4/17/2019

உங்க வீட்டு திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள் DO YOUR VOTE AS NATION DUTY


              ஊர்த்திருவிழா என்றால், ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி கூட்டம் போட்டு அலசுவார்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று. ஆனால் இது  உங்கள் வீட்டு திருவிழா…ennathuli
https://ennathuli.blogspot.com
உங்க வீட்டு திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள் DO YOUR VOTE AS NATION DUTY


                தேர்தல் திருவிழாதூங்கி கொண்டு இருந்தவர்களெல்லாம், தேர்தலில் போட்டியிட்டால், எவ்வளவு தேறும்என்று கணக்கு போடும் நேரமிது.
                எந்த கூட்டணியோடு கைக்கோர்த்தால், அடுத்த ஐந்தாண்டுக்கு அரசைக்  கைப்பற்றலாம் என பெரிய கட்சிகளின் கனவாக இருக்கும் நேரமிது.  ஈயாடிக் கொண்டிருக்கும் அச்சகங்கள், பிளக்ஸ் பேனர் நிறுவனங்கள், கொடிகள் விற்பனையாளர்கள், ஓவியர்கள், சவுண்ட் சர்வீஸ்காரர்கள் மற்றும் மேடை அமைப்பாளர்கள், ஏன் போஸ்டர் ஓட்டுபவர்களுக்கு கூட வரும்படியான நேரமிது.motivated
        பெரும்பாலான மக்களின் மனதிலோஅடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்று தங்களுக்குள்ளாகவே அலசுவார்களே தவிரஎந்த கட்சிக்கு தனது வாக்கு என்பதை தீர்மானிக்க மாட்டார்கள். அவர்கள் மதில் மேல் பூனைகளாக காத்திருப்பார்கள்.
                இந்த பெரும்பாலான மக்கள் யாரென்றால் நடுத்தர வர்க்கத்தினர், ஏழை எளிய மக்கள், படித்தறியாத பாமரர்கள் இவர்கள்தான். , தமது வாழ்வாதாரத்தை எந்த கட்சி உயர்த்தப்போகிறது என்பதை யோசிப்பார்கள். இந்த யோசிப்பைத்தான் அரசியல் கட்சிகள் கடைசி நேரத்தில் அன்பளிப்பாகவோ, பணமாகவோ கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கி விடுவார்கள்.. விலைபோனால், அடிமைகள்தானே? யோசிக்க வேண்டாமா ? article
                  வாழ்வதற்கு அடிப்படை தேவைகளான குடிநீருக்கும், மின்சாரத்திற்கும், குடும்ப அட்டைக்கும் போராடுகின்ற மக்கள், ஜனநாயக முக்கிய கடமையான வாக்களிப்பதற்கு கையூட்டு வழங்கும் கட்சிகளை எதிர்த்து ஏன் குரல் கொடுக்க கூடாது? நீங்கள் குரல் கொடுக்காதவரை….உங்களின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்தியே கட்சிகள் தங்களின் பெரும்பான்மையை நிருபித்து கொள்வார்கள்.
                பிறகு, இந்த கட்சி சரியில்லை, அந்த கட்சி தேவலாம்அடுத்த தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம் என்று புலம்புவதில் புண்ணியமில்லையே!
                நாகரிக வளர்ச்சியில் முன்னேறி விட்டோம், கீரை விற்பவர்கள் முதல் அனைவரின் கைகளிலும், அலைபேசி இருக்கிறது. அதில் வாட்ஸ் அப், முகநூல் இன்னும் சமூக வலைத்தளங்கள் உள்ளன. அவற்றில் எத்தனைப் பேர் தேர்தல் தொடர்பான நல்ல கருத்துகளை பதிந்து வருகின்றனர்.
                அவற்றைப் பார்த்தும், தேர்தல் ஆணையம் நடத்தும் விழிப்புணர்வு விழாவினைப் பார்த்தும்….. நீங்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால், ஜனநாயக கடமையில் இருந்து தவறி விட்டீர்கள் என்றுதானே அர்த்தம்.short stories
                பொதுமக்களுக்கு எப்படி அரசாங்கம் தன்னுடைய கடமையை செய்ய காத்திருக்கிறதோ, அதே போல, ஜனநாயகத்திற்கு விரோதமாக அன்பளிப்பு தரும் கட்சிகளை, பணம் வழங்கி விலைக்கு வாங்கும் கட்சிகளை புறக்கணியுங்கள். அப்போதுதான், எதிர்கால இந்தியா வல்லரசு என்று வரலாற்றில் நிலைக்க செய்யலாம்.
                அதை விட்டுவிட்டு வழக்கம்போலவேநாங்க இருப்போம், நீ இந்த கட்டுரையெல்லாம எழுதி, ஒண்ணும் கிழிக்க வேணாம்என்றால் எனக்கு ஒன்றும் இல்லைஜனநாயக கடமையை உணர்த்தினேன் என்ற திருப்தியாவது எனக்கு எற்படும் இல்லையா ? யோசியுங்கள், செயல்படுங்கள்.
                                                               
                                                               

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...