“டேய், கல்யாணம் பண்ணினா, நாலு குழுந்தைக்கு
அப்பனா ஆயிருப்பே,”இன்னும் வேலைக்கு போக துப்பில்லே” காலையிலேயே முகம்சிவக்க கத்தினார் ராஜராம். இலவசங்கள் வேண்டுமா தேர்தல் விழிப்புணர்வு
கதை
”ஏங்க பையனை கரிச்சு கொட்டிறீங்க,
இராத்திரி நேரஞ்சென்றுதானே தூங்கினான், இன்னும்
தூங்கட்டுமே” வக்காலத்து வாங்கினாள் பாண்டியனின் தாய் இராணி.ennathuli
இப்படி கெடுத்து வைக்கிறீயே,
நாளைக்கு கல்யாணம் பண்ணினா குடும்பம் நடத்துறதுக்கே திண்டாடுவான் என்றதற்கு….
”எதுக்குங்க வேலைக்கு
போகணும்?
நமக்கு இலவசமா வீடு கொடுத்திருக்காக,
அதில லைட் எரியறதுக்கு இலவச மின்சாரம் கொடுத்திருக்காக. கரண்ட் கொடுத்த்தோட விட்டாங்களா, காத்தாற பேன் கொடுத்திருக்காக காத்தாறிகிட்டே சாப்பிடற இட்லிக்கான
அரிசி ரேஷன் கடையிலேயும், இட்லி வேக வைக்க இலவச கேஸ் ஸடவ்வும்
கொடுத்திருக்காக போறாதுங்களா ? motivated stories
ம்…இருங்கோ, சாப்பிடுகிட்டே ஒலக நடப்பை தெரிஞ்சுக்க வண்ண
தொலைக்காட்சி கூட குடுத்திருக்காக,
இதெல்லாம் வெச்சு வீட்லேயே இருந்தா சோம்பேறித்தனத்துல ஒடம்புக்கு ஏதாச்சிலும் வந்தாக்கா…. இன்சுரன்ஸ் பாலிசி கொடுத்திருக்காக, மவ கல்யாணத்திற்கு
தங்கம் கொடுக்கிறாக, அது குழந்தை பெத்தா இருபதினாயிரம் தர்றாக.
மவ பெத்த குழந்தையும்,
நம்ம பையன் பெக்க போற குழுந்தையும் படிப்பதற்கு இலவச கல்வி தர்றாக,
படிப்பதற்கான புத்தகம் இலவசம். குழந்தைகள் கால்நோகாம
இருக்க இலவச செருப்பு தர்றாக. அதுகூட தேயக்கூடாதுன்னு…இலவச சைக்கிள் தர்றாக. சைக்கிள்ல போகமுடியலைன்னா…
பஸ்ல போக இலவச பஸ் பாஸ் தர்றாக புள்ளைங்க, கம்ப்யூட்டர் கத்துக்க
இலவச லேப்டாப் தர்றாக…
இதெல்லாம் முடிச்சு… வயசான காலத்துல..ஓடம்பு முடியாதுல்ல…. அப்ப முதியோர் பென்சனும் தர்றாக” அப்புறம் எதுக்குங்க
நம்ம பையன் வேலைக்கு போகணும் என நீட்டி முழக்கிய இராணியை ஒரு முறைப்பு பார்வையுடன்.
இவ்வளவு நேரம் இலவசம்…இலவசம் அரசாங்கம் தருதுன்னு சொன்னியே…
அதுக்கெல்லாம், பணம் அவங்க சொந்த பணத்துல செய்யறது
இல்லேடி, நம்மளோட, மக்களோட வரிப்பணம்.
குடிப்பதற்கு தண்ணீர்
வரி, சொத்து வரி, மனை வாங்கினா,
அபிவிருத்தி கட்டணம், வேலை செய்யறவங்க சம்பளத்துல
தொழில் வரி… அப்புறம் வருமான வரி அப்படின்னு ஏகப்பட்ட வரி வசூல்
பன்றாங்க.
அத்தோடு இல்லாமல்,
சேவை வரி, நன்கொடை யாராச்சிலும் கொடுத்தா அதுக்கு
நன்கொடை வரி இப்படின்னு ஏகப்பட்ட வரி வருவாய் இருக்கு. அதை திட்டம்போட்டு
செலவு செய்தும் நிதி நெருக்கடி, கடன் சுமை ஏன் வருது?short
stories
இது போல இலவசங்களை அள்ளி…அள்ளி கொடுத்து
விட்டு நாடு கடன்ல தத்தளிக்குது புலம்புனா இன்னா பன்றது? இந்த இலவச அறிவிப்புகள் எல்லாம்,
தேர்தல் வர்ற நேரத்துல போட்டிபோட்டுகிட்டு அறிவிச்சு …. தேர்தல்ல ஜெயிச்சு வந்து பதவில ஒக்காந்த பின்னாடி…. ”ஒரு அறிக்கை விடுவாங்க பாரு ? அதுதான் வேடிக்கையாயிருக்கும்.
இன்னான்னா…. ”முந்தைய ஆட்சியில்….. நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், திட்டங்களை
சரிவர அமுல்படுத்தாமலும்….. இலவசங்களை அள்ளி வழங்கியதாலும்….
நமது அரசு கடுமையான நிதி பற்றாக்குறையில் உள்ளது. எனவே, பொதுமக்களிடம் கூடுதல் வரிசுமையை சுமத்த வேண்டிய
கட்டாயத்தில் இந்த அரசு உள்ளது என வெளியிடுவார்கள்.useful tips
அப்போ, பேப்பர்ல படிச்சுட்டு நாம நம்ம வேலையை பார்ப்போம், அவங்க
வேலையை அவங்க பார்ப்பாங்க” இதுதான் யதார்த்தமான நடைமுறை தெரிஞ்சுக்கோ…
”ஒன் பையனை ஒழுங்கா வேலைக்கு போய் பிழைக்கிற வழியப் பார்க்க சொல்லு….இந்த இலவச அறிவிப்புகளை நம்பி மோசம் போயிடாதே” என சொன்னதைக்
கேட்டதும்…
---க்கும்..க்கூம்” , இவருக்கு , யாரையாவது
குறை சொல்லிகிட்டே இருக்கணும், என்ன பழக்கமோ? அலுத்துக்கொண்டே சமைலறையில் இலவச கேஸ் ஸ்டவ்வில் சுடான இட்லியை அவிக்க தயரானாள்
இராணி, தூங்கி எழுந்த
பையன் சாப்பிடவே.
இராஜாராமோ…… ”யாரையும் திருத்த முடியலே” என மனதுக்குள் அவிந்து கொண்டே
இட்லிகூட சாப்பிடாமல் காற்றாடுவதற்கு வெளியே போனார்.
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்