சாதாரண
கணேசன் சிவாஜி கணேசன் ஆனது எப்படி
“நாம்
ஆபிசுக்கு டிபன் பாக்ஸ் கொண்டு போகிறோம்… மதிய உணவு வேளை பசி வயிற்றைக் கிள்ளுகையில் பாh;த்து,
டிபன் பாக்ஸ் திறக்க முடியல” என்ன செய்யறோம். ஒருவரிடம்
கொடுக்கிறோம். அவரால் முடியவில்லை அடுத்து ஒருவா; இப்படி ஒவ்வொருவராய் மாற்றி மாற்றி கொடுத்து… கடைசியில்;
ஒருத்தர் அந்த டிபன் பாக்ஸை திறந்து விடுகிறார் வெற்றிக்கரமாக.
அவர் முகத்தில் ஒரு பூரிப்பு இழையோடும்.
சாதாரண கணேசன் சிவாஜி கணேசன் ஆனது எப்படி
அவருக்கு நன்றி
புன்னகையை பரிசாக அளித்து விட்டு சாப்பிடுகிறோம்.
இதேசூட்மும்தான் இதில் இருக்கிறது. எதில் என்கிறீர்களா?
இராமாயணத்தில்
இருக்கிறது. சீதையை மணமுடிக்க நடத்தப்பட்ட
சுயம்வர நிகழ்ச்சியில் வில்முறிக்கும்
போட்டி. அதில் கலந்து கொண்ட இராமர்
முதலிலேய போய் நான்தான்
முதலில் போட்டி போடுவேன் என நின்றாரா… இல்லையே?
என்னதான் நடக்கிறது என்று கவனித்து நுணுக்கங்களை அலசி ஆராய்ந்தார்.
“எல்லா
இளவரசர்களின் பலப்பிரயோகங்களுக்கு ஆட்பட்டு அந்த வில்,
தொய்ந்து பலவீனமாகி, இராமன் கரங்களால்
முறிகிறது கடைசியாக. இராமரால்
முறிக்கப்பட்டது என்பது மதவாதிகளின் நம்பிக்கை. அதில் நாம் குறிக்கிட வேண்டாம்.
அப்படியே இருந்து விட்டுப்போகட்டும்.
அதையே யதார்த்தமாக பார்த்தால், டிபன்பாக்ஸ்
கதைதான்.
எதையும் கவனித்து அலசி
ஆராய்ந்திருக்க தெரிந்திருக்க வேண்டும். வெறும் கனேசன் ஆக
இருந்தவர் பின்னாளில்
சிவாஜி கனேசன் ஆகி உலகம் போற்றும் நடிகர் திலகமானது எப்படி? அவரின் கிரகிக்கும்
திறன்தான் கைக்கொடுத்தது. ஓவ்வொரு மனிதர்களின் நடை,
உடை பாவனை எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அலசி ஆராய்ந்து கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் அவரிடையே இருந்தது. செவாலியே பட்டமும்
கிடைத்தது.
சுற்றுலா நாட்களில்
மலைக்குன்றுகளில் பயணம் மேற்கொள்வோம். ஆநாவசியமாக ஒரு கருங்கல்லின் மீது அமா;ந்து அரட்டை அடித்து விட்டு நகர்வோம். அதே கல் ஒரு
சிற்பியின் கண்களில் தென்படுமானால், அதில் தேவையில்லாதவற்றை
செதுக்கி ஒதுக்கி தள்ளி விட்டு வணங்கும் சிலையாகவோ, கலைப்பொருளாகவோ
பொதுவாக்கி தருவான். அவனிடத்தில் இருப்பது
அந்தக் கல் தேறுமா தேறாதா என அலசி
ஆராய்வது.
சமயங்களில் குழந்தைகள் நோட்டுபுத்தகங்களில்,
ஏன் சுவற்றில் கூட கிறுக்கி
வைக்கும். அந்த கிறுக்கல்களுக்குள்ளும்…… “ஒரு
மாh;டன் ஆh;ட்” ஒளிந்திருக்கும். நாம் அலசி ஆராய்வோமோ... இல்லையே.. அதை
அலட்சியப்படுத்தி…. நாலு சாத்து சாத்தி அடக்கி
விடுவோம். இயற்கை நமக்கு மரங்களை
தந்துள்ளது. அது நமக்கு தேவையான ஐPவகாற்றை அளிக்கிறது. ஆனால்
அதை வெட்டி விறகாக்குகிறோம்.ஆலசி
ஆராய்ந்தால் காடுகள் குறையாது
அன்றாடம் நாம் வீசி எறியும் குப்பைகள் கூட, இன்னொருவருக்கு
வருவாயாய் மாறுகிறது, ஏனென்றால் எப்பொழுது குப்பைகள் விழுமென்று…. அலசுகிறாh; கோணிப்பையோடு..
“அலசி
ஆராய்பவனுக்கு சந்தர்ப்பம் கைக்கொடுக்கும்”
தோல்வி என்பது
துவண்டு விடுவதற்கல்ல… நாம் அலசி ஆராய்வதற்கு என்று
எடுத்துக் கொள்ள வேண்டும். என்ன குறைபாடுகள் உள்ளன என்பதை கவனிக்க சொல்லும் அறிவிப்பாகின்றன.
ஒரு தொழில் நிறுவனம் அதில் திடிரென “தொழிலாளா;கள் கூடி…கூடிப் பேசுகிறார்கள்..
மேனேஐர்; ஒரு தொழிலாளியை ஏகவசனத்தில் பேசி அவமரியாதை செய்து விட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போரட்டம் நடத்த
முன்னேற்பாடுகளுக்கான பேச்சு அது.
அந்த பேச்சை மேனேஜர்
உடனே அலசி ஆராய்ந்து, ஈகோ பார் க்காமல்
அந்த தொழிலாளியிடம் தோழமையோடு பேசி இணக்கமாக போய் விட்டால் போராட்டம் பிசுபிசுத்து
விடும். . அதை அலசி ஆராயாமல்
விட்டால் என்ன ஆகும்?
ஒரு மரத்தில் இருக்கும்
தேன்கூட்டைப் பாருங்கள். தேனீக்கள்
சுற்றி
திரிந்து ஒவ்வொரு மலரில் இருந்தும் தேனெடுத்து வந்து கூட்டில் சேகரிக்கும்.
அதைக்கலைத்து விட்டால்கூட ஆங்கேயே கவனித்து சுற்றி சுற்றி வந்து மீண்டும் அதே
இடத்தில் கூடு கட்டி தேனை சேகரிக்க துவங்கி விடும்.
; “ காதலுக்கு கண்கள் இல்லை” என்பார்கள். உண்மையில் அதுவல்ல. ஆராய்ந்து பார்க்க
நேரமில்லை அவா;களுக்கு எதையும். அவர்களின்
நோக்கமே அவள் கிடைப்பாளா? அவன் கிடைப்பானா? ஏன்று .கிடைத்தபின்புதான் அலசி ஆராய்வார்கள் ஒருவர் குறைகள் மற்றவருக்கு பெரிசாக தோன்றும். ஆகவே
காதலிக்கும்போதும் ஆறஆமர அலசி ஆராயுங்கள்
…
ஓவ்வொன்றையும் அலசி ஆராயுங்கள் , வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்