நிழலின் வாயிலாக ரசிகர்களை
இதுவரை ஆட்சி
செய்து உலக
நாயகனாக வலம்
வந்து கொண்டிருந்த  திரு. கமலஉறாசன், சின்னத்திரையிலும் கண்சிமிட்டி விளையாடிக்
கொண்டிருக்கின்றவரை… வருவாயா?
அரசியலுக்கு, வந்து
விடுவாயா? உனக்கென்ன தெரியும் அரசியல்?  ஊழலைப் பற்றி ஊதுகுழலாய்
ஊதுவது உதவாது,
உன் வேலையைப்
பாரு” என்று சொடுக்குகளால் சவால்
விட்டு, அவர் ஒரு ரோஷப்பட்டு
அரசியலுக்கு வந்து…மாநிலங்களவை உறுப்பினர்  ஆகி
விட்டால்…. கமலஉறாசன்  –பேட்டி ஒரு
கற்பனையே
![]()  | 
| கமலஉறாசன் –பேட்டி ஒரு கற்பனையே | 
               பதவியேற்ற பின் மக்களுக்கு
அளிக்கும் அறிக்கையின்
வாசகங்கள் இவ்வாறாகவும்
இருக்கலாம்.
              ” வெள்ளித்திரையில் விளையாடிக் கொண்டிருந்த என்னை,
சின்னத்திரையில் கண்சிமிட்டவும் வைத்த ரசிக பெருமக்களுக்கும்,
பொதுமக்களுக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றியினை
நெகிழ்ச்சியாக வெளியிடுவதில்
பிரியமாய் உள்ளேன்.
                     ”ச்சும்மா
வாச்சும் நான்
போய் கொண்டிருக்கும் போது, வருவாயா? வந்து விடுவாயா? சவால்களால்  சொடுக்கிய விரல்களுக்கு சுருக்கமாக
பதில் அளிக்கத்தான்
வந்தேன் அரசியலுக்கு.  விரல் சொடுக்கியவர்களின் விரல்கள்
தேய்ந்திருக்கும் என்பது
நிதர்சனமாகி உள்ளது
என்பதை எண்ணுகையில்
என்னியதம் பூரிக்கின்றது.
பூப்பூக்கின்றது முகம்.
               இது கடவுளின் கணக்கல்ல…
கடவுளுக்கும் எனக்கும்
காதjதூரம் என்பது
மக்களுக்கு தெரிந்ததே.
அதற்காக, உங்களை நான் கும்பிடாதே
என்று கோரிக்கை
விடுபவனல்ல நான்…..
கும்பிட்டால் வாழ்வு
உயர்வு ஏற்படுமென்றால் கும்பிடுங்கள்…. உழைக்காமல் கும்பிடுவது…அந்த கடவுள்
சிலையை உருவாக்கிய
சிற்பிக்கும் வலிக்குமல்லவா?
ஆதனால்தான்.
               இப்போது, எனக்கு நான்கு
காற்கள் தந்திருக்கின்றீர்கள்.
நான் கால்களை
நம்பியே திரையுலகத்திற்கு வந்தவன், நடன இயக்குனராக
வந்த நான்
கால்களை மறந்து
விடுவேனோ ? கால்களை  முடுக்குவதிலும், முடக்குவதிலும் உள்ள
ஈடுபாட்டை படத்திலும்
பார்த்திருப்பீர்கள். நான்கு
காற்கள் உள்ள
சிம்மாசனம் என்னருகில்
காத்திருக்கிறது. ”உன்
கால்களை 
பதிப்பாயா? என்று கேட்டவர்களுக்கு பதிலாய்
நான்கு காற்கள்
தந்து கௌரவப்படுத்தி
உள்ளீர்கள்.
               அரியாசனம் தந்துள்ளீர்கள், எனக்கு
ஆசனமெல்லாம் அவ்வளவாக
தெரியாது!  உறாஸ்யம் நன்றாகவே
தெரியும். அந்த உறாஸ்யத்தால் மக்களாகிய
உங்களை சிரிக்க
வைத்து வாழ
வைப்பேன், அண்டை மாநிலத்தார் சிரிக்கும்படி
அல்ல சிந்திக்கும்படி.
              என்னை
குழப்பவாதி என்று
சொல்பவர்களுக்கு ஆம்
குழப்பவாதிதான். 
வார்த்தைகளில் குழப்புவன்
அல்ல நான்,  ஆனால் திரையுலகத்தினர் எனக்கு
”சகலகலாவல்லவன்” என
பாராட்டி மகிழ்ந்தனர்.
              ஒரு
சிலர் கமலுக்க
”இச்”சென்ற சத்தம்
பிடிக்கும் என்று
கேலிசெய்தார்கள். . குழந்தையின்
கன்னத்தில் ”ஒரு
இச்”
கொடுத்து பாருங்கள்.
குழந்தையின் முகம்
ரோஜா மலராய்
மலர்ந்திடாதா? ஆதனால்
”இச்”
பிடிக்கும் என்பேன்.
              “என்னை
விளையாட்டு பிள்ளை”
என்றார்கள் விளையாட்டு
பிள்ளை ”இச்” கொடுக்காமல் “நச்”சென்ற அறையா
?விடும்.
              “இளமை
இதோ..இதோ.
” என்று பாடியவனுக்கு
ஏழைகளின் துன்பம்
எங்ஙனம் அறிவார்
என்றார்கள். 
நான் பாடி
நடித்த தோ
”இளமைக்காலம்” அந்த
காலத்தில் ”ஓதி உலகளந்த உத்தமன்
பேர் பாடி”
என்றா நடிக்க
முடியும். அதையும் கூட பிற்காலத்தில்
தசாவாதாரத்தில் நடித்தேன்
அல்லவா? திரை வேறு இந்த
அரசியல் அரங்கு
அறை வேறு
என்று புரிந்து
கொண்டவன் நான்.
              “ வரிகள்
செலுத்தினாயா ? ” என்று
விளிக்கிறார்கள். விளிக்கிறவர்கள் யாரென்றால், வருமான வரி
சோதனைகளுக்கு பயந்து
பதுங்கியவர்கள் என்று
மக்களுக்கு தெரியாதா
? 
              ” அரியாசனத்தில்
அமர்ந்து அதில்
ஆசனம் செய்வதற்கு
நான்  நண்பர் ரஜினியைப்
போல யோகம்
கற்றவனல்ல .   நான் தந்த்தெல்லாம்
”உழைப்பு என்ற
யாகம்” அந்த யாக வேள்வியில்
இன்னும் மூழ்கி
முக்குளிப்பாய் என
மக்கள் அன்பான
ஆணை அளித்துள்ளார்கள்.
அதை அணைப்பதன்
வாயிலாக  ஆயிரமாயிரம் நண்மைகள்
உண்டெனின் மக்களுக்காக
இதோ ஏற்கிறேன்
அரியாசனம். 
              “என்
அரியாசனத்திற்கு சரியாசனமாய்
யார் நிற்பர்?”
இதுதான் என்
விளி. என் விளிக்கு விடையளிப்பவர்
வரலாம் நெஞ்சுரத்தோடு.

Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்