந்தானம்              ஓங்களுக்கு பொருளாளர் பதவி  கொடுக்கிறோம்என்றதும் அனைவரும் ஆமோதித்தனர் .
       இந்தக் கூட்டம் அறிமுக கூட்டமாக முடித்து கொள்ளலாம் , அடுத்த கூட்டத்தில் வசூல் பார்க்கலாம் என கலைந்தனர்              அடுத்த கூட்டத்திற்கு  அழுகேசனும் வந்திருந்தார்  சவால் விட்ட சந்தானம் ஒலிபெருக்கியில் பேச ஆரம்பித்தார்              நாம கட்டப்போற கல்லூரிக்கு…. அண்ணன் செங்கல்வராயன் கல்லூரி  கட்ட  தேவையான செங்கல் எத்தனை லோடு வேண்டுமானாலும் தன் சொந்த செலவில் போக்கு வரத்து செலவு உட்பட மொத்தமும் பாத்துக்கிறாராம்.
             ஆதனால அவரை “; செங்கல் ராயன்என்றே இனி வரும் கூட்டங்களில் அவரை செல்லமாக புகழலாம்.
           தம்பி தங்க வேலு, கட்டிடத்திற்கு தேவையான கம்பிமொத்தத்தையும் வாங்கி தர்ராறாம், அதனால,  அவரை      கம்பி வேலுஎன்றே பாராட்டலாம்.
              அடுத்து நமது மருதமுத்து கட்டிடத்திற்கு தேவையான மரங்கள் அத்தனையும் வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். ஆதலால் அவரை மரத முத்து என்று கூட அழைக்கலாம் கோபித்து கொள்ள மாட்டாராம்.
                இந்தக் காலத்துல இப்படி ஒருத்தரா!   ஆச்சர்யமா இருக்கு.
              இந்த கூட்டத்திலேயே வித்தியாசமான நபர் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவர் நமது அண்ணன் அழகேசன்தான்  அண்ணனுக்குபுகழ்என்றாலே பிடிக்காதாம். அவரை நேருக்கு நேர் யார் புகழ்ந்தாலும்  கோப படுவாராம். இது தெரியாமல் முதல் கூட்டத்தில் அண்ணனை புகழ்ந்து விட்டேன். ”அண்ணே மன்னித்து கொள்ளுங்கள்
            அண்ணன் அழகேசனை  முகஸ்துதி செய்யாம எவ்வளுவு கேட்டாலும் கொடுத்திடுவாரு”-ன்னு இப்பத்தான் தம்பி தாமரைச்செல்வன் சொன்னாருஅவர்கிட்ட காசையும் வாங்கிட்டு புகழாம விட்டா கட்டினபிறகு நம்ம கல்லூரி சுவர் கூட சிரிக்கும். ... அவருக்குத்தான்  முகஸ்துதி பிடிக்காதே.. நீட்டிமுழக்கி சொல்லிக் கொண்டிருக்கும்போதே இந்தாப்பா தம்பி என்னோட பங்கா இருபத்தி ஐந்து லட்சம் தர்ரேன்சொல்லி  காசோலை எழுதிக் கொடுத்து விட்டு… “அவசர வேலை இருக்கு-ன்னுவெளியே கிளம்பி விட்டார்              அவர்  போனதும்,  ஆச்சர்யமா! இருக்கே ! தர்மவான் சொல்லி கேட்டால் குடுக்கல,  இன்னிக்கு பகழாமலேயே காசை கைமேல கொடுத்திட்டாரே !  எப்படிப்பா இது? -ன்னு சந்தானத்திடம் ஒருத்தர் கேட்டார்.             அழகேசனுக்கு  முகஸ்துதி பிடிக்காதுஎன்பதை   முகஸ்துதியாகவே தானேப்பா இவ்வளவு நேரமா பேசினேனே யாருக்கும் புரியலயா?”என்றார் சந்தானம்.
              பலத்த கைத்தட்டல்களுக்கிடையே ஒலிபெருக்கியில் நமது டிரஸ்டின்  பொருளாளராக  வசூல் மன்னன் சந்தானம் இருப்பார் என அறிவித்தனர்.
                                    

2 comments:

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...