1/30/2019

அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சுந்தரம் எரிந்து கொண்டிருந்த அடுப்பு…. சுந்தரத்திற்கு என்ன ஆனது



       அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சுந்தரம் எரிந்து கொண்டிருந்த அடுப்பு…. சுந்தரத்திற்கு என்ன ஆனது

              நகர்ப்புறத்தில் ஒதுக்குப்புறமான ஒரு கட்டிடம் இயங்கி வந்த து. அதில் நிறைய மாணவர்கள் தங்கி இருந்தனர்.
அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சுந்தரம் எரிந்து கொண்டிருந்த அடுப்பு…. சுந்தரத்திற்கு என்ன ஆனது

        அவர்கள் நகர்ப்புறத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆவார்கள்.  அந்த கட்டிடம் ஒரு டிரஸ்டுக்கு சொந்தமானது.
       டிரஸ்டிற்கு பல்வேறு வகையில் நிதித் திரட்டி அதில் அதில் ஏழை மாணவர்களுக்கு உணவு உடை, படிப்பு செலவு என எல்லாவற்றையும் கொடுத்து அதில் தங்க வைத்த தால் மக்களிடையே  பிரபலமாகி இருந்த்து.
 அதில் மேலாளராக ஒருவர் பணிபுரிந்தார் பார்ப்பதற்கு அந்த முருகன் போல அழகாய் சாந்தமாய் இருந்தார்
          அவரைப் பார்ப்பவர்கள் இந்த சாந்தமான முகமா அவ்வளவு பிள்ளைகளையும் சமாளிக்கிறது என்று ஆச்சர்யப்படுவார்கள் அப்படிப்பட்ட நபரின் பெயர்  வேலாயுதம்
       அவரிமிருக்கு நிறைவான குணங்களுக்கிடையே ஒரு குணம் மட்டும் மாறாமல் இருந்த து. அந்த குணம், எதையும் வீணாக்கினால் கோப ப்படுவார்                  ..மாணவர்கள் உணவினை சாப்படாமல் கிழேக்கொட்டினால் அவருக்கு மிகுந்த கோபம் வந்துவிடும். மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி பெற்றொர்களை வரவழைத்து மாணவனை மன்னிப்ப கேட்கச் சொல்லி அப்புறம்தான் உள்ளே விடுவார். அப்படி ஒரு கண்டிப்பு.
       அப்படி கண்டிப்பான பேர்வழி மாணவர்களுக்கு உணவு சமைக்கும் அறையில் கண்காணிப்பு பணியைச் செய்தார். அப்போது அவர் கண்களிட்ட பட்ட  அந்த விஷயம். அவரை மிகவும் கோப ப்பட வைத்த து.
       சமையல் அறையில் அடுப்பின் மேல் ஒரு பாத்திரமும் இல்லாமல் வெறுமன்னே அடுப்பினில் விறக எரிந்து வீணாகிக் கொண்டிரந்த்து. சமையல் வேலை செய்பவர் அங்கு இல்லாமல் சற்று தொலைவில் அலைபேசியில் பேசிக் கொண்டிரந்தார். அதைப் பார்த்த்தும்
       இன்னாப்பா சுந்தரம், அடுப்பில் சமையல் கவனிக்காம போன் பேசிக்கிட்டிருக்கே என கூப்பிட்டார். இல்லீங்க இப்பத்தான் போன் வந்த்து அதான் போனேன் என்றார்.
       ஆபிஸ் ரூமுக்கு வாப்பா என கூப்பிட்டு போய் நாளயில் இருந்து வேலைக்கு வரவெண்டாம், நாங்க வேற ஆளைப்பார்த்துக்குறோம் என சொல்லிக் கொண்டிருந்தார்
       அந்த நேரம் பார்த்து டிரஸ்டின் தலைவர் வந்து விட விவரம் கேட்டார்.
       ஐயாசமையல் அறையில் அடுப்பில் விறகு எரியவிட்டுட்டு அவர் போன் பேசிக் கொண்டிருக்காரு. ஏற்கனவே  மூன்றுமுறை எச்சரித்திருந்தேன். அப்பவும் அவர் திருத்திக்கலஅதனால..அவரை வேலைக்கு வரவேண்டாம்ன்னு சொல்லிகிட்டிருந்தேன் என்றார்.
       அவரோட அப்பா எனக்கு நண்பர் அவர் செய்த து சின்ன தப்புதானே மன்னித்து  விட்டுடலாமே என்று சொன்னார் தலைவர்.
       மன்னித்து விடுவதும். மன்னிக்காமல் தண்டனை தருவதும் தங்களது முடிவு தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தான். ஆனால் நான் சொல்வதை முழுவதுமாக கேட்டு விட்டு முடிவு மேற்கொள்ளுங்கள் என்று தனது விளக்கத்தை கூற ஆரம்பித்தார்.
       ஐயா, இந்த டிரஸ்டுக்கு முகம் தெரியாதவங்க எத்தனையோ பேர் நன்கொடை தராங்க..அந்த பணத்தை விரயமாக்காமா நல்லவிதமா செலவு செய்யுறோம்ன்னு அவங்க நம்பிக்கை வைத்திருக்காங்க அந்த நம்பிக்கையிலதான் நமக்கு கேட்காமலேயே நிறைய பேர் பணஉதவி பொருளுதவி செய்யறாங்க .அதனால ஒரு பைசா வீணாவதுகூட நம்ம டிரஸ்டுக்கு நல்லது இல்ல, அவங்க னைப்பும் பாழாப்போயிடும். இப்ப சொல்லுங்க என்ன செய்யலாம்ன்னு நீங்களே சொல்லுங்க என்றார் மேனேஜர் வேலாயுதம்.
       டிரஸ்டின் தலைவர் நீண்ட யோசனைக்கு பின் பதில் எதுவும் பேச முடியாமல்…மேலாளரின் முடிவையே ஏற்றுக் கொண்டார்.
       மேலாளரின் பொறுப்புண்ர்வை மனசுக்குள்ளேயே பாராட்டிக் கொண்டார்.


1 comment:

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...