வழங்குபவர் – நளமகராஜா நாகராஜன்
நளமகராஜாவின் வாழ்க்கை குறிப்பு
– நளமகராஜா சிறிய வயதில் வறுமையினால் ஒரு வேளை சாப்பிட கூட வழியில்லாமல்…
அலைந்து திரிந்த போது ஒரு ஓட்டல் ஒன்றில் வேலைக் கேட்டு நின்றார்.ennathuli
வெந்நீர்
தயாரிப்பது எப்படி How to
prepare Hot water
வெந்நீர் தயாரிப்பது எப்படி How to prepare Hot water
ஓட்டல் முதலாளி உனக்கு என்ன
தெரியும் என்று கேள்வி கேட்டார். அதற்கு நளமகராஜா இப்படி பதில்
சொன்னார்.
”இட்லிக்கு மாவு அரைக்கணும்னா
ஒரு மடங்கு அரிசிக்கு இரண்டு மடங்கு உளுந்து போட்டா .. இட்லி
குஷ்பு மாதிரி கும்முன்னு வரும்”என்றார்.
தோசைக்கு? என்று கேட்டார் முதலாளி
தோசைக்கு மாவு அரைத்த பின்னர்
அதில் சிறிதளவு ரவையை போட்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரைப் போட்டு தோசை சுட்டால்
தோசை முறுகலாக தூக்கலா வரும்ன்னு சொன்னார்.
அது சரி மெது வடை எப்படி
போடுவே!
உளுந்து மாவு அரைச்சு
வாணலியில் போடும் முன்னால மாவுக்கு நடுவில நம்மளோட பெரு விரலால ஒரு ஓட்டைப் போடணும்” என்றார்.motivated
stories
சரி..சரி. சலிப்பாய் … ”மெது வடையில
எதுக்கு நடுவில ஓட்டைப் போடணும்
”மாவுக்கு நடுவுல ஓட்டைப்
போட்டாதான் எண்ணை உள்ளாற போய் வெந்து சாப்பிடருசியாய் இருக்கும்.
”ஏதோ தெரிஞ்சு வைச்சிருக்க.
முதலாளிக்கே உரிய கெத்தாக…”ஏன் மசால் வடையில ஓட்டைப்
போடறதில்லே”
”ஐயா பையன் மாட்டிகிட்டான்”
உள்ளுக்குள்ளா நினைச்சார்.
”ஸார், மசால் வடை மாவு கடலைப் பருப்புல செய்யறது. அதுல ஈரப்பதம்
குறைவாய் இருக்கும். ஆதனால எண்ணையை கிரகிச்சு நல்லா வேகும்.”
என்றார் நளமகராஜன்.
”சரி..சரி .. சமையலறைக்குள்ளாற மாஸ்டருக்கு உதவியாளா இரு”
என்று அப்பாயிண்ட்மென்ட் கொடுத்தார்.
இப்படி வேலைக்கு
சேர்ந்தவர் பின்னாளில் பைவ் ஸ்டார் ஓட்டலில் செப் ஆக பணிபுரிந்து ”நளமகராஜா”பட்டம் வென்றவர்.
அந்த நளமகராஜாதான் இன்றைய
சமையல் குறிப்பை வழங்குகிறார் astrology
இன்றைய சமையல் குறிப்பு நிகழ்ச்சியில்
நாம் காணப் போவது ”வெந்நீர் தயாரிப்பது எப்படி?”
தேவையான பொருட்கள்
வாயகலமான பாத்திரம்
இரண்டு பாட்டில் மினரல் வாட்டர்
ஒரு கேஸ் ஸ்டவ்
வாயகலமான பாத்திரம் என்பது
அது அலுமினிய பாத்திரமாக
இருக்கலாம். பித்தளைப் பாத்திரமாக இருக்கலாம். அலுமினிய பாத்திரமெல்லாம் எங்கெங்க
வாங்கறோம் என்று சொன்னால் பித்தளைப் பாத்திரம் உபயோகிக்கலாம்.
அதிலும் ஒரு சிக்கல்…
பித்தளைப் பாத்திரமென்றால் அதில் ஈயம் பூசினால்தான் நல்லது. அப்படியே அடுப்பில் வைத்து வெந்நீர் சமைத்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு
தீங்கானது. எனவே தற்காலத்திற்கேற்ப… நீங்கள்
உங்கள் விருப்பமாக எவர்சில்வர் பாத்திரத்தையே பயன்படுத்தலாம்.
அதற்கு தடையேதுமில்லை.
”தடையில்லா சான்று” இப்போதே வழங்கி விட்டேன்.useful
tips
வாயகலமான பாத்திரத்தைத் தேர்ந்தெடுக்க
முதலில் நீங்கள் உங்கள் தலையை நுழைக்க வேண்டும். நுழைந்த்தா?
மிகச் சரியாக தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
அதில் இரண்டு பாட்டில் மினரல்
வாட்டர் தண்ணீரை ஊற்றவும்.
ஊற்றியடன் கேஸ் அடுப்பைப்
பற்ற வைத்து… சிம்மில் வைக்வும் (பி.கு அலைபேசி சிம்மில் வைக்க கூடாது) அதன் மீது பாத்திரத்தை
நிலைநிறுத்தவும்.ennathuli
பாத்திரத்தை வைத்து விட்டு..அங்கும் இங்கும் நகரவோ! டி.வீ சீரியல்
பார்க்கவோ செல்லக் கூடாது. ஏனென்றால் சமையலில் மிகப் பிரதானமானது
”வெந்நீர் சமைப்பதுதான்”
பத்து நிமிடங்கள் பாத்திரத்தையே
உற்று… ”நயன்தாராவைப் பார்ப்பது போல பாருங்கள்.
தளதளவென கொதிக்கும் சப்தம்
கேட்கிறதா,? கேட்கவில்லையா? அதற்குதான்
முதலிலேயே வெந்நீர் சமைக்கும் போது…டி.வீ
சீரியல் பார்க்க கூடாதுன்னு சொன்னேன்.
டி.வீயை அணைத்து விட்டீர்களா? இப்போது சப்தம் கேட்குமே
சப்தம் படிப்படியாக குறைந்து
அமைதியாக கடல் போல் வெந்நீர் இருக்கும்.
அமைதியாக இருக்கிறதென்று
உங்கள் ஆட்காட்டி விரலை விட்டால் ” தீக்கு விரலை வைத்தால்”
பாடல் பாட வேண்டியிருக்கும்.
இப்போது பாத்திரத்தை இறக்கி
சிறிது நேரத்திற்கு பின்… விரலை விட்டால் “ச்சம்மா மார்கழி மாசத்துல ஸ்வெட்டர் போட்ட மாதிரி வெதுவெதுப்பாய் இருக்கும்.
அந்த வெந்நீரை பிளாஸ்கில்
ஊற்றவம். ஊற்றுவதற்கு
முன்பு பிளாஸ்கின் அடிப்புறத்தில் ” அதிக சூடு பிளாஸ்குக்கு ஆபத்து”
என்ற எச்சரிக்கைப் பொறிக்கப்பட்டிருக்கும். அதை
கவனமாக படித்த பின் பிளாஸ்கின் வாயில் ஊற்றவும்.
என்னது? பிளாஸ்கின் வாயில் ஊற்றுவதற்கா? வெந்நீர்.
சொல்தைச் செய்யுங்கள்
பிளாஸ்கில் ஊற்றியபின் இறுக
மூடி … பீரோவில் வைத்து பூட்டி விட்டு படுக்கவம்.
நடுஇரவில்…வயிறு ”கடமுடா” சத்தம் கேட்கும்.
அப்போது…. வெந்நீரை இரண்டு தம்ளர் குடித்து வீட்டு
தூங்குங்கள்.
மறுநாள் காலை மிக சுறுசுறுப்பாக
வேலை செய்வீர்கள்.
என்னுடைய சமையல் குறிப்பைப்
பின்ப்றிற வெந்நீர் தயாரித்து” நளமகராஜா பட்டத்தைப் பெறுங்கள்.
நன்றி ! வாழ்க வெந்நீர்! வளர்க வெந்நீர் ஊற்று.
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்