பிச்சைக்காரன் உளறல் உதவி செய்யுமா
மிகவும் தைரியசாலியான இராமானந்தம் அந்த நோட்டிஸைப்
படித்து பார்த்ததும் இடிந்து
போய் உட்காh;ந்து விட்டார்
பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் முதலாளி பல தொழில்களில் முதலீடு போட்டு பல ஆண்டுகள்
வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவருக்கு நெருக்கடியாய் வந்து சேர்ந்த து அந்த வங்கி
நோட்டிஸ். ennathuli
பிச்சைக்காரன் உளறல் உதவி செய்யுமா |
புரியாமல் குழம்பி…. முகம் தெரியாதவர்;களுக்கு கூட போன் செய்து” அண்ணே! பேங்க்ல இருந்து
நோட்டிஸ் வந்திருக்கு…. கொஞ்சம் பணமுடையா இருக்கு நீங்க உதவி செய்தா..என்று
முடிப்பதற்குள்.. அட! நானே அந்த நிலைமையிலதான் இருக்கேன் கோபிச்சுக்காதப்பா” என்று
அலைபேசி இணைப்பினை துண்டித்தார் ஒருவர்.
இன்னொருவர்.. ”அட டா.. ஒரு வாரத்திற்கு
முன்னால்தான் பில்டிங் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிட்டேன்பா”
என்றார் இன்னொருவர். Short stories
”அண்ணே! கோவிச்சிக்காதீங்க…”என் பையன்
கல்யாணம் வைச்சிருக்கேன்” ஆதனால உங்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில இருக்கேன்”
என்று ஒருவர்.
இப்படி ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்லி
உதவி செய்ய மறுத்த தில் குழம்பி போனார் இராமானந்தம்.
ஆறுதலான வார்த்தைகள் எவரிடமிருந்தும்
வரவில்லை… ஒரு சிலரிடமிருந்து “நாங்களே ஒங்க
நிலைலதானே இருக்கோம். என்ன செய்யட்டும்” என பலர்
கையை விரித்தனர்;.
வீட்டுக்கு போனார் நிம்மதியாய் சாப்பிட முடியவில்லை தூங்க முடியவில்லை…. அவரின் முகவாட்டத்தைப்
பார்த்து ”ஏங்க ஏதாவது பிரச்சினையா? என்ற கேள்விக்கு அதெல்லாம் ஒண்ணுமில்லை என்று
சமாதானப்படுத்தினார். மனதிற்குள் மனைவியின்
மனசை கஷ்டப்படுத்துணுமா”என தனக்குத்
தானே பேசிக் கொண்டார்.ennathuli
மாலை நேரம் கோவிலுக்குத்தான் போவோமே என போனார்
ஐயா; வரவேற்று …. “வழக்கமா
அம்மாத்தானே வருவாங்க… நீங்களே வந்துட்டிங்க… புதுசா தொழில்
ஏதாச்சும் தொடங்க போறிங்களா” வினாவினை எழுப்ப “அட போங்க சாமி நீங்க வேற... “இருக்கிற தொழிலே நிலைக்குமோ...நிலைக்காதோ அல்லாடிக்கிட்டிருக்கேன்…” என்றார் .
ஆதெல்லாம் ஒண்ணும்
ஆகாது...பகவான் பாத்துப்பார்;… ஐயர் சொல்ல… “பகவான்தானே நல்லாத்தான் பாத்துக்கிறார்…” விரக்தியாய்
புலம்பி … பிரகாரம் சுற்றி வெளியே வரும்பொழுது… “பழைய குப்பைய கிளறுடா” அப்பத்தானே கெடைக்கும்” சத்தமான குரல் தொடா;ந்து ஒலித்துக் கொண்டே இருக்க….. அதைக் கேட்டு… செருப்பு விட்ட
கடைக்காராpடம் “அது யாருப்பா...
சம்பந்தமில்லாம ஏதோ பேசிட்டிருக்கார்.
ஸார் “அது ஒரு
பைத்தியம்... ஏதாச்சும் உளறிட்டிருக்கும்” என்ற கடைக்காரரின் பதில் அவருக்கு
திருப்தியாய் இல்லை. ஏதோ விஷயம் இருக்கிறது
அந்த குரலில்…. என்று
வீட்டிற்குள் நுழைந்து… மனைவியை
அழைத்து பரண்ல இருந்து பழைய
இரும்புப் பெட்டியை எடுக்கணும் அதில
கம்பெனி பேப்பர்; ஒண்ணு இருக்கான்னுன
பாh;க்கணும் என்று
சொல்லி. பெட்டியை இறக்கி பார்;க்க...எல்லாம் பழைய குப்பைகள்….ஒவ்வொரு பேப்பராய் பார்த்து கிளற...கிளற… ஒரு டாக்குமென்ட்
கண்ணில் பட்டது. அதை எடுத்துப் பார்த்த போது பங்காளிகளின் தகராற்றில்... கடைசியாய் அது
அவர் தாத்தா எழுதிக்
கொடுத்த டாக்குமென்ட்… பூர்வீக சொத்து… இராமானாந்தத்திற்கு
என்று இருந்தது. மறு நாள் வங்கியில் போய்
டாக்குமெண்டை கடனுக்கு ஈடாக வைத்தார்
“ பைத்தியத்தின்
உளறல் கூட
சமயத்தில் உதவியதே. அவர் பைத்தியமாய் இருக்காது என்று யாரோ மகானாய் இருக்கலாம்
என்று மனதில் வணங்கி உருகி நன்றி சொன்னார்.
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்