டாப்ஸ்டார் நடிகருக்கு
டாக்டர் தந்த விநோத சிகிச்சை ஆலோசனைகள்
”உறலோ! டாக்டர் சாரா! நான் டாப்ஸ்டார் ஜெய் பேசறேன்.
எனக்கு உடம்பு சரியா இல்லாதமாதிரி தோணுது… நீங்க வீட்டுக்கு வர்றீங்களா? இல்லே
நானே வரட்டுமா?”
”நீங்க பெரிய டாப்ஸ்டார் நானே ஒங்க வீட்டுக்கு
வந்திடறேன்”வெயிட் பண்ணுங்க
”வாங்க! டாக்டர் வாங்க! வரவேற்றார் டாப்ஸ்டார் ஜெய்
”மிஸ்டர் ஜெய்! சொல்லுங்க என்ன பிராப்ளம்?”
”டாக்டர்! அழுதா கண்ணுலா தண்ணீ ஆறா ஓடுது”என்ன்ன்னு
பாருங்க!
”ஆங்! வாயைத் திறங்கோ” ENNATHULI
”டாக்டர் நான் கண்ணுல
தண்ணீயா வருதுன்னு சொன்னேன்!
”சரி! கண்ணைத் திறங்கோ!
டாக்டர் கண்ணு திறந்தேதானே இருக்கு
இன்னும் நல்லா திறந்து பார்க்கணும். அப்பத்தான் செக்
பண்ண முடியும்
”டாக்டர் ஒரு கண்ணா? இரண்டு கண்ணா?
”போங்க ஸார்… ஒரு கண்ணை மூடி ஒரு கண்ணை திறந்து அடிக்க
நான் என்ன உறீரோயினா? என்ன?
ரெண்டு கண்ணும்தான்”
டாக்டர் பரிசோதனை
செய்கிறார்.
”ஸார் ! இந்த சீட்டுல எழுதியிருக்கிற மாத்திரை பேரை
நீங்க சினிமா ரிகல்சல்ல எப்படி டையலாக்கை மனப்பாடம் பண்ணுவீங்களோ அப்படி மனப்பாடம்
செய்துகிட்டே ஜி.எஸ்.டி ரோடுல கார்ல போனீங்கன்னா அங்கன நிறைய மருந்து கடைகள்
இருக்கும்… அதில ஏதாவது ஒரு கடையில வாங்கிடாதீங்க. ” இந்த பிரிஸ்கிரிப்ஸன் பேப்பர்ல எந்த கடைப் பேரை பிரிண்ட்
போட்டிருக்கோ! அந்த கடையிலதான் வாங்கணும். அப்பத்தான் நோய் சீக்கிரமா குணமாகும்.
தெரிஞ்சுதா..
சரிங்க டாக்டர் இப்ப பொதுவான விஷயத்தை பேசுவோமே” என்று
ஆரம்பிக்கிறார் டாப்ஸ்டார் ஜெய்.
”டாக்டர்…நான் சினிமாவில நடிக்கறதைப் பார்த்து நிறைய
பேர் ”மெர்சல்” ஆகிடறாங்க டாக்டர் ஆகிடறாங்க”
”அப்படியா? இப்போ லேடஸ்டா ”மெர்சினிடோனியா”ன்னு ஒரு
மருந்து வந்திருக்கு . அதை ஒரு டஜன் பாட்டில் வாங்கி சாப்பிடுங்கோ.! மத்தவங்க
ஒங்களைப் பார்த்து மெர்சல் ஆகாம ”சின்னத்தம்பி யானையை கும்கி யானை பிரண்டு
பிடிச்சுகிட்டா மாதிரி ஆகிடுவாங்க”
அப்புறம் டாக்டர் ஊரே என் நிழலைப் பார்த்து
கைத்தட்டுது… மாலைப் போடுது ஏன் ”என் கட்அவூட்டுக்கு பாலாபிஷேகம் கூட பண்ணுது” ஆனா
இராத்திரில என் மனைவி … என் உருவத்தை இருட்டில் பார்த்து கிரீச்”ன்னு அலறா? ஒரு
வேளை அவளுக்கும் ஏதாவது வைத்தியம் பார்க்கணுமா? டாக்டர்! SHORT
STORIES
ரொம்ப நல்லதா போச்சு! வந்த து வந்தேன் அவங்களுக்கும்
டிரிட்மெண்ட பார்த்துடலாம்.
”இராத்திரியிலே ”கிரீச்”ன்னு கத்துறாங்கன்னா?
அவங்களுக்கு…”கிரகஸ்தானியா” ன்னாவா இருக்கும்.
அப்படியென்றால் என்ன டாக்டர். அது ஒரு புது வியாதி…
உலகத்துல இதுக்கு மருந்து மாத்திரை கிடையாது. ஆனால்…. பூமிக்கு வெளியே அண்டவெளியில
இருக்கிற கிரகங்கள்கிட்டே ஒரு அலைக்கதிர் பரவும். அது அதிகமா ஒங்க மனைவிக்கு
பரவுறதன்னால… அப்படி கிரீச்ன்னு சத்தம் போடறாங்க.
ஆதனால… என் பிரண்ட்… ஸ்பேஸ்லதான் ராக்கெட் லாஞ்சரா ஒர்க்
பண்றான்”அவன்கிட்டே சொல்லி நல்ல மருந்தா
கொண்டு வர சொல்றேன். என்ன ஒரு பாட்டில் மருந்தே ஓராயிரம் டாலர் ஆகும் பரவாயில்லையா?
”அப்ப! ஓராயிரம் டாலரே வா”ன்னு நான் பாடினால் வியாதி
குணமாகுமா டாக்டர். அட நீங்க பாடினாலும்… ஒங்க மனைவி பாடினாலும் குணமாகாது.
மருந்து சாப்பிடணும்.
”ஒங்க மனைவி நிஜத்தைப் பார்த்து பயப்படறாங்க. ஆனா மக்கள்
ஒங்க நிழலைப் பார்த்தே பாலாபிஷேகம் பண்றாங்க. இதாங்க யதார்த்தம்ங்கிறது.
சரிங்க டாக்டர்
மருந்து சீட்டுல எமுதியிருக்கிறது புரியலையே!
”எனக்கே சமயத்துல புரியாது. ஆனா .மெடிக்கல்
ஷாப்”காரங்களுக்கு நல்லாவே புரியும். அவங்க பார்த்துக்குவாங்க”
”ஒரு வேளை அவங்க பார்க்கறதல தப்பாயிட்டா.. நான் மறுபடியும்
ஒங்களைப் பார்க்க வேண்டியிருக்குமா டாக்டர். அதெல்லாம் பயப்படாதீங்க. நீங்க உறீரோ?
பயப்படலாமா? தைரியா போங்க நான் இருக்கேன்“
டாக்டர் பீஸ் எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா ”செக் போட்டு
கொடுத்திடுவேன்”
”ஸார் விளையாடுறீங்களா? நீங்க எவ்வளவு பெரிய
டாப்ஸ்டார்..ஒங்க கிட்ட பீஸா வேணாம். ஆனா ஒங்க மனைவி உங்கள் உருவத்தைப் பார்த்து
பயப்படறாங்க சொன்னீங்க பாருங்க. அதுக்கு ஸ்பேஸ்ல இருந்து மருந்து வரும். அதற்கும்.
ஸ்பேஸ் போக்குவரத்து செலவு மொத்தமா …. ஒங்களுக்கு ஈசிஆர் ரோடுல ஒரு சொகுசு பங்களா
இருக்குதாமே. அதை எழுதிக் கொடுத்தீங்கன்னா” போதும். ”என்றார் டாக்டர்.
”
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்