3/11/2019

கோமாளியிடம் மன்னிப்பு கேட்ட கணினி என்ஜினியர்



                              சர்ரென்று யமாஉறாவைக் கிளப்பினான், மாது, அப்போது குறுக்கே புகுந்தவனைப் பார்த்து, ”டேய், சாவு…..……”திட்ட ஆரம்பிக்கும் முன்பே, குறுக்கே வந்தவனின் முகம், ஏனோ தடுத்தது


                குறுக்கே வந்தவன் இவனை அடையாளம் கண்டுகொண்டான்.
                ”டேய் நீ மாதுதானே? என்று கேட்க ennathuli கோமாளியிடம் மன்னிப்பு கேட்ட கணினி என்ஜினியர்
 
https://ennathuli.blogspot.com
கோமாளியிடம் மன்னிப்பு கேட்ட கணினி என்ஜினியர்
     

           ஆடேய் நீ சேதுதானே என்று கேட்கஆரத்தழுவிக் கொண்டார்கள்
                ”டேய் மாது, எங்கேடா இருக்கே ? என்ன வேலை, என்று விசாரித்தான் சேது
            , ”டேய், நான் ஒரு பெரிய கம்ப்யூட்டர் கம்பெனில சாப்ட்வேர் என்ஜினியரா இருக்கேன், சம்பளமும் கைநிறையடாதன்னையேப் பெருமைப்படுத்திக் கொண்டான் மாது.   
             சேது, நீ எங்கேடா வேலை செய்யறே ? story
                ”நானா…..ன்னு இழுத்துகொஞ்ச நேரம் யோசித்துஒரு சர்க்கஸ் கம்பெனில, வேலை செய்யறேண்டாஎன்றான்.
                என்னடா வேலை? , “அதைச் சொல்லுஎன்று மாது கேட்க..
                ”பப்பூன் வேலைடாஎன்றான் சேது
                ”என்னது ? ப்பூ….பப்பூனாகேள்வியிலேயே கேலியையும் கலந்து விட்டான் மாது.
                டேய் மாது, படிக்கும்போதும் கிண்டலடிச்சே, இப்பவுமா ?
             மாது, ”பப்பூன் வேலை என்ன சாதாரண வேலை நினைச்சிகிட்டியா? இருக்கிறதேலேய அதுதான்டா கஷ்டமான வேலை. எல்லோரும், அவங்களுக்கு இருக்கிற ஒரு திறமையை வெச்சிகிட்டு காலத்தை ஓட்டிடுவாங்க. ஆனா, பப்பூன் வேலை அப்படி கிடையாதுடா,
                அதைப் பத்தி சொன்னா ஒனக்கு புரியாது, நேர்ல வந்து பாரு,    பப்பூன்னாஇன்னான்னு தெரியும்ஆதங்கத்தோடு கேட்டுக் கொண்டான்.
                 கேலியும், கிண்டலும் இருந்தாத்தான்டா, அது நட்பு. கோவிச்சிக்காதே. நான் ஒரு நாள் வர்றேன் என்று மீண்டும் சர்ரென்று யமாஉறாவைக் கிளப்பி பறந்தான் மாது.
                சொன்னது போலவே, ஒரு நாள் காலையில் சர்க்கஸ் கூடாரத்திற்கு போனான்.
                சர்க்கஸ் கூடாரத்தில், தகர ஷீட் வேய்ந்த சிறிய அறைகள் இருந்தன. அதற்குள் பல்வேறு மொழியைக் கொண்டவர்கள் குடும்பங்களாக அடைக்கலமாகி இருந்தனர். சில அறைகளில், தனியாட்களாகவும் இருந்தனர்.
                ஒரு அறைக்கு வெளியே நின்றுஇங்கு சேதுன்னுஎன் பிரண்ட் இருக்கான், அவனைப் பார்க்கணுமே என்று கேட்க ” ” . ஆளு இல்லா, , ஆளு குதிரை லாயத்துல இருக்கிஎன்று மலையாளத்தில் ஒரு பெண் சொன்னாள்.motivation story
                குதிரை லாயத்தைத் தேடிக் கண்டுபிடித்து போனால்…..
அங்கே, தேசிங்கு மகாராஜாக் கணக்காய், குதிரைமேல் சவாரி செய்து கொண்டு இருந்தான். ”என்னடா, என்னை வரச்சொல்லிட்டு குதிரை சவாரியோ? என்று கேட்க, குதிரை மேலிருந்தே, கொஞ்ச நேரம் நில்லுடாஎன்று நிறுத்தி விட்டான் மாதுவை.
                சிறிது நேரத்திற்கு பின், குதிரையிலிருந்து இறங்கி, குதிரையைத் தடவிக் கொடுத்து விட்டு, அதற்கு கொள்ளும் கொடுத்து சாப்பிடவிட்டு… ”வாடா மாது, யானைக்கிட்டே போகலாம், அங்கே போய் பேசிக்கலாம்என யானைகளின் அருகில் போனான்.
                சேது, யானையின் அருகில் போய் ஏதோ சொல்ல, யானை பெரிய உடம்பை அப்படியே கீழேக் கிடத்தியது. அதன் அருகில் போய் வாஞ்சையாக தடவிக்கொடுத்து விட்டு, அதன் மொழியில் ஏதோ பேசினான். அந்த யானையும், புரிந்த்துபோல் தலையை ஆட்டிவிட்டு தூங்கியது.
                ”டேய் வாடா, மாது, யானை தூங்கிடுச்சி, இப்ப ஓட்டகத்துகிட்ட போகலாம், அப்படின்னு கூப்பிட்டு போனான். இப்படியாக பஞ்சவர்ண கிளிகள், பறவைகள் எல்லாவற்றிடையேயும் போய் பழகினான். அவைகளும், சேதுவின் வருகைக்காகவே காத்திருந்த்து போலவே,இவன் போனவுடன் கொஞ்சி குலாவியது.
                        மாதுவிற்கு ஆச்சர்யம், என்னடா, சேது, ஏதாவது மாயமந்திரம் கத்துவெச்சிருக்கியா, எல்லாம் பொட்டிப்பாம்பா மயங்குதுங்கன்னு கேட்க… ”அதெல்லாம் ஒரு மண்ணும்இல்லே, எல்லாம் நாம பழகறதுலதான் இருக்கு.
                   நீ எப்படி கம்ப்யூட்டர்ல வித்தைக் காட்டிறியோ, அதைப்போலத்தான் இதுவும். நீ உயிரில்லாத எலக்ட்ரானிக் பொருட்களோட, விளையாடுறே, நான் உயிருள்ள ஜீவன்களோட விளையாடுறேன், அம்புட்டேதான்என்றான் சேது.
                வாடா. இப்ப புலிகிட்ட போகலாம் என்றான் சேது
                புலியா? பயந்து பதுங்கினான் மாது.short stories
                ”நான் இருக்கேன், புலி கூண்டுலதான் இருக்கும் பயப்படாதே” 
                புலிக்கூண்டிற்கு வெளியே நின்று சேது குரல் கொடுக்க, புலி கூண்டின் சன்னல் கம்பிகளுடே நாக்கை நீட்டி, ஏதோ கேட்டது. சேதுவும், அதற்கான இறைச்சி துண்டை எடுத்து நீட்ட, அது பூனைக்குட்டியைப் போல், சேதுவின் கைகளை நக்கி விட்டு இறைச்சி துண்டை கௌவிக் கொண்டு போனது.
                ”புலி முடிஞ்சுது, இப்ப நேரா சிங்கத்துகிட்டே போறோம்,” என்றான் சேது
                ”டேய், கிண்டலடிச்சதுக்கு கோபம் இருந்தா, நீயே நாலு அறை அறைஞ்சிடு, அதை விட்டுட்டு, சிங்கத்துகிட்டே மாட்டி விட்டுறாதேடாஎன்றான் மாது.
                ”நண்பேன்டாஎன்று சந்தானம் பாணியில் தோள்மேல் கைப்போட்டு அழைத்து போனான். சிங்கத்தின் கூண்டின் முன் நின்று சேது கூப்பிட, சிங்கமோ, ஒரு பெரிய கர்ஜனையோடு. பிடரியை சிலிப்பிக் கொண்டு கூண்டு அருகே வந்து நின்றதுஅதன் பிடரியைக் கைகளால் இதமாய் வருடிக் கொடுத்துவிட்டு. அதற்கு உணவும் கொடுக்க, அதைக் கௌவிக் கொண்டு சென்று விட்டது.
                        வெளியில் எல்லாம் முடிந்தது, கூடாரத்தின் உள்ளேதான் வேலை என கூட்டிப்போனான். அங்கே, மாலையில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிக்கு, ஒத்திகைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.
                        சேதுவைப் பார்த்தவர்கள் ஓடோடிவந்து, கூட்டிப்போய், அந்தரத்தில் விளையாடும் பார்களில் விளையாடி, ஒத்திகைகளை நடத்தினார்கள். என்னவெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்துவார்களோ, அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் சேது ஒத்திகைப் பார்த்தான். ,மாது, அண்ணாந்து பார்த்தவாறே, சேதுவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிந்தான். அவனுக்கு சர்க்கஸ் அழகிகள்கூட கண்ணுக்கு தெரியவில்லை.ennathuli
                        அவ்வளுவு அனாவசியமாக, விளையாடிக் கொண்டிருந்தான்.
                        கீழே இருந்தவாறே, கையெடுத்து கும்பிட்டு, டேய் சேது கீழே வாடா, என்று கூப்பிட அவனும் இறங்கி வந்தான்.
                        இறங்கி வந்தவன், தகர ஷிட் வேய்ந்த குடியிருப்பின் ஒரு அறைக்கு கூட்டிப்போனான். அங்கே ஒரு ஸ்டவ், சிறிய பாத்திரங்கள் நான்கு ஒரு தலையணை, ஒரு பாய், இரண்டு சட்டைகள், ஒரு பேண்ட், ஒரு கைலி மட்டுமே இருந்தன. ஸ்டவ்வில் டீ போட்டு கொடுத்து குடிக்க வைத்தான்.
                        ”என்னடா? சேது, இப்படி இருக்கே? இவ்வளுவுதானா, ஒன்னோட ஆஸ்தி என்று கேட்க
                        டேய், மாது என்னோட ஆஸ்தியெல்லாமே, சர்க்கஸ்ல இருக்கிற ஒவ்வொரு உயிரும்டா, சர்க்கஸ்க்கு வர்ற மக்கள் சந்தோஷமா இருக்கணும், அதனாலதான், எங்களை மாதிரி பப்பூன்களெல்லாம்,   எல்லா வித்தைகளும் தெரிஞ்சாகூட, அதை வெளியே காட்டாம, தப்புத்தப்பா பண்ணி, மக்களை சிரிக்க வைப்போம். மக்களும் கவலைகளை மறந்து சிரிச்சு மகிழ்வதற்கு தோதாய் போயிடுது.  இப்படியே என் காலம் முடிஞ்சிட்டா, போறும்என்று முடித்துக் கொண்டான்.
                        ”சேது, என மீண்டும் ஆரத்தழுவி, தகரஷீட் அறையை  விட்டு வெளியேறிய மாதுவின் கண்களில் கண்ணீர் துளிர்த்த்தோடு,  , கணிணி என்ஜினியர் என்ற கர்வத்தையும் கலைத்தது.ennathuli


           கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை                                            

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...