தேர்தல்
நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் தங்கள் படை பலத்தை, பண பலத்தைக் காட்டி, அரியணையை கைப்பற்ற
துடிக்கிறது. கண்கூடான உண்மை. Ennathuli அரியணை துறந்த ஆட்சியாளர்கள்
யார்
அரியணை துறந்த ஆட்சியாளர்கள் யார் |
அதிகாரம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்
என்ற எண்ணத்தோடு கட்சிகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இப்படி போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு
முன்னோடியாக மாடமாளிகையும் அரச பதவியும் இருந்தவர்கள் அதை முற்றும் துறந்தார்கள் என்பது
வரலாறு காட்டும் உண்மை
பஞ்சு மெத்தை உப்பரிகை வாசம் சாமரம் வீசும்
பெண்கள், பணிப்பெண்கள் உல்லாச வாழ்வு இப்படி இருந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்து
…… அரசபோகத்தையும்,
மாடமாளிகையும், சுகபோகங்களையும் துறப்பதற்கு முடிவெடுத்தவர் ஒரு அவர்தான் கௌதம புத்தர் …….ஞான மார்க்கத்தை தேர்ந்தெடுத்தவர்
….motivated articel
எல்லோரும், அரியணையில் அமர்ந்து அதிகாரத்தைக்
கைப்பற்ற துடிக்கையில்…அந்த அரியணையை துச்சமாக எண்ணியதற்கு என்ன காரணம்….. அவருக்கு
தெரிந்திருந்தது….”அரியணை ஒன்றும் சுகமானது அல்ல” என்று. முட்படுக்கையில் நித்திரை
செய்வதற்கு ஒப்பாகும் எனவும் அவர் நினைத்திருக்க
கூடும். காண்க சித்தார்த்தன் என்ற கௌதம புத்தர்
அரியணையை விட உயர்ந்த்து இவ்வுலகில் உள்ளது
என்றும், அதை தேடிப்பிடிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கலாம். அந்த ஆவல்தான் சித்தார்த்தன்
என்ற இளவரசன் புத்தனாக பூரணத்துவம் பெற்று காலங்காலமாக நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.
அரியணையில் இருப்பவர்கள் காலங்காலமாக வரலாற்றில் இடம்பெறவில்லையா? என்ற கேள்வி எழக்கூடும்.
Business stories
புத்தனின் வரலாற்று சுவட்டின்முன், அரியணையின்மீது
அசைப்படுபவர்கள் வரலாறு செல்லாக்காசாகத்தான் நிற்கும்.
நம்நாட்டிலும் ஒருவர்…அவர்தான். ஒரு பெரிய வணிகரான
திருவெண்காடர்…சுகபோகங்களில் திளைத்து வந்தார்.….வணிகம் செய்ய தன் பிள்ளையை திரைக்கடலுக்கு
அப்பால்…அனுப்பினார் தந்தை. ”தன்னைக் காட்டிலும்
வணிகத்தில் மிக சிறந்தவனாக விளங்குவான் என்று எண்ணிய தந்தைக்கு மாறாக… ஒரு கப்பல் முழுவதும்…
வெறும் வரட்டித்துண்டுகளை மூட்டைகளாக கொண்டுவந்து வீட்டில் இறக்கினால்…..தந்தைக்கு
கோபம் வருமா? வராதா?...அவருக்கும் கோபம் வந்தது.
”பிள்ளையைக் கூப்பிட்டு… என்ன கொண்டுவந்தாய்
என்று கேட்க வரட்டித்துண்டுகளை காட்டினான். பிள்ளை… ”ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க
பிள்ளையோ……”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” சொல்லை ரத்தின சொல்லாக உதிர்த்தான். காண்க பட்டினத்தடிகள்
அவ்வளுவுதான்……”மாடமாளிகை…கூடகோபுரம்…..அத்தனையும்
துறந்து காவிஉடை தரித்தவர்தான் பட்டினத்தடிகள் business short stories
புத்தனுக்கு….
” நிலையில்லாதவைகளே நம்மை ஆட்சி செய்கின்றன என்றும் ஆசைகளே துன்பத்திற்கு காரணம் என்றும்
புரிந்து துறவறம் பூண்டார்
பட்டினத்தடிக்கோ……சுகபோகத்தில் மூழ்கினாலும்….சொத்துக்களில்
புரண்டாலும்…..கடைசியில் ஒன்றுமில்லை என்று புரிந்து துறவறம் பூண்டார்
எதற்கு
இந்த நேரத்தில் இந்த கதை என்கிறீர்களா? ”தேர்தல் நேரத்தில் ஆயிரம் கோடி… ஆறுநூறு என்றார்களே“““
அதுதான் இந்த ஆக்கத்திற்கான தூண்டுதல்.
அகில உலகையும் வென்ற மாவீரன் அலெக்ஸாண்டர்
தான் இறந்த பிறகு எதையும கொண்டு போக போவதில்லை என்பதன் அடையாளமாக தன் இறப்பிற்கு பிறகு
சவப்பெட்டியின் வெளியே என் இரு கரங்கள் இருப்பதாக ஏற்பாடு செய்யுங்கள்.
அவை ”தான் எதையும் கொண்டு போகவில்லை” என்பதை
உலகிற்கு அடையாளம் காட்டும் என்றார் அரியணையில் அளவிலா ஆசைக் கொண்ட மாவீரன் அலெக்ஸாண்டர்.
கோடிகளில் புரண்டாலும்… தங்கத்திலேயே வைரத்திலேயே
இழைத்து இழைத்து அரண்மனைக் கட்டி வாழ்ந்தாலும் கடைசியில் ஆறடி நிலம்தான் சொந்தம் என்று
முன்னோர்கள் எழுதி விட்டு சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்