தப்பு கூட தப்பில்லேதான்-Even the fault is Not wrong
” தப்பை தப்பில்லாம செய்தா தப்பு கூட தப்பில்லே” என்ன விசு வசனம்
மாதிரியே இருக்குன்னு நினைக்கிறீங்களா? இக்கட்டுரையே தப்பு
பத்தி எழுதுனதாக்கும். தப்பாம படியுங்களேன்.
தப்பு கூட தப்பில்லேதான்-Even the fault is Not wrong |
” தப்புகள் ”இந்த வார்த்தையை பலருக்கு பிடிக்காது. காரணம், மிகச் சரியாய் இருப்பதுதான் வாழ்வில் ஏற்றம் தருவதற்கு உறுதுணையாகும் என
நினைப்பார்கள்
தப்புகள் இல்லாது இவ்வுலக இயக்கமே
இல்லை எனலாம்.
நீல வானத்தில், பெளர்ணமி நாளில் “ஒப்பணையில்
அழகுப் பெண்ணாக” காட்சியளிக்கும் நிலா பெண், அமாவாசையில் காணாமல் போய்விடுகிறாள்.
அதுவும் தப்புதான் , ஆனால் இயற்கையின் சுழற்சிக்கு தேவையான தப்புதான் . இயற்கையால் அங்கீகரிக்கப்பட்ட தப்பாகும்.
இறைவன் படைத்துள்ள அனைத்திலும் தப்பில்லாமல் இருக்காது.
அந்த தப்பு கூட...பின் வருமாறு
இருக்கும்.
மயில்களில், ஆண் மயிலுக்கு
தோகையிருக்கும். பெண் மயிலுக்கு தோகை இருக்காது. நியாயமாக பாh;த்தால் பெண் மயிலுக்குத்தானே தோகை இருக்க வேண்டும். இது இடமாறு தோற்ற
பிழைப் போல தோன்றுகிறது அல்லவா? இந்த தப்பு
கூட
ஆண் மயில், பெண் மயிலை மயக்குவதற்காக தோகையை விரித்துக்காட்டி வலைவீசும் அஸ்திரமாக பயன்படுத்தும்
இதே போன்றுதான், ஆண் சிங்கத்திற்கு அழகான பிடரி உண்டு. பெண் சிங்கத்திற்கு பிடரி கிடையாது. ஆண் யானை அழகான
நீண்ட தந்தங்கள் கொண்டிருக்கும். பெண் யானைக்கு தந்தங்களிருக்காது. இது இயற்கையே வகுத்துள்ள நியாயமான தப்புகளாகும்.
சென்னை அண்ணா சாலையில் தீவுத்திடலின் எதிரே கம்பிரமான “மன்றோ சிலை” அதைக் கூர்ந்து கவனியுங்கள்..
ஒரு தப்பு கண்ணுக்கு புலப்படும். யாரும் அதைக் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
மன்றோ, குதிரையின் மேல் அமர்ந்திருப்பார் அவர்
கால் வைக்கும் இடத்தில் சேனமிருக்காது. குதிரையின் மேல் அமர்பவர்கள் விழாமல் இருக்க சேனம் அவசியம் தேவை. இந்த தப்பு சிற்பியின் கவனக்குறைவா?.
இல்லை, தன்னுடைய கலைத்திறனில் ஏதாவது ஒரு
தப்பிருக்கட்டுமே ! என்று சிற்பி விட்டுவிட்டதா? சிற்பிக்குத் தானே தெரியும்.
ஒரு பேரரசர் பெரிய மாளிகைக் கட்டினார் அவ்வப்போது கட்டிட வேலையை நேரிடையாகவே கண்காணித்து வந்தார் . அந்த மாளிகை பதினாறு தூண்களால் தாங்கிக் கொண்டிருந்தது. பெரிய மாளிகையை பதினாறு தூண்கள்
தாங்குமா? பேரரசரக்கு சந்தேகம் எழுந்தது.
கட்டிட வல்லுநரைக் கூப்பிட்டு, இன்னும் இரண்டு தூண்கள் கூடுதலாக கட்டுங்கள் என்று ஆணையிட்டார்
பேரரசர்
கட்ட சொன்ன இரண்டு தூண்கள் அவசியமில்லாதது என கட்டிட வல்லுநர் கருதினார்
ஆணையிட்டவர் பேரரசரராயிற்றே! யோசித்தார் கட்டிட வல்லுநர்.
கூடுதலாக இரண்டு தூண்கள் கட்டி முடிக்கப்பட்டது. பேரரசருக்கும்
திருப்தி ஏற்பட்டு பாராட்டினார் கட்டிட வல்லுநர் கூடுதலாக இரண்டு தூண்கள்
கட்டினாரே ஒழிய, அந்த இரு தூண்களும் பெரிய மாளிகையை தாங்காதவாறு, இரண்டு அங்குல இடைவெளி விட்டு கட்டப்பட்டது. இது பேரரசரரின் பார்வையில் படாத உயரத்தில் இருந்தது.
பேரரசரை திருப்திப்படுத்த வேண்டுமே என்று கட்டிட வல்லுநர் தெரிந்தே செய்த தப்பு இது.
இந்த தப்பைச்
செய்யாது, பேரரசரரிடம், தாம் கட்டிட துறையில் வல்லவன், நல்லவன் என வாக்குவாதம் செய்து இருந்தால், கட்டிட வல்லுநரின் கதை அல்லவா தப்பாகி அல்லவா போயிருக்கும்.
இப்பொழுதுதானே, கணக்கு எழுதுவதற்கு “டேலி” கண்டுபிடித்தாh;கள். முன்பெல்லாம் கணக்கு பிள்ளைகள் கணக்கு எழுதி அதை சரிபார்
க்க “ஐந்தொகை” போடுவார் கள். அதுதான் இன்று டிரையல் பேலன்ஸ் ஷீட்டாகும்.. “ஐந்தொகை” ஒரே தடவையில் சரியாக வந்து விட்டால், ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். ஆனால், அதில் தப்பிருக்கிறது என்று . மீண்டும் சரி பார்க்க சொல்வார்கள். இது
என் அனுபவத்திலும் நிகழ்ந்துள்ளது.
மீண்டும் சரி பார்த்தால், தப்பிருக்கும் கண்ணுக்கு புலப்படும்.
அந்த தப்புதான் “ஐந்தொகையை” சரி செய்வதற்கான சரி யான விடையாகும்.
தப்புகள் யாரிடம் தோன்றும். வீட்டுப் பாடங்கள் ஒழுங்காக எழுதும் பிள்ளைகளிடமும்….
அலுவலகங்களில் ஒழுங்காக வேலைச் செய்யும் பணியாளர்களிடமே தப்புகள்
தோன்றும். அவர் களிடமே ஆசிரியர்களும், அலுவலர்களும் தப்புகளைக் கண்டுபிடிப்பாh;கள்.
வீட்டுப் பாடம் எழுதாத பிள்ளைகள் , வேலையே செய்யாத பணியாளர் கள்.. அந்த தப்புகள்தாம், அவர்களை இனங்கண்டு கொள்ளக்கூடிய ஆதாரமானதாகும்.
“நான் தப்பே
செய்யாத நூறு சதவீத அக்மார்க் ஆள்”என்று யாராவது பீற்றிக் கொண்டால்,
அதுவே தப்பென நாம் எண்ண வேண்டும்.
காவல் துறையில் விசாரணையின் போது தப்புகள் உள்ள வாக்குமூலங்கள் தரும் நபர் நிரபராதியாகவும், தப்பே இல்லாது மனப்பாடமாக சாட்சிய சந்தர் ப்பங்களை
வாக்குமூலங்களாக தரும் நபர் களை குற்றவாளிகளாக கண்டறிவது வழக்கமான நடைமுறையாகும். ஏன் என்றால்,
குற்றவாளிகள்தாம் குற்றத்தை மறைக்க
முன்னேற்பாடாக எல்லாவற்றையும்
நினைவில் வைத்துக் கொள்வாh;கள்.. நிரபராதிகளுக்கு எந்த செயலையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய
அவசியமில்லை.
தப்புகள் ஏற்படாமல் வாழமுடியாது. அத்தகைய தப்புகள் மற்றவரி
ன் உயிருக்கும், தன்மானத்திற்கும் உலை வைக்காத வரை தப்பு நல்லதுதான்.
தப்புகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
பிழைகள் தரும் பேரின்பமாக மாற்றிக் கொள்ளுங்கள். அதுவே பொன்னான பாதையில் செல்ல உதவும்
வழியாகக்கூட இருக்கலாம்.
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்