பள்ளிக்கு
செல்லும் காலத்தில் பள்ளி சென்று விட்டு மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடுவது பிள்ளைகளின்
வழக்கம். ஆனால் இந்த சிறுவனின் வித்தியாசமான அணுகுமுறை உலகையே
வியப்பில் ஆழ்த்துகிறது.
TEN YEAR OLD BOY HAVE FLIGHT SERVICE COMPANY) |
ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸ் ஜாக்வட் வயது பத்துதான் ஆகிறது. இந்த வயதில் பொம்மை விமானம் வாங்கி தர சொல்லி அடம் பிடித்து அழும் குழந்தைகள்தான்
கண்டிருப்போம். ஆனால் இந்த சிறுவன் சொந்தமாகவே விமான நிறுவனம்
ஆரம்பித்து நடத்தி வருகிறான் என்றால் வானத்து தேவதைகளே ஆச்சர்யப்படும்.
இந்த பயணிகள் விமான சேவை நிறுவனத்திற்கு ஒசியானா எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறான். விமான சேவைக்கு எந்தெந்த வழித்தடங்கள்
சாதகமாய் இருக்கும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தடையினை எப்படி எதிர்கொள்வதென விடைகளை விரல் நுனியில் வைத்திருக்கான்.
இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ வாக இருப்பவர்
இவனேதான். இவருக்கு துணை சி.ஓ.வாக இருப்பவர் நண்பன் பட்டி உல்ப். அந்த அன்னியோன்யமான
நண்பன் வேறு யாருமில்லை. பொம்மைதான்.
மிகப் பெரிய மற்றும் பழைய விமான நிறுவனமே பயப்படும் சிட்னி முதல் லண்டன் வரையிலான
நான் ஸ்டாப் சர்வீஸை ஆரம்பத்திலேயே துணிச்சலாக எடுத்திருக்கிறான் அலெக்ஸ்
சிட்னி
முதல் லண்டன் வரையிலான பயண நேரம் சுமார் இருபத்தைந்து மணி நேரத்திற்கும் மேலாக இருப்பதால்
பயணிகளுக்கு தேவையான உணவு, மதுபானம், பொழுதுபோக்கு என அனைத்து செலவுகளும் அதிகமாகும் என்பதாலேயே பெரிய நிறுவனங்கள்
தயங்குகின்றது. ஆனால் இந்த சிறுவன் சவாலாக எடுத்துக் கொண்டிருக்கின்றான்.
இந்த சவால்களை எடுத்து கொண்ட அதே
நேரம் தான் பள்ளிக்கு செல்ல வேண்டும். என்ன வேலை செய்வது
என்று தெரியவில்லை. எனவே தகுந்த ஆலோசனை சொல்லுங்கள் என்று ஒருவருக்கு
கடிதம் எழுதுகிறான்.
ஒரு ஏர்பஸ் ஏ350 ரக விமானத்தை வைத்து
சிட்னி முதல் லண்டன் வரை ஒரு சேவையை தொடங்க இருக்கிறேன். இது ஒரு 25 மணி நேர விமானப் பயணம். இந்த சேவையை கொண்டு வருவதில் நிறைய சிக்கல்கள்
இருக்கிறது. குறிப்பாக தூக்கம். இது குறித்து உங்களிடம் ஏதாவது அட்வைஸ்
இருக்கிறதா..? விரைவில் விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு அலெக்ஸ், நிறுவனர் மற்றும் சி இ ஓ, ஓசியானியா எக்ஸ்பிரஸ் என கடிதத்தை முடித்திருக்கிறான் அலெக்ஸ்.
அந்த கடிதம் குவாண்டாஸ் என்ற பெரிய விமான பயணிகள் சேவை நிறுவன சி.ஓ.விற்கு போய் சேருகிறது.
அந்த கடிதம் குவாண்டாஸ் என்ற பெரிய விமான பயணிகள் சேவை நிறுவன சி.ஓ.விற்கு போய் சேருகிறது.
சி.இ.ஓ ஒரு கணம் திகைக்கிறார்.
சின்ன பையனுக்கு பதில் சொல்வதா? அதுவும் போட்டி
வியாபார நிறுவனத்திற்கா என்று தடுமாறுகிறார். முடிவில் அவரே கைப்பட
அந்த சிறுவனுக்கு கடிதம் எழுதுகிறார்.
அந்த கடிதத்தின் தொடக்கத்திலேயே
"புதிய விமான சேவை நிறுவனத்தை தொடங்கி இருப்பதை எனக்கு தெரியப்படுத்தியதற்கு
நன்றிகள். ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விமான சேவை நிறுவனம் களம் இறங்கப் போகிறது என
வந்த வதந்ததிகளை கேட்டேன்" என்றே தொடங்கி நானும் ஆரம்ப காலத்தில் தங்கள் நிலையிலேயே
இருந்தேன்.
தாங்கள் ஆலோசனைக் கேட்டதற்கு மிக்க நன்றி . மேலும் தங்கள்
நிறுவனத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் சட்ட வல்லுநரை கலந்து பேசி முடிவு மேற்கொள்ளுங்கள்.
அவ்வப்போது என்னை தொடர்பு கொள்ளுங்கள்
வேண்டிய உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும். போதிய நேரம்
கிடைத்தால் எங்கள் நிறுவனத்திற்கு நேரில் வந்து என்னை சந்தியுங்கள் என்று சிறுவனை ஊக்கப்படுத்தி
உள்ளார் குவாண்டாஸ் பயணி விமான சேவை நிறுவன சி.இ.ஓ.
இதனை ஒரு சிலர் சி.இ.ஓ.
வை வானாளவ புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஒரு சிலரோ
அட சூப்பர்ப்பா நம்ம சி.இ.ஓ. இதிலேயும் நம்ம கம்பெனியை மார்க்கெட் படுத்தி விட்டாரு என சந்தோஷப்படுகிறார்களாம்.
திறமையான அந்த அலெக்ஸ்க்கும் அவரை
ஊக்குவிக்கும் குவாண்டாஸ் பயணிகள் சேவை விமான நிறுவன சி.இ.ஓ-விற்கும் கரம் தட்டி வரவேற்போமே!
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்