4/27/2019

பருத்தி புடவையில் ஜொலித்த நிரோஷா glittering with cotton saree


                                நல்ல  உச்சி வெயில்வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது. யாரென்று போய் பார்த்தாள் கமலம். தூரத்து சொந்தமான வேதமும், அவள் மகள் நிரோஷாவும்  டாக்ஸியில் இருந்து இறங்கினார்கள் ennathuli

                        வீட்டுக்காரருக்கு உறவு முறையில் தங்கை ஆகிறாள். நாத்தனாரை வரவேற்காமல் விடமுடியுமா? வா, வேதம், வா, நிரோஷா என வரவேற்றாள்.
https://ennathuli.blogspot.com
பருத்தி புடவையில் ஜொலித்த நிரோஷா glittering with cotton saree
            

                         நிரோஷா தொப்பலாய் நனைந்திருந்ததோடு, உஸ்உஸ் என்று பாம்பு சீறுவது மாதிரி மூச்சிரைக்க வந்தாள். வேதமோ  ரிலாக்ஸலாக இருந்தாள்.  ஏன்டி, வேதம் டாக்ஸியல .சி இல்லையா? கேட்கஅவசரத்திற்கு இந்த டாக்ஸிதான் கிடைச்சுது என்றாள்.
                         ”என்னம்மா நிரோஷா இப்படி தொப்பலா  நெனைஞ்சிருக்கீயே, அப்படின்னு வேதம் கேட்க, ”டாக்ஸில காத்தே வரலே, அத்தே ஆதான்என்றாள்.short stories
                        ”காத்து வராதது இருக்கட்டும், இந்த வெயில் காலத்துல, நீ ஏன் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு வந்தே, ஒரு நல்ல காட்டன் சேலையாக் கட்டிக்கிட்டி வந்திருந்தா, இப்படி தொப்பலா நனைஞ்சிருக்க மாட்டீயேசேலைக் கட்ட தயங்கீறீயே என்றாள் வேதம்.
                        ”என்ன அத்தே, இந்த காலத்துல காட்டன்  சேலையா, நோ.நோ, என் பிரண்ட்ஸ் மத்தியில என் இமேஜ் என்ன ஆவதுஎன்றாள்.
                        ”ஏன்டி வேதம், நீயாவது ஒன் பொண்ணுக்கு சொல்லக்கூடாதா, motivated stories
                        இந்த காலத்துல, அம்மா பேச்சை எந்த பொண்ணு கேக்குதுஅலுத்து கொண்டாள். நீயே ஒன் மருமகளுக்கு சொல்லிடுஎன்று ஒரு அறைக்குள் நுழைந்தாள்.
                        அவர்கள் இருவரும் ஆசுவாசப்படுத்திக் கொண்டபின். நிரோஷாவைக் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டாள் வேதம்.
                        “அடியே நிரோஷா, காட்டன் சேலைய மட்டமா நெனைக்காதே. அதோட மதிப்பு ஒனக்கு தெரியுமா ?
                       
             இந்த பருத்தி சேலைகள் இப்ப நவநாகரீக காலத்துல       வந்ததுன்னு நெனைச்சிகிட்டியா? இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே மெசபடோமியர் காலத்திலேயும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயும் பயன்படுத்தி இருக்காங்க. அதோட சுமேரியர்கள், பாபிலோனியர்கள், ஆரீயர்கள் மற்றம் பாரசீகர்கள் எல்லோரும் இந்த பருத்தி சேலையை பயன்படுத்தி இருக்காங்கன்னா பாரேன்என்றாள்.useful tips
                        பருத்தி சேலையில பலவிதம் இருக்கு. அந்தந்த ஊர்ல அதுக்கு ஒரு பேர்.
           காதியில தயாரிக்கப்படுகிற பருத்தி சேலைகளை எல்லா பெண்களும் விரும்பி அணியிறாங்க.
             வங்காள பருத்திஇது ரொம்ப மிருதுவாகவும், பல்வேறு வடிவமைப்பாகவும் இருக்கும். இதே பருத்தி சேலை கொல்கத்தாவிலவிதம்விதமா பூத்தையல் போட்டு, தங்க நிற பூக்கள் டிசைன் போட்டு லம்தானி டாக்கை என்கிறார்கள்.ennathuli
                        லக்னோவி சிகான், ”என்ன அத்தே, நைலான் மாதிரி பேர் இருக்குது காட்டன்கிறீங்க என்றாள். லக்னோவி சிகான் இது பருத்தி புடைவையோட பேருதான். லக்னோ பகுதியில் புடவைகள்ல துளையிடப்பட்ட வித்தியாசமாயும், பூத்தையல் டிசைன்ஸ் போட்டு இருக்கும்.
                        சாம்பல்பூர்இந்த ரக பருத்தி சேலைகள் ஒடிசாவில் தயாரிக்கிறாங்க. முந்தானை பகுதியில் விரிவாய் பூத்தையல்போட்ட பார்டர்  இருக்கும்.
                        ”அத்தே, பருத்தி சேலை புராணம் இன்னும் இருக்கா, முடிஞ்சிடுச்சா என்றாள் நிரோஷா.
                        இருக்குடி நிரோஷா, ”சண்டேரி-ன்னு ஒரு வகை இருக்கு. இது வேத காலத்திலேயே பயன்படுத்தி இருக்காங்க. அதிகப்படியான வேலைப்பாடு உள்ள பருத்தி சேலை. இதைக் கட்டிக்கிட்டா…  அந்தஸ்துல நம்மளை மேலே தூக்கி விட்டுடும்அப்படி ஒரு சேலை இது.
                        ஜம்தானிஇந்த பருத்தி சேலைதான், ஒங்க மாமா மாதிரியே சிக்கலான ஒண்ணு. சிக்கலா இருந்தாலும், தங்க நிறத்துல பூத்தையல்கள் போட்டு இருக்கும் என்றாள் வேதம்.
                        ”அத்தே, பருத்தி சேலைல இவ்வளவு ரகங்களா, வாயைப் பிளந்தாள்.
                        அடியே நிரோஷா, ”படிக்குற பொண்ணு ஜீன்ஸ்,  போட்டுக்கீறீயே,  ஜீன்ஸ் போட்டு நடிக்கிற பிரபல நடிகைகள் எல்லாம், பருத்தி சேலைலதான் சிம்பிளா இருப்பாங்க தெரியுமா? , விலையும் குறைச்சல்.  நம்ம நாட்டோட பிரதமரா இருந்த இந்திராகாந்தி கூட பருத்தி சேலைலதான் சிம்பிளா இருப்பாங்க. நம்ம தமிழ்நாட்டுக்கு வந்தா காஞ்சிபுரம் போய் பட்டுப்புடவைகளையும், பருத்தி சேலைகள் எங்கே கிடைக்குதுன்னு கேட்டு வாங்கிட்டு போவாங்களாம்,” கேள்வி பட்டிருக்கேன் என்றாள் வேதம்.
                                    இதெல்லாம் உண்மையா அத்தே, உண்மைதான் நிரோஷா, ஒன் மாமா, கம்ப்யூட்டர்ல பாக்கும்போது, கூடவே போய் நின்னுக்குவேன், அப்ப தெரிஞ்சிகிட்டது, இதெல்லாம் என்றாள்.
                        ”அப்படியா அத்தே, கேட்டுக் கொண்டே அறைக்குள் போனவள் திரும்பி வரும்போது பார்த்தால், பருத்தி சேலைக்கட்டிக் கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
                        அடியே நிரோஷா, இந்த பருத்தி புடவை நேத்துதான் ஒன் மாமாவோட சண்டை போட்டு கடைக்கு போய் வாங்கி வந்தேன், நீ கட்டிக்கிட்டியாவேதத்திடம்அடியே ஒன் பொண்ண வந்து பாரு”  செல்ல புகாரளித்தாள் வேதம்.
                                          wow so many varities in cotton Saree click and see wikipedia                                                  

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...