3/03/2019

அபிநந்தனின் மீசை-Abinandan-moustache-style

நாட்டில் எல்லோரும்தான் மீசை வைத்து கொள்கிறார்கள். அதுவும் 

விதவிதமாக ஒருவர் கொடுவா மீசை அருவா பாரு என்கிற மாதிரி 

இன்னொருத்தர் உறிட்லர் மீசை மாதிரி ஒரு சிலர் அரும்பு மீசையில் 

குறும்பு பார்வையாக இருக்கிறது.
அபிநந்தனின் மீசை-Abinandan-moustache-style


           ஒரு சிலரின் மீசை… எதிர்த்த வீட்டில் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையைப் பயமுறுத்த … ஒரு சிலரின் மீசை… பந்தாவுக்காக வண்ணக்கிளி படத்தில் நடிகரும் நாடகச் செம்மலுமான் ஆர்.எஸ் மனோகரின் (இவரும் ஒரு ராணுவ வீர்ர்தானே) மீசையை அடையாளம் காட்டும்.அபிநந்தனின் மீசை-Abinandan-moustache-style

           ஒரு சிலர் மீசையை ஆசையாக வளர்க்க பெரும்பாடு படுவார்கள். தலைக்கு எண்ணெய் வைக்காவிட்டாலும்… மீசை அருமையாக கத்திரித்து… அதில் எண்ணெய் தடவி வளர்த்து விட்டு விரல்களால் நீவி தம்மை வீர்ராக காட்டிக் கொள்வதில் அலாதி பிரியம் காட்டுவார்கள்.
           ஆனால்…இப்படி எதுமே செய்யாமல் ..இந்திய திருநாட்டில் மகாகவி பாரதியின் மீசைக்குப் பிறகு இந்த மீசைதான் கோடானுகோடி இந்திய மக்களின் இதயங்களைக் கொள்ளைக் கொண்டது.
           அப்படி என்னதான் செய்த து இந்த மீசை.. போர்க்களத்தில் எதிரிகளின் களத்தைக் களேபரமாக்கி விட்டு திரும்புகையில் எதிர்பாரா வண்ணம் தாக்குண்டு போன விமானத்திலிருந்து பாராசூட் வாயிலாக குதித்த மீசை.. காற்றின் திசைமாற்றத்தால்… எங்கோ இறங்கியது.
           மீசை தடுமாறியது… ”எங்கிருக்கிறேன்” என்று திகைத்த்து. எதிர்ப்பட்டவர்களிடம் ஒரு நேர்மையிருக்கும் என்று எண்ணி கேள்வி கேட்டது. அவர்களின் பதிலால் தமது தேசப்பற்றை முழங்க… அடுத்த நொடியே இந்த மீசையைத் தாக்கியது ஒரு கூட்டம்.
           தற்காத்து கொள்ள ஓட்டமெடுத்த்து. சற்று நேரத்தில் எதிர்தேசத்தின் ராணுவம் சிறைப்பிடித்த து.
           மீசையிடம் கேள்விக்கணைகள் மிடுக்காக முடுக்கப்பட்டது. அந்த கேள்விக்கணைகள் ஏவுகணைகளை விட ஆபத்தானவைகளாக தெரிந்த தால் அதற்கெல்லாமல் சளைக்காமல் பதிலாக மிக நிதானமாகவும் தன்னை இழக்காமலும் முறுக்கியவாறே பதிலளித்த து. இந்த பதில் உலக அரங்கில் உச்சாணிக்கு கொண்டு சென்றது.
           தேசத்தின் இறையாண்மைக்கும் ஏற்றுக் கொண்ட பணிக்கு விசுவாசமாகவும் இந்த மீசை உலகமெங்கும் உற்று நோக்கப்பட்டது.
           உலகநாடுகளின் நெருக்குதலால்… மீசை தாய்மண்ணில் அதே முறுக்கோடு தாய் மண்ணில் தடம் பதித்த து.
           அந்த தடத்தில் படிந்த மண்ணை பல மக்கள் திலகமாக இட்டுக் கொண்டனர் சிலர் உச்சி முகர்ந்தார்கள். மகிழ்ந்தார்கள்
           இத்தனை மகிழ்ச்சிக்கு காரணமான கூரிய மீசைக் கொண்ட போர் வீர்ர் விங் கமாண்டர் அபிந ந்தன் வர்த்தமானான் ஈன்றெடுத்த தாய் மண் இந்தியாவும் தமிழ் மண்ணும் பெருமையோடு மகிழ்ச்சி கொள்கிறது.
           ”மீசையை ஆசையாய் வளருங்கள் அந்த மீசை இவரைப்

 போல மனஉறுதிக்கு சான்றாக அமையட்டுமே(Royal Salute to Wing 

Commander Abinandan Varthamanan)

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...