Skip to main content

புதையலே இருந்தாலும் இது இருந்தால்


        

               புதையலே இருந்தாலும் இது இருந்தால்- 

                        

அதிகாலை ஐந்து மணிக்கு இரயிலைப் பிடிக்க வேண்டும். மனது சொல்லுகிறது, “எழுந்திருஎன்று,  உடம்போ சும்மா தூங்கு கண்ணா!” ஐந்து மணிக்குத்தானே டரெயின் ஐந்து நிமிடத்தில போயிடலாமே மெதுவாக எழுந்திரு ” என கட்டளையிடுகிறது. ENNATHULI

புதையலே இருந்தாலும் இது இருந்தால்- ENNATHULI

 புதையலே இருந்தாலும் இது இருந்தால்- 

                        


                        சும்மா தூங்கு கண்ணா!” ஐந்து மணிக்குத்தானே டரெயின் ஐந்து நிமிடத்தில போயிடலாமே மெதுவாக எழுந்திரு ” ன்ற அன்பான கட்டளைக்கு அடிபணிந்து தூங்கி விடுகிறீர்கள்.
                கண்விழித்து பார்த்தால் மணி நான்கு ஐம்பத்தி ஒன்பது. என்னதான் ஓடினாலும்..ஆட்டோவில் போனாலும் ஸ்டேஷன் சென்று உள்ளே பிளாட்பாரத்திற்குள் போகும்முன்பு இரயில் புறப்பட்டு விடும்.. இரயிலைப் பிடிக்கமுடியவில்லை. பயணம் தடைப்படுகிது. ஆதனால் வரும் நன்மையும் காணாமற்போய் விடுகிறது. MOTIVATED
                         செல்வத்தைக் குவித்தவர்களிடத்தில்; சோம்பல் சுகமாய்  இருக்கும், அதனால் அவர்களுக்கு பெரிதாய் நஷ்டம்  ஏற்படாது. ஊதாரிகளிடத்திலும் சோம்பல் குடிக்கொண்டிருக்கும்.                          சோம்பலால் தடைப்பட்ட பயணத்தை மற்றொரு  நாளில் மேற்கொள்கிறீர்கள். இரயில் பெட்டியில் சன்னலோர இருக்கை, சுகமான காற்றுடன் இயற்கை காட்சிகள் கண்முண் நிழலாடி ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஆதில் ஒரு காட்சி ஒரு மரத்தில் தாய்ப்பறவை, தன் குஞ்சுக்கு இரையை ஊட்டிவிடுகின்றனஅந்த பறவையின் செய்கை உங்கள் மனதை நெகிழ வைக்கிறது. ஆதை ஒரு நோட்டு புத்தகத்தில் குறிக்க மனம் சொல்லுகிறது. ஆனால், சோம்பலோ, அடப் போப்பா, இதை எல்லாமா குறிச்சு வைப்பாங்க, குறிச்சு வைச்சு என்ன ஆகப்போகுதுஇப்படி தடைப்போடுகிறது. தடைக்கு தலைவணங்கி விட்டிர்கள். SHORT STORIES
                        பயணம் தொடர்கிறது.  இன்னொரு காட்சி கண்களில் படுகிறது.                        ஒரு சிறிய பெண், தன் செல்ல நாயுடன் தண்டவாளத்தைக் கடக்க முயல்கிறாள்.. அப்போது ரயில் இன்னும் சில நொடிகளில் அருகே வந்துவிடும். ஆவள் கவனிக்கவில்லை. ஆனால் நாய் இரயிலின் சத்தத்தை உணர்ந்து, குரைத்து எச்சரிக்க, தண்டவாளத்தைக் கடக்காமல் நின்று விடுகிறாள். இது ஒரு நிகழ்வு.  இதையும் பார்த்து விட்டு குறித்துக் கொள்ளாமல் விட்டு விட்டீர்கள்.                        இரயில் பயணம் முடிந்தது. ல்லோரும் இறங்குகிறார்கள். அடுத்த பெட்டியில் இருந்து இறங்குபவர்களில் ஒருவா; உங்கள் இலக்கிய நண்பர் அவரைப் பார்த்து விடுகிறீர்கள்.
                        நண்பரிடம் நலம் விசாரித்தவுடன், நண்பர் உங்களிடம்    இரயிலில் வரும்போது அருமையான இரண்டு நிகழ்வுகள் பார்த்ததாகவும், அதனை சிறு நோட்டுபுத்தகத்தில் குறிததுக் கொண்டதாகவும் கூறுகிறார் அதை நானும்தான் பார்த்தேன் என்று சொல்லி விட்டு….
            இது ஒரு சாதாரண நிகழ்வுதானே, இதைப் போய் பெரிசா...குறித்து வைத்து   என்று சொல்கிறீர்கள். அதற்கு நண்பரோ   ஒரு தாய் பறவை
குஞ்சுக்கு இரையை ஊட்டி விட்டதும், ஒரு சிறிய பெண் தண்டவாளத்தை கடக்க நாய் எச்சரித்ததும்உனக்கு சாதாரண நிகழ்வா இருக்கலாம், எனக்கு ஜீவனுள்ள  கவிதைக்கான கருவாகவும்           அமையலாம் என்பார்.
 இப்போது சொல்லுங்கள் சோம்பலை விரட்டியவர் நீங்களா? நண்பரா?
                        இந்த சோம்பலைத்தான் வள்ளுவ பெருந்தகை மடி என்றும் கூறுகிறார்.
                        படியுடையாய் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்                          மாண்பயன் சாய்தல் அரிது
                        அரசனின் செல்வம் முழுவதும் உங்களிடத்தில் வந்தாலும், சோம்பல் குடிக்கொண்டால், புதையலே இருந்தாலும்…இது இருந்தால்- ENNATHULI  அந்த செல்வம் வந்தும் என்ன பயன் என்கிறார்
                         இருட்டு என்ற சோம்பலை, வெளிச்சம் என்ற உழைப்பால் விரட்டுங்கள். வாழ்வு வளமாகட்டுமே!.                                                                  
 

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

  மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)   ஆத்துரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு   தண்ணிய ஏத்தம் பிடிச்சு இறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)   கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு                             ஏன்றா பல்லைக் காட்றீங்க                           அட வேலையைப் பாருங்க கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு   பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில ...

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!