Skip to main content

வாங்காத வாடிக்கையாளருக்கும் கிப்ட் எந்த கடை தெரியுமா


                வாங்காத வாடிக்கையாளருக்கும் கிப்ட் எந்த கடை தெரியுமா
                என்னப்பா இராசு, நான் வந்து அரைமணி நேரமாச்சு, என்னைக் கவனிக்கவே மாட்டேங்குற, பிஸியா வியாபாரம் பன்றே போலிருக்கேகேட்டார் நாராயணன்
                வாங்காத வாடிக்கையாளருக்கும் கிப்ட் எந்த கடை தெரியுமா
 வாங்காத வாடிக்கையாளருக்கும் கிப்ட் எந்த கடை தெரியுமா

                அட நீ ஒண்ணு, வர்றது இன்னவோ நாற்பது பேர்தான், ஆனா வாங்குறது என்னவோ நாலு பேருதான்,  புரியமாட்டேங்குது எனக்கு. அதான் இவ்வளுவு பேர் வாங்காத போறாங்களேன்னு கவலையில, ஒன்னைய கவனிக்கவில்லைப்பா    நான் செலவை இறுக்கி பிடிச்சு ஓட்டுறதால, கடையை திறந்து வெச்சிருக்கேன். இல்லேன்னா , பெரிய திண்டுக்கல் பூட்டா வாங்கி பூட்டிட்டு வீட்லே தூங்க வேண்டியது தான் கவலைப்பட்டார் இராசு. ENNATHULI

                கடைல வேலை செய்யறவங்க, கஸ்டமர்கிட்ட மரியாதையா நடந்துக்கிறாங்களா ? கேட்டார் இராசு
                அதெல்லாம் மரியாதையாத்தான் நடந்துக்கிறாங்க
                தரமான பொருட்களா வாங்கி வைச்சிருக்கியா”? கேட்டார் இராசு
                தரமான பொருட்கள்தாம்மா”, டேய் மணி, ”ஐயாவுக்கு அந்த குக்கரை எடுத்து காண்பிஎன்றார். SHORT STORIES

                குக்கரைப் பார்த்த நாராயணனின்  கண்களில் ஐ.எஸ்.ஐ முத்திரைப் பளிச்சிட அவருக்கு  திருப்தி.
                 ஆட்களும் மரியாதையா நடந்துக்கிறாங்க, பொருட்களும் தரமானதா இருக்கு. ஆனா, நாற்பது பேர்ல நாலுபேருதான் வியாபாரம் பன்றாங்க, யோசித்தார் இராசு
                இராசு ஒன் கடையில எத்தனைப் பேர் வேலை செய்யறாங்க என நாராயணன் கேட்டதற்கு, ஆறு பேர் வேலை செய்யறாங்க என்றார்.
                நாலு பேர் வியாபாரத்திற்கு, ஆறு பேரா,? நாலு பேரை உள்ளாற வைச்சிகிட்டு, இரண்டு பேரை கடை வாசல்ல நிக்க வெச்சிடுஎன்றார் SHORT STORIES

                ரெண்டு பேரை கடை வாசல்ல, வெறுமனே நிக்க வைச்சு சம்பளம் கொடுக்க சொல்றீயா” ?
                வெறுமனே நிக்க சொல்ல்லே, நாற்பது பேர்ல, வாங்காத திரும்பி போற முப்பத்தாறு பேரை பிடிச்சு, அவங்க்கிட்ட நயமா பேசி, எதுக்காக வாங்காம திரும்பிபோறீங்க, ஏதாச்சிலும் குறையான்னு கேட்டா, அவங்களால நேரடியா பதில் சொல்ல முடியாது. திரு.திருன்னு முழிப்பாங்க. அந்ந நேரமா பார்த்து அவங்க கையில , ”எங்க நிறுவனத்திற்கு வருகைப் புரிந்தமைக்கு மிக்க நன்றி, மீண்டும் எதிர்பார்க்கும்என்ற சிறிய அட்டையோடு,  ஏதாவது ஒரு பொருளைக் கிப்டா  கொடுத்துடுஎன்றார் நாராயணன். BUSINESS

                என்னப்பா நாராயணா, வியாபாரமே பண்ணாத ஆட்களுக்கு கிப்டா, எல்லா கடைகளிலேயும், வாங்கறவங்களுக்குத்தான் கிப்டு தருவாங்க, ஆனா நீ, வாங்காத ஆட்களுக்கு கிப்டு தர சொல்றே, இன்னும் செலவை இல்லேப்பா இழுத்து விடுறீயே, ”ன்னு எதிர்கேள்வி கேட்டார் இராசு
                ஒரு மாசம் இந்த நடைமுறையைக் கடைப்பிடி, நான் ஊருக்கு போய்ட்டு அடுத்த மாசம் வர்றப்போ வியாபாரம் எப்படி இருக்குன்னு சொல்லு என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.
                 ஒரு மாதம் கழித்து வந்தார், நாராயணன், ”என்னப்பா நான் வந்து ஒரு மணிநேரமாச்சு, கவனிக்கவே மாட்டேங்கறேஅதே டையலாக்,     
           நாராயணா, இங்க பக்கத்துல ஒக்காருன்னு, அவர் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து, ஒன்னோட  யோசனை நல்லாத்தாம்பா இருக்கு, ஆனா, அதுக்கான அர்த்தம்தான் புரியில, இப்ப சொல்லேன்என கேட்டார். இராசு
                முன்னே, நாற்பது பேர் வந்து, நாலு பேர் வியாபாரம் செய்தாங்களா? இப்போ, நாற்பது பேர் வந்து நாற்பது பேரும் வியாபாரம் செய்யிறாங்களா? வாங்காத முப்பத்தாறு பேர், கிப்டோட வீட்டுக்கு போனதும் யோசிப்பாங்க, பொருளே வாங்காம, கிப்ட் மட்டும் வாங்கிட்டு வந்திட்டோமே- எதுக்கு கிப்ட்டுன்னு? ஒரு கில்ட்டி கான்சியஸ் உறுத்தும். அதாம்பா குற்ற உணர்வுஅதனால….. மறுபடியும் ஒன் கடைக்கு தேடிவந்து பொருளை வாங்கிட்டு போறாங்கஇதுதான்மா விஷயம், பெரிசா ஒண்ணுமில்லேப்பா என்றார் நாராயணன்.
                 நல்ல யோசனை சொன்னேப்பா, ”டேய் செல்வம், ஐயாவுக்கு அந்த லெதர் பேக் கிப்ட் எடுத்து வாஎன்றார் இராசு.
              , என்னப்பா நான் விட்ட அம்பு எனக்கே திருப்பி விடுறேசிரித்துக் கொண்டே கிளம்பினார் நாராயணன்.                                                                                                                                                                     


Comments

Popular posts from this blog

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

உன் தோளில் சாய்ந்து- Un Tholil Saainthu

Actor Vijaykanth death poem