1/05/2019

கிழியும் சேலை கிழியா பாட்டு


கிழியும் சேலை  கிழியா பாட்டு

                            கையில் ஊன்றுகோல், ஊன்றுகோலின் உதவியோடு பல மைல்கள் தூரம் கடந்துவந்து, குலோத்துங்க சோழன் அரண்மனை வாயிலில் வந்தடைந்தார் ஔவையார்.  காவலனிடம், பெண்பாற் புலவன் ஔவையார் வந்திருப்பதாக, மன்ன்னிடம் தகவல் சொல்லி காத்திருந்தார்.
கிழியும் சேலை கிழியா பாட்டு

                   



                                  ஔவையாரின் வருகை விவரத்தைச் சொல்ல உள்ள போன காவலன் திரும்பி வரவில்லை. காலம் கடந்து கொண்டிருந்த து. கால்கடுக்க நின்று கொண்டேயிருந்தாள். காவலன் வந்தபாடில்லை. பயணக்களைப்பு அவளைப் படுத்தியது.
                                  வெகுநேரத்திற்கு பிறகு காவலன் வந்தான். அவன் கையில் புத்தம்புதிய நூற்சேலை ஒன்றிருந்த து. அந்த நூற்சேலையைக் காண்பித்து
தாயே ! தாங்கள் வந்திருப்பதாக மன்ன்னிடம் தகவல் கூறி, தங்களை உள்ளே வர அனுமதிப்பது குறித்து ஆணைக் கேட்டேன்..
                                                அதற்கு, மன்ன்ன், தற்போது அத்தியாவசிய பணிகளுக்காக, மந்திரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், ஆதலால் சந்திக்க இயலாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோடு, இந்த நூற்சேலையை பரிசாக தங்களிடம் வழங்க ஆணையிட்டுள்ளார். இதனை வாங்கி கொள்ளுங்கள் தாயே! என்றான். காவலன்.
                                                 காவலாளியின் அந்த சொற்கள் கடும்வேதனையளித் த்து ஔவையாருக்கு. ஒரு புலவரை, அதிலும் பெண்பாற் புலவரை தக்க முறையில் உபசரித்து வரவேற்காமல், வாயிற்படியிலேயே நிற்க வைத்து, காவலர் வாயிலாக ஒரு புடவையைக் கொடுத்து கவிஞரை மகிழ்விக்க முடியும் என்று குலோத்துங்க சோழன் எண்ணியது எவ்வளவு அறியாமை. சோழன் நெஞ்சத்திலா இச்சிறுமை எண்ணம் ? என்று கலங்கினாள்  ஔவையார்.
                                                                சோழனாகிய உன்னைப் பார்த்து பாடத்தான் வந்தேன், பாட்டிற்கு விலைபேசவா பல மைல்கள் தூரம் கடந்து வந்தேன். அழியாக் காவியமான கவிதைக்கு இதுதானா மரியாதை. பேதமைப் புத்தியுள்ளவனா ?குலோத்துங்க சோழன் என்று மனதிற்குள்ளேயே எண்ணினாள்.
                                                                மேலும், ”உடுக்க துணிதேடி உலவும் யாரோ ஒரு பெண்ணென்றும், பாடி திரிந்து வயிறு வளர்க்கும் சாதாரணவளென்று நினைத்து விட்டானா ? குலோத்துங்க சோழன்.
                                                                இப்படி நெஞ்சக்குமுறலோடு நின்றிருந்த வேளையில், ” என்ன பாட்டி ? இப்படியே நின்று கொண்டிருந்தால் என்ன ? உங்களுக்கு இந்த  சேலை வேண்டுமா வேண்டாமா ?” என கேட்டான் காவலன்.
                                                                ஔவையார், அவனிடம் சற்று நேரம் அமைதியாய் இருக்க சொல்லிவிட்டு, தன்னுடைய கைப்பையிலிருந்த ஓலை நறுக்கொன்றை எடுத்து, அதில் எழுத்தாணியைக் கொண்டு ஏதோ எழுதினார்.
                                                எழுதி முடித்த பின், காவலனின் கையிலிலுள்ள நூற்சேலையின் மேல் ஓலை நறுக்கை வைத்து, இதை உங்கள் மன்னரிடம் காட்டி விட்டு வா. அதுவரையில் நான் காத்திருக்கிறேன் என்று சொன்னார் ஔவையார்.
                                                அதை எடுத்துக் கொண்டு உள்ளே போன காவலன், குலோத்துங்கனிடம் காண்பித்து, ஓலை நறுக்கைப் மன்ன்ன் படித்தவுடன், காவலன், அவன் பின்னே மந்திரிகள், மந்திரிகளின் பின்னே மாமன்ன்ன் குலோத்துங்கன்  அரண்மனை வாயிற்படி தேடி ஓடிவந்தனர்.
                                                அங்கே, ஔவையார் இல்லை. கோட்டையின் கீழே, கடைசி வாயிற்படியில் கோலுன்றியவாறு நடந்து கொண்டிந்தாள். நடையில் ஒரு கம்பிரம் தெரிந்த்து குலோத்துங்கனுக்கு.
                                                  குலோத்துங்கனின் கையிலிருந்த ஓலை நறுக்கு, அவனைப் பார்த்து நகைப்பது போலவே இருந்தன.
                                           நூற்றுப் பத்தாயிரம் பொன் பெறுமானமுள்ள நூற்சேலையானாலும், நான்கு திங்களில் கிழிந்து விடும். ஆனால், நான் பாடும் பாட்டானது என்றுமே கிழியாது குலோத்துங்கனேஎன்று பொருள்படியாக இருந்த்தைக் கண்டவுடன் திகைத்து நின்றான் சோழன்
 அந்தப் பாடல் இதோ
                                நூற்றுப் பத்தாயிரம் பொன் பெறினும் நூற்சீலை
                                நாற்றிங்கள் தன்னில் கிழிந்துபோம்மாற்றவரைப்
                                பொன்றப் புறங்கண்ட போர்வேல் அகளங்கா
                                என்றும் கிழியாது என் பாட்டு !

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...