2/14/2019

காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று அவளா…இவள்” என திரு..திருவென முழித்துக் கொண்டு நின்ற வேணு


காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று அவளாஇவள்என திரு..திருவென முழித்துக் கொண்டு நின்ற வேணு
                                               

                கடந்த பத்து தினங்களாக சமையலறையில் தண்ணீர் குடம்டொங்என்ற சத்த த்தோடு வைக்கிறாள். பொதுவாக எதையும் மென்மையாக கையாள்பவள். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாதவள். அப்படிப்பட்டவள் இப்படி நடந்து கொள்கிறாள் என்றால்..ennathuli
https://ennathuli.blogspot.com
காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று அவளாஇவள்” என திரு..திருவென முழித்துக் கொண்டு நின்ற வேணு


            கூடவே பாத்திரங்கள் உருளும் சத்தம் வேணுவின் காதை செவிடாக்கும் அளவுக்கு கேட்கிறது.
                என்ன சத்தம் இதுஎன்று கேட்டால் என்னங்க வயசு திரும்புதா? கமலஉறாசன் படமான புன்னகை மன்ன்ன் படத்தையும் பாடலையும் நினைவுப்படுத்துகிறாள்.love அந்த படத்திற்கு இருவரும் போய் சிரித்து மகிழ்ந்த்தை மறந்து விட்டாள் போலும் அவள் முகத்தில் கொஞ்சநாளாய் சிரிப்பில்லை ஆதலால்  சோறு மல்லிப்பூ போல சிரிக்கவில்லை .ஆனால் சில நாட்களாக சோறு சோறாக இல்லாமல் ஆடி மாத கூழ் போல இருக்கிறது.
                 கேட்டால்….. ”புது அரிசிங்க ..அப்படித்தான் குழைஞ்சிடும்என்று சாக்கு சொல்கிறார்.  மூட்டை அரிசி வாங்கி பல மாதங்களாகி உள்ளது.short stories
                மிளகு இரசம் சூப்பராய் இருக்கும்.  ரசத்தில் உப்பு தூக்கலாய் இருக்கிறது.  வாயில் வைக்க முடியாதவாறு உள்ளது.
                என்ன ரசம் உப்பா இருக்கு? கேட்டால் உங்க நாக்கு சரியில்லே எனக்கு நல்லாத்தான் இருக்கு இதோ அந்த ரசத்தைத்தானே நானும் சாப்பிடறேன்என்று எதிர்வாதம் செய்கிறாள் வேணு காரணம் புரியாமல் தவித்தான்.
                 அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கேட்டாளே. பிறகு பார்க்கலாம் என்று சொன்னதன் காரணமாய் இருக்குமோ!
                ஒரு வேளை அவன் தம்பி கல்லூரி கட்டணம் கட்ட வேண்டும்.  ஐயாயிரம் இருந்தால் தாங்க மாமாஎன்றானே. அதற்குஎனக்கு பணமுடையா இருக்குவேற இடத்துல வாங்கி கட்டிடு என்றோமே அதுவாக இருக்கலாமோ?
                அவங்க அம்மாவுக்கு உடம்பு முடியல என்றபோது அக்கறையாய் விசாரிக்கவில்லை என்ற கோபமோ
                இப்படி எல்லாவற்றையும் மண்டைக்குள் போட்டுக் கொண்டதில் தூக்கமும் பறிபோனது.
                                                                பேசாமல் மௌனம் வேறு சாதிக்கிறாள். என்ன செய்வது எப்படி கேட்பது என்று யோசித்து ஒரு வழியாய்               ஒரு மாலை நேரம்  காயூ செல்லம், என்னாச்சு... மெதுவாய்...அணைத்து தோளைத் தொட்டான் வேணு .....நகன்று படாரென தட்டி விட்டாள்.
                                  மீண்டும.;… மீண்டும் கெஞ்சி….கொஞ்சினான் வேணு கடைசியில்,
         என்ன நடக்குதுரமேஷ் , எந்த சிறுக்கி அவ….. அவளுக்குத்தானா  இது? ஆவேசத்துடன்,
                               ஒரு  பேப்பரை தூக்கி விட்டெறிந்தாள் 
                                 அந்த பேப்பர் மிகவும் கசங்கி பழைய பேப்பராக காட்சியளித்த து. சரியாய் நினைவுக்கு வரவில்லை.
            அதை எடுத்து படித்த பார்த்த வேணு  ப்பு.. இவ்வளவுதானா?   இதற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் .
           சரி..சரிஒனக்கு ஞாபகம் இல்லையா காயூ செல்லம். நான் ஒன்னைக் காதலிக்கும் போது எத்தனையோ காதல் கடிதங்கள் கொடுத்தும் ;அசராத நீ   இந்த ஒரு கவிதைக்குத்தானே மயங்கினே
             எப்படிங்க இப்படியெல்லாம் யோசீக்கறீங்கன்னு…. எழுதுறீங்க...ஒங்க கைக்கு ஒரு முத்தம்-ன்னு குடுத்தியே...
                அந்தக் காதல் கவிதைதான் இதுமறந்துட்டியா செல்லம் என்றுசொன்னான் வேணு . அதற்கு                                க்கூம்…..க்கூம்... என வெடுக்கென்று சமையலறைக்குள் போனாள்
                                காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று      அவளாஇவள்என திரு..திருவென முழித்துக் கொண்டு நின்றான் வேணு
                                                                                                               
                                                                                                               

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...