கழுகிடம்
இருந்து பாடம்
கற்ற தொழிலதிபர்
கழுகிடம் இருந்து பாடம் கற்ற தொழிலதிபர் - lesson from eagle |
இராமசுப்பு அதிர்ச்சியில் உறைந்து, அம்மாவை பார்த்தான்…. அம்மாவின் விழிகளில் கண்ணீர். செய்வது அறியாது கைகளை பிசைந்தபடி நின்று கொண்டிருந்தாள். இதற்கு முன் இப்படி துரத்தும்போதெல்லாம், கணவரை சமாதானப்படுத்தியவள், இந்த முறையும் ”பையன் இல்லாத வீட்ல நான் மட்டும் இருக்கணுமா?” கணவரிடம் எதிர்வாதம் செய்தாள்.Ennathuli
”பையன் எதிர்காலம் நல்லா இருக்கணுமா?
கெட்டு போகணுமா? நீயே யோசி” என்ற கணவரின் வார்த்தை அவளைக் கட்டிப்போட்டது.
இவர்களின் சண்டையைப் பார்த்தவன் ”நம்மால் அம்மா அப்பா
சண்டை வேண்டாம். , எவ்வளுவு நாள்தான் இவர்
விரட்டுவார், நாம அம்மா பின்னாடி பதுங்கிக் கொள்வது என்று தனக்குதானே கூறிக்கொண்டு …வெளியேறினான்.
ரெயில்வே ஸ்டேஷன் போனான், எந்த ஊருக்கு என்று தீர்மானித்து சொல்வதற்குள்… யாரோ சென்னைக்கு ஒரு டிக்கெட் என கேட்க… இவன் கையில் சென்னைக்கு
என்று கொடுத்தாயிற்று.. வேறு வழி
பயணமானான்.Motivated
சென்னை வந்து இறங்கியவுடன் திக்குதெரியாமல் திணறினான்…..அப்போது ஒரு குரல்
என்னடா இராமசுப்பு, “தொழில் விஷயமா வந்திருக்கே போல
இருக்கு” என்று பத்திரிகை நிறுவனத்தில் வேலை செய்யும்
மணிகண்டன் கேட்க … அப்பா விரட்டி விட்ட விஷயத்தை சொல்ல …இவ்வளவுதானா…. “என்கூட பத்திரிகை ஆபிஸ்லேயே
தங்கிக்கலாம். எடிட்டா;கிட்ட பேசி ஒனக்கு ஒரு வேலை
வாங்கித்தரேன்” என்றான்.stories
பத்திரிகை அலுவலகத்தில் சேர்ந்த இராமசுப்பு…..அப்பாவின்
கடூரக்குரலும் காதுகளில் ஒலிக்க….முன்னுக்கு வரவேண்டும்
என்ற வைராக்கியத்தோடு;, எல்லா பிரிவுகளிலும் கடுமையாக வேலை செய்தான். அவனின் திறமையைப் பார்த்த
எடிட்டர் இந்த
பத்திரிகை நிறுவனத்திற்கே முதலாளி ஆனாலும் ஆகி விடுவான், அப்பவும்
நாமத்தான எடிட்டரா இருப்போமோ என்னவோ ….என்று மனதிற்குள்
நினைத்து கொண்டார்.
அவர் நினைத்தது
பலித்தது, கொஞ்ச கொஞ்சமாக முன்னேறி அந்த பத்திரிகையை
விலைக்கு வாங்கி பத்திரிகை அதிபராக மாறி, ஊருக்கு போனான், அப்பா அணைத்துக் கொண்டார் . அம்மா
அழுதுக்கொண்டே “என்
பிள்ளையை துரத்தி விட்டிங்களே, இப்ப அணைத்து பாராட்டுறது, நியாயமா? கேட்டாள்.business
“கழுகுக்குஞ்சு கொஞ்சம் வளர்ந்த உடனே, அதைக் கூட்டில
இருக்க விடாம தாய் கழூகு தொல்லைப்படுத்தி விரட்டி, பறக்குறதுக்கு கத்துக்க
வைக்கும். தயவுதாட்சண்யம் பார்க்காது. தன்னோட குஞ்சைப் பறக்க வைக்கிறதுதான் அதோட
இலக்கு. அது போலதான் நானும் செய்தேன், பிள்ளையைக்
கஷ்டபடுத்தணும்ன்னு இல்லே என்று அருணாச்சலம் விளக்கமளித்தவுடன், இராமசுப்புவின் அம்மாவிற்கு தன் கணவனின் உண்மையான நோக்கம் புரிந்து
முகத்தை மலர்ச்சியாக்கி கொண்டாள்.
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்