4/21/2019

பிச்சுவும் கிச்சு மாமாவும் PITCHU WITH VICHU


டேய் பிச்சுமணி நாளைக்கு ஒன்னோட மாமா கிச்சு 

வர்றாரு அவருக்கு காது கொஞ்சம் மந்தம் பார்த்து பேசுடா என்றாள் அம்மா பிச்சுவும் கிச்சு மாமாவும் PITCHU WITH VICHU
https://ennathuli.blogspot.com
பிச்சுவும் கிச்சு மாமாவும் PITCHU WITH VICHU 

           

                  மறுநாள் அதிகாலை விடிந்தும் விடியாதமாய்ஆட்டோவில் வந்திறங்கினார் பிச்சு மாமா“ennathuli

                                     அப்போதே ஆரம்பித்து விட்டார் அலம்பலை பிச்சு மாமா
                                    ஏம்ப்பா அட்டோ ஒண்ணோடதா
                                    இல்லீங்கவாடகைஓட்டுறேன்.
                                    அப்போ நீ ஆட்டோ ஓட்டலையா?” கேள்வி கேட்க ஆட்டோக்காரன் ஒருமாதிரியா பார்க்க ஆரம்பித்தான்.
                                    வீட்டுக்குள் நுழையும் போதே… ” ஏன்டா பிச்சு அடுத்த தெருவில என் பிரண்டு இருந்தானே விச்சு அவன் இருக்கானா சொந்த ஊருக்கு போய் செட்டிலாயிட்டானா? கேட்டார்.
                                    ஆமாம் மாமா அவர் செட்டிலாயிட்டாரு… “என்னது? செட்டியாயிட்டாரா? என்னடா நம்ம குலத்துல பிறந்தவரு இப்படி செய்யலாமோ? ஊருக்கே அடுக்கல என்றார். Comedy stories
                                    காதுக்கு கிட்ட போய் மாமா அவர் சொந்த ஊருக்கு போயிட்டாரு” short story
                                    என்னடா சொல்றே ? நொந்து போயிட்டாரா? எப்படிப் பட்ட குடும்பம் அந்த காலத்துல  நல்லா வாழ்ந்த குடும்பம் கடவுள் நல்லவங்களைத் தான் சோதிப்பார்ன்றது உண்மைதான் என்றார்.
                                அண்ணே ! தோசை வார்க்கணுமா? இட்லியா?
              என்னது அட்லியா? அந்த பையன் பேஷா படம் பன்றானே சின்ன வயசுல என்னா திறமை. அவன் ஆஸ்கார்டு ஆவார்டு கூட கிடைக்கும்” நகைச்சுவை கதைகள்
          அண்ணா! அண்ணா நான் கேட்டது சாப்பிட இட்லியா தோசையா.
          எனக்கு இட்லி போறும்மா
          அண்ணே இட்லிக்கு கொத்துமல்லி சட்னியா? மிளகா பொடியா?
          போம்மா தெருவுல எங்க நடக்க முடியுதுஒரே கொடியா பறக்குது. அந்த கொடிக் கம்பங்கள் எல்லாம் நடக்கற பாதையில இருக்கு
          அண்ணே இந்தாங்க இட்லி கொத்துமல்லி சட்னிதான் சாப்பிடுங்க.
          இட்லி சாப்பிட்டவுடன்.. பயணக் களைப்பு இருக்கும் அந்த ரூம்க்குள்ளாற கொஞ்ச நேரம் தூங்குங்கோ
          சரி..சரிநான் ஏம்மா ஏங்கறேன். எனக்கோ வயசாயிடுச்சு ஒன் அண்ணி போய் எத்தனை வருஷமாச்சு நினைவுப்படுத்திட்டே
          தூங்கி எழுந்து வந்தவுடன்ஏன்டா! பிச்சு. கிரவுண்ட்ல கிரிக்கெட் விளையாடுவாங்களே அந்த கிரவுண்ட் இருக்கா இல்லே அதையும் பிளாட் போட்டு வித்துட்டாங்களா?
          மாமா ! அந்த கிரவுண்ட் அப்படியேத்தான் இருக்குஆனா இப்போ கிரவுண்ட்ல பசங்க சரியா விளையாடுறதில்லே
          ஏன்டா அங்க பிச்சு சரியா விழறதில்லையா?
          ஐயோ மாமா பிச்செல்லாம் விழுது. விளையாடுறதில்லை.
          போடா! நானும் ஒன் அப்பனும் அந்த காலத்துல கிரிக்கெட் கிரவுண்ட்டுக்கு போனா சாப்பாடு வேணாம் தண்ணி வேணாம்.
          தண்ணி வேணுமா? மாமா
          டேய் மன்னியைக் கேட்டியா? என் மன்னி கோவிச்சுகிட்டு அவ ஆத்துக்கு போய் திரும்பி வரலே அண்ணனும் அம்மாஞ்சியா இருக்கான்டா
              மாமா! நான் கேட்டது குடிக்க தண்ணி வேணுமா?
          கொஞ்சம் சூடா பில்டர் காபி போட சொல்லேன். ஒங்க ஆத்து காபி கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரியே இருக்குமே
          அம்மா.. அம்மா! மாமாவுக்கு டிகிரி காப்பி வேணுமாம்
          இப்பத்தானே குடிச்சாரு. அதற்குள்ளவா.
          அண்ணே இப்பத்தான் காப்பி குடிச்சேள். தம்ப்ளர் கூட அலம்பலையே இதோ பாருங்க்
          அப்படியா ! சரி சரி. ஏன்டா நீ இப்போ என்ன பன்றே?
          மாமா! நான் கம்ப்யூட்டர் கம்பெனியில சாப்ட்வேர் என்ஜினியரா இருக்கேன்.
          அமாம்ஆமாம் எப்பவும் நாம சாப்டா இருந்த தான் மத்தவா நம்மளை மதிப்பா அவங்களும் நம்மகிட்ட சாப்டா பழகுவாங்கா.
          மாமா நான் சொன்னது சாப்ட்வேர் என்ஜினியர் காதோரம் மெதுவாய் சொன்னான்.
          புரிஞ்சிடுச்சுசேப்டியா இருக்கணும்ன்னு சொல்றே!
          சமையலைறக்குள் இருந்து டேய் பிச்சு மாமா ஓய்வெடுக்கட்டும் பிறகு பேசிக்கலாம்என்ற குரலை கேட்டு வெளியே போனான் 
      வெளியே போனவன் எதிரில்  ஒருவர்ஏம்ப்பா தம்பி ! இங்க கோதண்ட பெருமாள்  கோவில் போற வழி சொல்லுப்பா
             இதோ போகுது பாருங்க வலப்புற சாலை அதில போனீங்கன்னா..
          தம்பி வலம்புரிச் சங்கு வாங்கி வைங்கன்னு ஒரு ஜோசியர் சொன்னார். அதை வாங்கி பெருமாள்  திருவடியில வைச்சு வீட்டுல வைச்சா அமோகமா  பணம் கொட்டுமாம்.
          ஐயோ! நானேக் கொட்டிக்கிறேன் என் தலையில குட்டுஎன்று குட்டிக் கொண்டு பிச்சுக் கொண்டு  ஓடினான் பிச்சுமணி
                     


No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...