4/10/2019

நிஜத்தை மறக்கிறோம்.. நிழலைப் போற்றுகிறோம்


அப்பப்பா! சுட்டெரிக்குது சூரியன், தாங்கலேப்பா வெக்கை”, சாயுங்காலம் எப்பவரும், ”நிலா வெளிச்சத்தில உள்ள சுகமே அலாதிதான்இப்படித்தான் எல்லோரும் நினைப்போம், கொண்டாடுகிறோம்.
https://ennathuli.blogspot.com
நிஜத்தை மறக்கிறோம்.. நிழலைப் போற்றுகிறோம்


           ஆனால், உண்மை என்ன? சூரியன் நிஜம், சந்திரன் அதன் நிழல் கிரகம். சூரியனின் ஒளியை உள்வாங்கி. அதை பூமிக்கு படரவிடுகிறது. அவ்வளவுதான். நாம், நிஜத்தை மறக்கிறோம்.. நிழலைப் போற்றுகிறோம். இதுதான் வாழ்க்கையின் யதார்த்த நிலை.ennathuli
           திரைப்படத்தில், ஓரே நேரத்தில் நூறுபேரைப் பந்தாடும், கதாநாயக பாத்திரத்தின் நிழலான போஸ்டருக்கு, பாலாபிஷேகம் செய்கிறோம். ஆனால், நடைமுறையில் நூறுபேரை சமாளிக்க இயலுமா?. மறைந்த நடிகர் எம்.என். நம்பியார், குணத்தில் குழந்தைத்தனம் உள்ளவர். ஆனால், திரைப்படத்தில் வாய்த்த கதாபாத்திரங்களோ, வில்லன் கதாபாத்திரங்களே. நிஜத்திற்கும், நிழலுக்கும் உள்ளவேறுபாடு இதுதான்.
           செடிகளில் அழகாக பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களைப் பறிப்பதற்கு தயங்குகிறார்கள்.. ஏனென்றால் அதில் முட்கள் இருக்கிறதே!. அதற்கு தயங்கி கடைகளில் விற்கும் பிளாஸ்டிக் பூக்களை அல்லவா கூந்தலில் செருகிக் கொள்கிறார்கள். அதேபோல, நல்ல குங்குமத்தால், நெற்றிக்கு திலகமிட்டால், நன்மை என்றார்கள் பெரியோர்கள். ஆனால், நெற்றிக்கு திலகமிட ஸ்டிக்கர் பொட்டை அல்லவா தேடி வைத்துக் கொள்கிறார்கள். ஒரு பொட்டு ஒரு வாரத்திற்குகூட வரலாம் அவர்களுக்கு
           ஒரு நபரை நீங்கள் சந்திக்கிறீர்கள், பார்க்கும்படியான தோற்றம்  short stories அவருக்கில்லைதான்., ஆதலால் அவரை வெறுத்து ஒதுக்கி விட்டீர்கள்.  ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு, அந்த நபர் திரைப்படத்தில், ஒரு கதாபாத்திரத்தில் வெளுத்துக் கட்டுகிறார். நிஜத்தை வெறுத்தீர்கள், ஆனால் நிழலில், அவர் காட்டிய திறமைக்கு தலைவணங்குகின்றீர்கள்.
           நீங்கள், ஒரு பெண்ணைக் காதலிக்க துவங்கும்போது, அவளைக் கவர,  கவிதை நடையில் காதல் கடிதமெழுதி  தருகிறீர்கள். கவிதை நடை காதல் கடித த்தில் மயங்கி உங்களுக்கு மனைவியாகவும் ஆகிவிட்டாள். நெடுநாட்களுக்கு பிறகு, ஒரு காதல் நடையில் கவிதை எழுதி, மனைவியிடம் கொடுத்து, படித்து பாரேன் என்று கொஞ்சுகின்றீர்கள். அப்போது, மனைவி, ”ஒழுங்கா புழைக்கிற வழியைப் பாருய்யா”” அப்படின்னு சொல்லி காதல்நடை கவிதைக் காணாமற் செய்துவிடுவாள்.useful article 
                சிலரது முகம் நேரில் பார்க்க  நன்றாக இருக்காது. அதே நபர், ஒரு ஸ்டுடியோவுக்குள் நுழைந்து, விதம்விதமாக போட்டோக்கள் எடுத்து உங்களிடம் காண்பிக்கிறார். ”அட, நீதானா? சூப்பரா இருக்கேஆச்சர்யப்பட வைத்துவிடும் அந்த நிழல் புகைப்படங்கள்.
                நிஜத்திற்கும், நிழலுக்கும் உள்ள தொடர்புகளே நடைமுறை வாழ்வில் எல்லாவிதத்திலும் விடாது கருப்பாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அதைத் தவிர்க்க முடியாது.
                இப்போது, தேர்தல் நேரம், வேட்பாளர் உங்களுது தொகுதிக்கு வந்து ஓட்டுக்கேட்கும்போதுஉங்கள் தொகுதிக்குவானவில்லை வளைத்து வந்து ஒங்களிடம் வழங்குவேன் என்கிறமாதிரி வாக்குறுதிகளை அள்ளிவிடுவார். அதை நம்பி மக்களாகிய நாம் ஓட்டுப்போட்டு விட்டு வந்துவிடுவோம்.
                வெற்றி பெற்று, பதவியேற்ற சிறிதுநாளில், ”ஐயா, வானவில்லை வளைப்பதுபோன்ற வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்தீர்களே! எப்போது, நிறைவேற்ற உள்ளதாக உத்தேசம்என கேட்டு பாருங்கள்.
                   .உங்களை ஒருமாதிரியாக ஏறஇறங்க பார்த்து, ஏளனப்புன்னகையோடு, ”என்னங்க நீங்க, படிச்சிருக்கீங்க, ஒங்களுக்கு தெரியாதா? ”வானவில்லை எப்படி வளைக்கிறது, வானமே ஒரு மாயத்தோற்றம், அதில், வானவில்லும், தற்காலிகமாக மழைவரும்போது வர்றதுஅதைப்போய் நம்புகிறீங்கஅப்படின்னுவார்.
                அறிவியல் முன்னேற்றத்தால், ஒரு ஒலிபெருக்கி(மைக்) கண்டுபிடித்துள்ளார்களாம். அந்த மைக்கில் நீங்கள் பேசினால், உண்மையை பேசுகிறீர்களா? அல்லது பொய் பேசுகிறீர்களா? என கண்டுபிடித்துவிடுமாம். அந்த மைக்கை இப்போது பிரச்சார மேடைகளில் ரகசியமாக வைத்து விட்டால்…..அரசியல்வாதிகள் துண்டைக்காணோம், தோள்துண்டைக் காணோம் என ஓடமாட்டார்கள்.. அவர்கள் உதட்டில் ஒளிந்திருப்பது நிழல், உள்ளத்தில் இருப்பதுதான் நிஜம்என்பதை புரிந்துகொள்வோம் motivated article
           இதை அப்படியே தேர்தல் நினைவுபடுத்தி, நிஜமெது, நிழலெதுஅடையாளம் காண வைத்துக் கொள்வோமே! ”எங்க கிளம்பிட்டீங்க? நிஜத்தை தேடியா? நிழலைத் தேடியா? ----




No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...