Skip to main content

மனைவி சாப்பாடு பரிமாறும் விதத்தில் அலுவலகத்தில் பணியாளர்களிடம் வேலை வாங்குவது எப்படி என்பதைக் கற்று கொண்டது யார்


                                மனைவி சாப்பாடு பரிமாறும் விதத்தில் அலுவலகத்தில் பணியாளர்களிடம் வேலை வாங்குவது எப்படி என்பதைக் கற்று கொண்டது யார்
        என்னங்க, ஒடம்புக்கு சுகமில்லையா, முகம் ஒரு வாரமா வாட்டமா இருக்கே என இராகவனைப் பார்த்து கேட்டாள், சுபலட்சுமி.
மனைவி சாப்பாடு பரிமாறும் விதத்தில் 

     அதெல்லாம் ஒண்ணுமில்லை, மனசுதான் சரியில்லை, நான் வேலைக்கு சேர்ந்து பல வருஷம் ஆச்சு ஆனால் ஆபிஸ்ல இப்போதான் வேலைக்கு சேர்ந்த கோவிந்தன் எனக்கு ஜினியர். ஆனா அவன் வேலை சொன்னா எல்லா ஸடாப்களும் முகம் சுளிக்காம செய்யறாணுங்கோ. நான் வேலைக் கொடுத்தா மட்டும், முணுமுணுக்கிறாங்க. முகத்தைத் திருப்பிக்கிறாங்க . என்னன்னு தெரியல, ஆதங்கத்தைக் கொட்டினான்.
          அவர் வேலை செய்யறவங்கிட்ட சகஜமா ழகுவாரு, என்கிட்ட எரிஞ்சு விழுறீங்க குழந்தைக்கிட்ட கொஞ்ச மாட்டீறீங்க எப்ப பாரு நீங்க வீட்ல சிடுசிடுன்னு இருக்கிற மாதிரி ஆபிஸ்லேயும் இருப்பீங்க அதான் என்றாள்.
              அதெல்லாம் இல்லே வீட்லே இருக்கிறமாதிரி ஆபிஸ்ல நடந்துக்க முடியும்.என்று சொல்லி கொண்டிருக்கும் போதே    இராகவின் மாமனார், வீட்டிலிருந்து போன் வரமைத்துனருக்கு உடம்புக்கு முடியலவீட்ல யாரும் இல்ல, ஆஸ்பித்திரிக்கு கூப்பிட்டு போக ஒத்தாசையா சுபலட்சுமியை அனுப்பி வைங்க ன்று மாமனார் கேட்டுக் கொண்டார். அந்த கோரிக்கைக்கு சரி என்று ஒப்புக் கொண்டான்
          இந்த பரபரப்பிற்கிடையே மதிய சாப்பாட்டை தயார் செய்தாள் சுபலட்சுமி
          என்னங்க, மதிய சாப்பாடு ரெடியாயிடுச்சு, நீங்களே போட்டு சாப்பிடாதீங்க..சரியா சாப்பிடமாட்டீங்க. அதனால், கீதாவை சாப்பாடு போட சொல்றேன்.
          கீதாகீதா..இங்க வா..அப்பாவுக்கு மதியம் சாப்பாடு போடு, சாப்பாடு எப்படி பறிமாறணும்ம்னு தெரிஞ்சுக்கபுகுந்த வீட்டுக்கு போனாஒனக்கு ஒத்தாசையா இருக்கும்
          சரி சொல்லும்மாஇராமாயணம் அளக்காதே
          சாப்பிட, சாப்பிட  சொஞ்சம் கொஞ்சமா சாப்பாட்டைப் போடணும். அப்பத்தான் அவங்க திருப்தியா சாப்படுவாங்க. மொத்தமா கும்பம் மாதிரி சோறு போட்டா மலைச்சுடுவாங்க. சரியா சாப்பிடமாட்டாங்க. இது சாப்பாடு விஷயத்துல மட்டுமில்லேடி. வாழ்க்கைல எல்லாத்துக்கும் பொருந்தும். புரிஞ்சுதாடி.. என சொல்லிவிட்டு வெளியேறினாள். கேட்டுக்  கொண்டிருந்த இராகவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு அக்கறையா சொல்றான்னு சிரித்து கொண்டே கேட்டான்..
          மறுநாள் ஆபிசில், ஒரு பைல் விஷயமாய் கோவிந்தன் எதிரில் போய் அமர்ந்து  பேசிக் கொண்டிருந்தான்
          அப்பொழுது, ஒரு ஸ்டாப் வர, கத்தை..கத்தையா பிராஜெக்ட வேலைகள் டேபிளில் குவிந்து கிடந்தன. குவிந்து கிடந்தவைகளில் கொஞ்சம் கொஞ்சமாய் பிரித்து அதை இரண்டு போல்டர்களில் போட்டு, இந்த வேலையை முடிச்சுட்டு வாமீதியை பிரிச்சு வைக்கிறேன்…வந்து வாங்கிக்கோ என கோவிந்தன் சொன்னான்.…அவனும் முணுமுணுக்காமல் வாங்கி போய் வேலையை முடித்து விட்டு திரும்ப வந்து மறு வேலையை வாங்கிக் கொண்டான். இப்படி எல்லா பணியாளர்களும் தங்களுக்கான வேலையை வாங்கி கொண்டு போய் முடித்தபின் அவர்களின் முகத்தில் வேலை முடித்த திருப்தியில் இருந்தார்கள்.
          அதைக் கவனித்த  இராகவன், வீட்டில் சாப்பாடு விஷயத்தில் மனைவி சொன்னதும், கோவிந்தன் செய்கையும் ஒத்துப்போகிறதேஇதுதான் வேலை வாங்குவதற்கும், வேலையைச் செய்ய வைக்கிறதுக்கும் உள்ள சூட்சுமமோ என புரிந்தவுடன், தோழமையாக கோவிந்தனுடன் கைகுலுக்கிய பின் வா! காபி சாப்பிட கேன்டீன் போகலாம் என்று ஜூனியர் கோவிந்தனைக் கூப்பிட்டு போனான்.




Comments

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...