தனது
இல்லக்கிழத்தியோடு  மகிழ்ச்சியாய் உரையாடிக் கொண்டிருந்த கைலாய ஈசன் சற்றே பதறுகிறார்.
          அதைப் பார்த்த பார்வதி ”என்னங்க.. என்னங்க பதட்டம் ஏன்?” அவரும் பதறுகிறார்.ennathuli
          ”ஆதோ வந்து கொண்டிருக்கிறான் பாரும்! யாரென்று தெரிகிறதா? ரோபோட் டெஸ்ட் கையாலயத்திலே-robot test at Kailash
![]()  | 
| ரோபோட் டெஸ்ட் கையாலயத்திலே-robot test at Kailash | 
          அவன் வந்தால் குடும்பத்திற்குள் குழப்பம்தானே. ஆதலால்
சற்றே பதட்டம்.comedy stories
          ”ஒங்களுக்கே பதட்டமென்றால்…நடுங்குகிறார் பார்வதி
          ”நாராயணா! நாராயணா நாராயணா!” தம்பூரா
இசையோடு நாராயண முழக்கமும் ஈசன் காதில் விழுகிறது.
          ”என்னுடைய இருப்பிடம் வந்தும் ”மச்சினன் பெயரை உச்சரிக்கிறானே!”
          ”எப்பவுமே எங்க அண்ணன் மேல ஒங்களுக்கு பொறாமைதான் போங்க” சிணுங்கினாள் பாரு. சே! பார்வதி
தேவியார். 
          ”பாருன்னு”  சொல்ல
அந்த ஈசனுக்கு மட்டுமே செல்லப் பெயர்.
          ”பிரபோ! ப்ரிலேன்ஸ் ஜர்னலிஸ்டின் அன்பு வணக்கங்கள்”
          ”என்ன நாராதா வழக்கம் போல ”பத்திரிகைக்காரன் குறும்பை
ஆரம்பித்து விட்டாயா?”
          ”பிரபு மகராஜிக்கு தெரியாதா? ஒரு இடத்தில் பத்திரிகைக்காரன்
இருந்தால் நல்லதுதானே நடக்கும்”
          ”ஆமாம்..ஆமாம் நல்லாவே தெரியுமே.. சரி..சரி வந்த விவரத்தைக் கூறும். நல்லதா கெட்டதா பிறகு பார்க்கலாம். Short stories
           இல்லை பிரபு ஆதான் மாம்பழத்தை ஏற்கனவே
கொடுத்து ஆதனால்..           முடிக்கும் முன்பே
 போதும். போதும் குடும்பத்தை இரண்டாக்கினது போதும்.
          இப்போதுதான் பிள்ளைகள் தங்கள் இருப்பிடத்தில் சூரியனின் எரிச்சலில் இருந்து
தப்பிக்க ஸம்மர் வெகேஷன் கைலாயம் வந்திருக்கிறார்கள். அதைக் கெடுத்து
விடாதே நாராதா? என்றார் 
          இப்போது பூமியில் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பான ”ரோபோட்”
கொண்டு வந்திருக்கிறேன். தங்களுக்கு நினைவு பரிசாக.
          இந்த ரோபோட் தங்களிடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் கொண்டுவந்தேன்.
          சரி..சரி. வழக்கம் போலவே ஆரம்பித்து
விட்டாயா?
          இல்லை பிரபு வேண்டாமென்றால் திருப்பி எடுத்து செல்கிறேன். 
          ”நாராதா ! கைலாயம் வந்து திருப்பி எடுத்து செல்வதா?motivated
          ”பாரு” ஒன் பிள்ளைகளைக்கூப்பிடு”
          ”போங்க … எனக்கு வெக்க வெக்கமா வருது, 
          ”என்ன வெட்கம் பிள்ளைகளைத்தானே கூப்பிட சொன்னேன். அதிலென்ன
வெட்கம் கிடக்கிறது.
          ”வெளியாளான நாரதர் எதிரில் நீங்கள் என்னை ”பாரு”ன்னு கொஞ்சறீங்களே” ஆதான் வெட்கம்.
          ”சரி பாரு! சாரி பார்வதி! அப்படியே
ஆகட்டும்” இனி வெளியாட்கள் எதிரில் கொஞ்ச மாட்டேன் இது அந்த ஈசன்
மேல சத்தியம்” 
          ”ஐயோ! ஈசனே! ஒங்க மேலேயே சத்தியமா”?
எனக்கு மஞ்சள் மாங்கல்யத்துக்கு பங்கம் ஏதுமில்லையே” 
                    ”அதெல்லாம் ஒண்ணும் ஆகாது
தைரியமா இரு”
          ”பிள்ளைகள் இருவருமான ”பிள்ளையாரும் முருகனும்”
வந்து சேர்ந்தனர்.
          ”அம்மையே அப்பனே! இன்றைக்கு உங்களின் திருவிளையாடல் நாங்கள்தானா”
” என்ன விவரம் சொல்லுங்கள் தந்தையே வணங்கி நின்றனர்.
          ”விளையாட்டெல்லம் ஒன்றுமில்லை! நாரதர் மானுட உலகத்தின்
புதிய கண்டுபிடிப்பான ரோபோட் கொண்டு வந்திருக்கிறார்.
          அதை உங்களில் யாருக்கு கொடுப்பதென்று யோசனைதான்.
          ”ஓஹோ வழக்கம் போல டெஸ்ட்டா” டெஸ்ட் வைக்கிற மாதிரி வைச்சு
ஒங்க செல்ல பிள்ளை கணேசனுக்கு பரிசா கொடுத்துடுவீங்க இதுதானே ஒங்கள் நாடகம்”
முருகனின் முகம் கார்த்திகைப் பெண்களின் கன்னம் போல சிவந்த து.
          இந்த முறை டெஸ்ட் கடுமையாக இல்லை மகனே சிம்பிள்தான்.himalayas
          ”அந்த ரோபோட்டை யார் சரியாக இயக்குகிறார்களோ அவர்களுக்குத்தான்.
          ”இந்தா முருகா நீ சோதனை செய்து பார்” முருகனின் கையில்
ரோபோட்.
          ஒன்றும் புரியவில்லை. முருகன் கையில் அந்த ரோபோட் தங்கவே
இல்லை. கைலாயத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஓடி ஒளிந்து ஆட்டம் காண்பிபத்த
து. 
              ”அப்பனே! இது நமக்கு சரிப்பட்டு வராது” ஒங்க செல்லப் பிள்ளைக்கே போகட்டும்” 
              அப்புறம் எங்களைக் குறைச் சொல்ல கூடாது சம்மதமா?
              ”சம்மதம் சம்மதம் சம்மதம்” என் அன்னையின் மேல் ஆணையாக.
          ஐயோ! முருகா ! அன்னையின் மேல் ஆணையா?
எவ்வளுவு சண்டையிட்டாலும் பக்கத்துணையாய் இருக்கும் ”பாருவுக்கு” நீ செய்யும் ஆணையால் பங்கம் நேர்ந்து விடாதே”
புலம்பினார் ஈசன்.
          ”ஈசா! யாமிருக்க பயமேன்” முருகன்
ஈசனுக்கு அருள்பாலித்தார்.
          ”பிள்ளையாண்டான் பிள்ளையாரே வாரும்” ஒன் கைவரிசையைக் காட்டு
பார்ப்போம்” 
              ரோபோட் இப்பொழுது பிள்ளையாரின் கையில் இருக்க அது அவரின் கைக்கு அடக்கமாய்
சொன்னபடி கேட்டது. 
              ”இதென்ன ஆச்சர்யமாய் இருக்கிறதே நமக்கு ஆட்டம் காட்டிய ரோபோட் அண்ணனுக்கு அடங்கி
விட்டதே இதில் ஏதோ மர்ம்ம் இருக்கிறது அம்மையே அப்பனே” வாதிட்டார்.
          ”ஒரு மர்ம மும் இல்லை மகனே முருகா ! ஒங்கள் இருவருக்கும்
எந்த டெஸ்ட் வைத்தாலும் ஒன் அண்ணன் கணேசன் ”ஈஸி மோடில்”
டிரை பண்ணி பாஸாயிடுறான்”
          ”நீயோ கஷ்டமான பீயிட்டர் மோடில் டிரை பண்ணி ஆதலால் ஒனக்கு காலதாமதம் ஆகிறது
அந்த இடைவெளியில் அவன்ஜெயித்து விடுகிறான் இதுதான் சூட்சும்ம் ”என்றார் ஈசன்.
          ”இருக்கட்டும். இருக்கட்டும். அந்த
ரோபோட் பார்க்கறதுக்கு அண்ணனின் வாகனமான ரேட் மாதிரியே இருக்கு. ஆதனால அந்த ரேட் அண்ணன் கிட்டேயே இருக்கட்டும். என் ரூட்டைப்
பார்த்துட்டு கிளம்பறேன். இந்த குளுகுளு கைலாயமும் வேணாம் நீங்களும்
வேணாம். Cool places
          எனக்கென்று ஒரு உலகம் இருக்கிறது அதில் தமிழ்ப்புலவர்கள் கவிபாட கேட்டு ஆனந்த
த்தோடு வாழ்கிறேன். வருகிறேன். முணுக்கென்று
கிளம்பினார் முருகன்.
          ”முருகா ! முருகா. பார்வதி தேவி
பின்னாலேயே ஓடுகிறார். அதற்குள் மறைந்து விடுகிறார் முருகர்.

Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்