2/23/2019

கை-ருசி கேட்டரிங் சர்வீஸ்


ஏன்டி கமலா, பசங்க எல்லாம் ஸ்கூலுக்கு போயிட்டிங்களாஒன் வீட்டுக்காரர் ஆபீசுக்கு போயிட்டாரா நீ எத்தனை மணிக்கு வர்றே?“ அரட்டையடிக்கத்தான் கேட்டாள் குமுதா.
  ஒரு பிரபல தொழிற்பேட்டையின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும்  எல்லா குடும்பத்தலைவிகளும் சேர்ந்து அரட்டையடிப்பதுதான் அவர்களின் வாடிக்கை.
  எல்லோரும் கூடினார்கள்…. ஏன்டி நம்ம ஏரியாவுல புதுசா ஒருத்தி குடிவந்திருக்கா போல இருக்கே, அவ பேரு கூட லலிதான்னு சொன்னாங்களே...என தேடஅவளும்தான்  வந்திருக்கா, “விட்டுடுவோமா நாங்க என்றாள் ஒருத்தி.. அறிமுகம் செய்து கொண்டார்கள். ennathuli கை-ருசி கேட்டரிங் சர்வீஸ்
https://ennathuli.blogspot.com
கை-ருசி கேட்டரிங் சர்வீஸ்


  ஏன்டி, “நீ ஒன் மாமியாகிட்டே போன்ல பேசினாயாமே, அவங்கதான் சரியா        மூஞ்சிக்கொடுத்து பேசல போலகேள்விப்பட்டேன் என்றாள் ஒருத்தி.. இன்னொருத்தியிடம்.
  அட, ஒனக்கு தெரிஞ்சுபோச்சா.. சரி..சரி. அதை விடு
        அடியே, அந்த நாலாவது வீட்ல, அந்த பொண்ணு படிச்சுட்டு வீட்ல சும்மாத்தானே இருக்குகல்யாணத்தை முடிச்சி அனுப்பிடலாம்தானே..இன்னும் வீட்ல வைச்சுகிட்டு.. காலகாலத்துல முடிக்கவேண்டியதை முடிக்காம விட்டா அவங்களுக்குத்தானே கஷ்டம்இப்படி ஒருத்தி
        அந்த கீதா, ஒருத்தனை லவ் பன்றாப்பேல இருக்கு. அவங்க வீட்டுக்கு தெரியுமோ...தெரியாதோ….கவலைப்படுவது போல அலசினாள் அடுத்த பெண்ணின் தனிப்பட்ட விவகாரத்தை...   இப்படி ஒருவருக்கொருவர்  அடுத்த  வீட்டு விவகாரங்களை பேசி...பேசி..     சமையலுக்கு தாவினார்கள்….        Motivated story                                                   
   அடியே, இன்னைக்கு என்ன சமையல்….என கேட்க… “வத்தக்குழும்பு வெச்சி, இரசம் வெச்சுட்டேன்அவ்வளுவுதான்.   
        அப்படியா, ”நீதான் வத்தகுழம்பு ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே ஐமாய்ப்பே எங்களுக்கு தெரியாதா ?
        அடுத்து ஒருத்தி,  நான் வெண்டைக்காய் சாம்பார் வெச்சேன். அப்புறம் கருணைக்கிழங்கு வறுத்துட்டேன். என்றாள்.
                        நீ சாம்பார் ஸ்பெஷலிஸ்ட் அதான் அதப்பிடிச்சுக்கிட்டு விடாம அதையே செய்யறேன்.    
        ஓவ்வொருவராய்...சமையல் பற்றி பேச..பேச …… கேட்டுக் கொண்டிருந்த லலிதா
        நானும்தான் ரசம் நல்லா வைப்பேன். என் கையால வைச்ச  ரசத்தை ஒரு தடவை  சாப்பிட்டா அப்புறம் என்னைய... அவ்வளவு சீக்கிரம் மறக்கமாட்டாங்க. என் வீட்டுக்காரர் கோபமா இருந்தா….இந்த ரசத்தை வெச்சுத்தான்கோபத்தை தணியவைப்பேன்னா..பார்த்துக்கங்களேன்” short stories
        .”எல்லாரும் சமையல்ல ஒவ்வொரு அயிட்டத்துல ஸ்பெஷலிஸ்ட்டா இருக்கீங்க. அதனால நான் ஒரு ஐடியா சொல்லலாமா...யாரும் தப்பா நெனைச்சுக்கமாட்டிங்களே...”என கேட்டாள், லலிதா
         தாராளமா சொல்லலாம்  என்று குரல் கொடுத்தனர்
        இந்த ஸ்பெஷலிஸ்ட் சமாச்சாரத்தை வெச்சு, நாமளே மெஸ் மாதிரி சாப்பாடு  தயார் செய்து, பக்கத்துல இருக்கிற கம்பெனிகளுக்கு குடுத்தா, நாமும் சம்பாதிக்கலாம்.  நேரத்தையும் உபயோகமாக மாத்தலாம்,  சரிதானே என்றாள்.
         அட, இதுகூட நல்ல ஐடியாவாத்தான் இருக்குஆனா, நாம சமைச்சு அதை கம்பெனிக்காரங்க வாங்கணும் இல்ல… “மார்க்கெட்டிங் இன்னா பண்றதுஒருத்தி சந்தேகத்தைக் கிளப்ப….
           அதற்கு, கூட்டத்தில் இருந்த விமலா, அதை நான் பார்த்துக்கறேன். என் வீட்டுக்காரர், ஒரு கம்பெனில சூபர்வைசரா இருக்கார்மதியநேரத்தில தொழிலாளிகளுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணணும்-ன்னு நிர்வாகத்துல பேசிக்கிட்டிருக்காங்கன்னுசொன்னது எனக்கு ஞாபகம் வருது. அதனால முதல்ல அவர் கம்பெனியில் இருந்து அரம்பிக்கலாம். அப்புறம் போக...போக. மற்ற கம்பெனிகளுக்கு போகலாம்என ஊக்கம் கொடுத்தாள்.business
         அந்த கம்பெனிக்கு கேட்டரிங் சர்வீஸ் அரம்பித்தவர்கள்இப்பொழுது அந்த தொழிற்பேட்டையில்  உள்ள பெரும்பாலான கம்பெனிகளில்  கை-ருசி கேட்டரிங் சர்வீஸ்”-ன் உணவுவகைகள்  மதியநேரத்தில் மணமணக்கிறது.
                                                 


No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...