1/21/2019

முகுந்தனுக்கு என்ன சொல்வது(WHAT TOLD TO MUGUNDAN)


.                               
முகுந்தனுக்கு என்ன சொல்வது

                டேய் ஸ்வீட் எடுத்துக்கடா! என்றவனின்    முகத்தில், ஸ்வீட் கொடுப்பதற்கு,  சம்பந்தமே இல்லாமல் இருந்ததால்,                               என்னடா முகுந்தா ? ஸ்வீட் கொடுக்கறே, முகத்தில சுரத்தே இல்லே! லாஜிக் இடிக்குதேஎன்று கேட்டான் நடேசன்.

                                டேய், “நான் அப்பாவாகிட்டேன்என்றான் முகுந்தன்.
                                அப்பா ஆனா சந்தோஷம்ல்ல படணும்அதைவிட்டுட்டுஇழுத்த நடேசனிடம் 
முகுந்தனுக்கு என்ன சொல்வது
           டேய் இப்பத்தான் டெலிவரி ஆகி என் ஒய்ப் அம்மா வீட்ல இருக்கா. ஆனா இப்பவே போன் போட்டு குழந்தையை ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு பெரிய கான்வென்ட் பெயரைச் சொல்லி அப்ளிகேஷன் வாங்கிட்டு வரச்சொல்றாடாஅதான் கவலையா இருக்கேன் என்றான் முகுந்தன்.
                முகுந்தா, “குழந்தையை கான்வென்ட்ல சேக்கறது இருக்கட்டும், நான் சொல்ற கொஞ்சம் கேளுஎன்றான்.
                பின்லாந்துல, எல்.கே..ஜி, யு.கே.ஜி-லாம் கிடையாது. ஏழு வயது பூர்த்தியானத்தான் பள்ளியிலேயே சேர்த்துக்கறாங்களாம். அவங்க நாட்டுல, இங்குள்ள ..எஸ், .பி.எஸ் ஆபிசர்களுக்கு என்ன மரியாதையோ, அதைவிட அங்கு வேலை செய்யுற ஆசிரியர்களுக்கு மரியாதைத்  தர்றாங்களாம்
                               
                                குழந்தை பிறந்து ஒரு வருஷமாகி, அது நடந்து, விளையாடி, வீட்ல சந்தோஷமா இருக்கிறத பார்க்க கண்கோடி வேணும், ம்., இந்த காலத்துல எங்க நடக்குது பெருமூச்சு விட்டபடியே, இப்ப இருக்கற எல்லா அம்மாக்களும், இரண்டு வயசுக்குள்ளேயே, கின்டர்கார்டன்ல சேக்கறதும், பிரிகேஜி, யுகேஜி, எல்கேஜி-ன்னும் சேர்த்து…..”குழந்தைகளோட உண்மையான மனோபாவத்தை சிதைச்சிடறாங்க.”

பால், பிஸ்கட், பொம்மைகளைக் கொடுத்துவீட்ல விளையாட விட்டு அழகுபார்த்தா, காசுக்கு காசும் மிச்சம், மனதுக்கும் ஒரு திருப்தி கிடைக்கும். உம், எங்கே நடக்குதுமீண்டும் ஒரு பெருமூச்சை விட்டான் நடேசன்.
                                என்னடா, முச்சிறைக்குதா?
                 எனக்கு ஏன்டா? முச்சிறைக்குது, இது ஆதங்க மூச்சுடா, நியாமா ஒனக்குத்தான் மூச்சிறைக்கணும்.  
                   முன்னெல்லாம், ஐந்து வயசு வரைக்கும் வீட்ல விளையாட விட்டாங்கா. எதுக்கு தெரியுமா ? குழுந்தைகளுக்கு அம்மாவோட அரவணைப்பும், அன்பும் மிகுதியாய் கிடைக்கட்டுமே என்றும், கூட்டுகுடும்பத்தில், தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அத்தை இப்படி நிறைய உறவுகள் குழந்தையைக் கொஞ்சறதல சந்தோஷப்படுவாங்க. குழந்தைகளும் மகிழ்ச்சியாக துள்ளி விளையாடும்.
                                நம்ம முன்னோர்கள் எது செய்தாலும், ஒரு காரணகாரியம் இல்லாமல் செய்ததில்லை. இரண்டு வயசிலேயே குழந்தையைக் கொண்டுபோய் கின்டர்கார்டன்ல விட்டாஅது வளர்ந்து ஆளாகி, நாம வயசான காலத்துல…. நம்மளைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்துல சேர்க்கறதுக்கு நாமும் ஒரு காரணமாயிடறோம் இல்லையாஎன்றான் நடேசன்..
                இரு..இரு ரூட் மாறுதே, ஆங், வந்துட்டேன். இப்ப கின்டர்கார்டன்ல சேக்கறதுக்கு மாசம் பீஸ் நாலாயிரமோ, ஐயாயிரமோ  கேக்குறாங்க. அவங்க  ரொக்கமா  வாங்கிட்டு, என்ன செய்யறாங்க, நாம குழந்தையை வீட்ல விளையாடுற மாதிரி விளையாட விடுறாங்க. அம்புட்டுதேன்.
                இப்ப இது கூட நல்ல பிசினஸ் ஆயிடுச்சு. பெரிய பங்களாவில இருக்கறவங்களுக்கு, நேரம் போகல, வீட்லே ஆளு துணையும் குறைச்சல். யோசிச்சாங்க. வரும்படிக்கு என்னு வழின்னு பார்த்து பங்களா வாசல்ல …” இது தரமான குழந்தைகள் காப்பகம். இங்கு அபாகஸ் முதல் ஆல் வேர்ல்டு விபரங்களை சொல்லி தருகிறோம்-ன்னு விளம்பரம் அளித்து விடுகிறார்கள்.

                அந்த விளம்பரத்த பார்த்து, குழந்தைகளுக்கு
ஆச்சா இரண்டு வயசுன்னு குழந்தைகை கூட்டிட்டு போய், அதுக்கு தேவையான பால், பிஸ்கட், இன்னும் விளையாடறதுக்கு தேவையான பொம்மைகள் கூட  கொடுத்து கின்டர்கார்டன்ல விட்டுட்டு வந்து, அவங்க டி.வி பாக்கறதுக்கு ஒக்காந்திடுவாங்க.

                வீட்ல குழந்தை இருந்தா, சாதாரண ஒரு காட்டன் ஜட்டியைப் போட்டு விட்டுடுவாங்க, ஆனா, கின்டர்கார்டனுக்கு, பிரிகேஜிக்கோ கூட்டிட்டு போகும்போதுடைட்டா டிரவுசரைப்போட்டு, சட்டையை மாட்டிவிட்டு, வேர்க்க விறுவிறுக்க, குழந்தைகள் ஒடம்பலடிரவசுரோட தழும்புதான் மிச்சம்              

                பால், பிஸ்கட், பொம்மைகளைக் கொடுத்துவீட்ல விளையாட விட்டு அழகுபார்த்தா, காசுக்கு காசும் மிச்சம், மனதுக்கும் ஒரு திருப்தி கிடைக்கும். உம், எங்கே நடக்குது மீண்டும் ஒரு பெருமூச்சை விட்டான் நடேசன்.
                எல்லா அம்மாக்களுக்கும், அவங்க குழந்தைகள் நல்ல டிரஸ் போட்டுகிட்டு, ஆங்கிலத்துல சகஜமா பேசினா, உச்சி குளிர்ந்திடும். இது இயல்பா போச்சு.
                இந்த மனோபாவம்தான், கல்வியை வியாபாரமா மாற்றியதற்கு  ஒரு காரணம்., தமிழகத்தை ஆண்ட கர்மவீர்ர் காமராஜர் எந்த கார்ன்வென்ட்ல படிச்சார். அவர் நமது இந்தியாவின் தலைமையையே தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தாரில்லையா?
                அறிஞர் அண்ணா, சாதாரண பள்ளியிலதான் படிச்சார். பள்ளிஇறுதி தேர்வில் ஒருமுறை தோல்வியும் அடைந்தார். ஆனால், பின்னாளில், யேல் பல்கலைக்கழகமே போற்றும் அளவிற்கு உயர்ந்தார் அல்லவா?
                புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், டாக்டர் கலைஞரும் எந்த கார்ன்வென்ட்டில் படித்தார்கள். எல்லாம் அனுபவ அறிவுதான். இவர்கள் நிர்வாகத்திலும், மக்களிடையேயும், புகழ் பெறவில்லையா?... அதனால, இப்பவே குழந்தைக்கு கார்ன்வென்ட்ல ஆட்மிஷன் பார்ம் வாங்கறதுக்கு ஓடாதே, குழந்தையைகுழந்தையா இருக்க விடுடா, சிறையில அடைக்கிற மாதிரி பண்ணிடாதேடா”” என்றான் நடேசன்.
                சரி….சரிநீ பேசற அளவுக்கு என்னால விளக்கமா பேச தெரியாது,. நீ இப்ப என்ன என்ன சொன்னியோ, அதை அப்படியே என் மனைவிக்கிட்ட சொன்னின்னா…. ன்னு முகுந்தன் இழுக்க…. ”இரு.. இரு, போன்ல உன்னைப்போல இன்னொரு நண்பன், கார்ன்வென்ட்ல அப்ளிகேஷன் வாங்கறேன்-ங்கறான். அதைப் போய் நிறுத்தணும் என புறப்பட்டு போனான். அவன் போனவுடன்.
                அப்போது, ”ஸார்,  நான் வெளியுர்ல இருந்து வந்திருக்கேன், இங்க ஒரு பெரிய கார்ன்வென்ட் இருக்காமே, அதில என் குழந்தைக்கு அட்மிஷன் பார்ம் வாங்கணும்  அந்த கான்வென்ட் எங்கே இருக்கு ? என்று கேட்டான்  ஒருவன்.
                 முகுந்தனுக்கு, என்ன சொல்வது என்று தெரியாமல், திருதிருவென முழித்து, ஒரு தாளில். அட்ரஸை குறித்து கொடுத்தான். அந்த அட்ரஸ் நண்பன் நடேசனுடையது.                           

                                                                                                                               

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...