மீராவின் காதலிலே
காரத்திலே
ஓர்சுவை உண்டு
கற்கண்டிலே
இனிப்பு உண்டு
சீரகத்திலே
செரிக் கின்ற
சீர்மிகு
ஆற்றல் உண்டு
சீரதிகம்
கேட்கும் அண்களின்
சிந்தையிலே
சோம்பல் உண்டு
மீராவின்
அன்புக் காதலிலே
மெய்மறக்கும்
கண்ணன் உண்டு
கம்பனவன் சொல் நயத்தில்
கவிகள்
பலவும் உண்டு
கொம்பனவன்
யானையிடம்
மூர்க்க
குணமும் உண்டு
நம்பும்
பேர் வழிகளுக்கு
நிச்சயம்
கடவுள் உண்டு
வம்பளக்கும்
மாந்தர்களுக்கு
கொட்டு
பல உண்டு!
Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்