ஆண்டு
தோறும் ”இந்த வருஷம் வெயில் அதிகமப்பா! உடம்வெல்லாம் எரியுது” என்று மக்கள் புலம்புவார்கள்.
”வெயில் அதிகரிப்பதற்கான காரணம் யார்?
மக்கள்தானே. வயல்வெளிகள் வீடுகளாகவும், தொழிற்சாலைகளாக மாறிவிட்டது.
குளுகுளு மலைவாசஸ்தலம் பயணமா இதை படித்து விட்டு செல்லுங்கள் |
ennathuli
பச்சைப்பசேல் என்றிருந்த தோப்புகளும் பராமரிக்க ஆள் இல்லாமல் கிடைக்கின்ற விலைக்கு விற்று விட்டு அந்த பணத்தை வங்கியில் டெபாசீட் செய்து விட்டு வீட்டில் ஒரு அறையில் குளிர்சாதன பெட்டியின் குளிர்ந்த காற்றை அனுபவிக்கிறோம். குளுகுளு மலைவாசஸ்தலம் பயணமா இதை படித்து விட்டு செல்லுங்கள் usefultips
மனிதர்களின் வசதிக்காக சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோர மரங்கள் சாகடிக்கப்படுகின்றன. இத்தோடு மட்டுமல்லாது இயற்கை பேரிடரும் தன் பங்குக்கு புயல் சூறாவளி என்று வீசி மரங்களை அடியோடு சாய்த்து விட்டு போகிறது.
ஒரு மரம் ஓங்கி வளர வேண்டுமானால் குறைந்த பட்சம் இருபது வருடங்களாவது ஆகும். அந்த மரங்கள் இடங்களெல்லாம் பட்டு போன பின்னே பகலவன் நம்மை காய மாட்டானா?
நன்றாகவே காய்வான் அதிலிருந்து தப்பிக்கவே ஊட்டி கொடைக்கானல் பிற மலைவாசஸ்தலங்கள் தேடி ஓடுகிறோம். அப்படி போவதற்கு முன்பு நம் வீட்டையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் அல்லவா அது என்னவென்று பார்ப்போமே! Short stories
”கோடைவெயிலை
சமாளிக்க
குளுகுளு
ஏற்காடு, குற்றாலம், உதகை இப்படியான ஊருக்கு கிளம்பறது அவசியம்தான். ஆனா அதற்கு முன்னால், இதையும் செய்துட்டு போனீங்கன்னா”
”வீட்டு முன்கதவு, பின்கதவு ரெண்டையும் பெரிய திண்டுக்கல் பூட்டா போட்டுடங்க“ இப்பத்தான் ட்ஜிட்டல் லாக், ஆட்டோமேடிக் லாக் வந்திடுச்சே. அதில் ஏதாவது ஒன்றை போட்டுட வேண்டியதுதான்.
இந்த கோடைக்காலத்தில, வீட்டில் உறுப்பினர்கள் இருந்தாகூட, வீட்டு முன்கதவு, பின்கதவு, மூடியே இருக்கட்டுமே, ஏன்னா, வெயில் காலத்துல சுகமா தூக்கம் வரும், பெரும்பாலும் கோடைக்காலத்தில்தான் திருட்டு பயம் அதிகமா இருக்கும். articles
ஏனென்றால் வெயிலின் தாக்கத்தால் தூக்கத்தால் கண்கள் நம்மை அறியாமலேயே செருகி கொள்ளும். அது போதாதா?
திருடுபவர்களுக்கு
வசதியாய்
போய்
விடும்
”ஊருக்கு போவதை ரகசியமா செய்யாதீங்க, அதுக்காக ஊருக்கெல்லாம் தம்பட்டமும் அடிக்காதீங்க, பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டுல இருக்கறவங்க, கிட்ட ஏற்கனவே சண்டையா இருந்தா கூட.. ஊருக்கு போவதற்கு முன்னால் அவங்க கிட்ட தோழமையோடு பேசி பழகி ஊருக்கு போகும்போது ”கொஞ்சம் நம்ம வீட்டையும்” பார்த்துக்கோங்க”ன்னு அன்பா கேட்டுக்கோங்க. கோரிக்கை மனு கொடுத்திடுங்க
கதவிற்கு அருகிலோ, சன்னலுக்கு அருகிலோ, வீட்டுசாவி, பீரோ சாவி இவைகளை வைப்பது புத்திசாலித்தனமல்ல ” வைச்சீங்கன்னா, இருக்காது அம்புட்டுதான்.
அநாவசியமாக முகம்தெரியாத சந்தேகப்படும் நபர்கள் வாசலுக்கு அருகே நின்றால், ”வாங்க தம்பி என்ன வேணும்” என்று தைரியமாக விசாரியுங்கள். ஊர்ல யாராச்சிலும் வந்திட்டு போறாங்க நமக்கென்ன என்று அலட்சியமாக இருக்காதீர்கள் தம்பி யாருப்பா நீ விசாரித்தாலே” போதும் அவர்கள் நழுவிவிடுவார்கள்.ennathuli
ஏணி, தோட்ட வேலைக்கு பயன்படும் பொருட்களை வீட்டுக்கு வெளியே போட்டுவிட்டு போகாதீர்கள். அவைகள் உங்கள் வீடுகளில் நுழைவதற்கு நீங்களே நுழைவுச் சீட்டை வழங்கி இருப்பதாக திருடுபவர்கள் எண்ணிக் கொள்வார்கள்
”ஒங்க வீடு அபார்ட்மெண்டா? ” அபார்ட்மெண்ட் காவலாளியிடம் தகவல் தெரிவித்து உங்கள் வீட்டை தனிகவனமாக பாதுகாக்க சொல்லுங்கள். கூடுதல் செலவைப் பார்க்காமல், தனியாக ”அண்ணே! பிள்ளைகளுக்கு ஏதாச்சிலும் வாங்கி கொடுங்க என்று பணம் கொடுத்து விடுங்கள். அவை நீங்கள் ஊர் திரும்பும் வரை வேலை செய்யும்.
தூரத்தில் இருந்து பார்த்தால் உங்கள் வீடுகாலியாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி விடாதீர்கள். ஒங்க வீட்டுல இருந்துட்டு, அடுத்தவங்க வீட்டை நோட்டம் பயன்படுத்திக் கொள்வார்கள் பலே கில்லாடி ஆசாமிகள்.
நீண்டநாள் பயனமாக இருந்தால், ”பால் பாக்கெட், செய்திதாள், இவைகளை நிறுத்தி விடலாம்தானே. ஆமாம் நல்ல ஐடியாதான் என்று சிக்கனபேர்வழிகள் அதைச் செய்தால் தவறு.
.நீங்கள்ஊர்
திரும்பும்
வரை
பால் பாக்கெட்டையும், செய்திதாளையும் நண்பர் வீட்டில் டெலிவரி கொடுக்க சொல்லுங்கள்.usefultips
இதெல்லாம் செய்துட்டு போனீங்கன்னா, ”குளுகுளு கொடைக்கானல்ல ஊட்டில சுகமா இருக்கலாம்.
வீடும் வீட்டில் உள்ள பொருட்களும் பாதுகாப்பா இருக்கும்
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்