பசுமைக் கொஞ்சும்
அழகிய கிராமத்தில் எங்கு பார்த்தாலும் சுவரெங்கும் நோட்டிஸ்கள்
ஒட்டப்பட்டிருந்தது. கடைசி
நேரத்தில் அணி மாறியது யார்
ennathuli
![]()  | 
| கடைசி நேரத்தில் அணி மாறியது யார் | 
                         நோட்டிசில் கிழே அடிப்பகுதியில்
பின்குறிப்பு என்று குறிப்பிட்டு  “பொடிசுகள்” கலந்து கொள்ளவேண்டாம் என்று இருந்தது.
           இந்த கூட்டம் பெரிசுகளின் கூட்டமாகும்.
இதில் பொடிசுகளுக்கு இடமில்லை. அப்படி மீறி நுழைந்தால் நீங்களாகவே நசுங்கி
விடுவீர்கள் இது எச்சரிக்கை என்று எச்சரிக்கப்பட்டிருந்த்து.
                            அதைப் படித்து பார்த்த “பொடிசுகளுக்கு” அதிர்ச்சி ஏற்பட்டது.motivated 
              நாங்கள் “பொடிசுகளா” எங்களுக்குள் எவ்வளவு பெரிய “சக்தி ” இருக்கிறது என்பதை இப்போதுள்ள பெரிசுகள் உணர்ந்திருந்தால், நோட்டிஸில் பின்குறிப்பாக அப்படி
வெளியிட்டிருப்பார்களா? ஆவேசமடைந்தன பொடிசுகள் ஒரு சில
பொடிசுகள்  புலம்பின.
                        புலம்பலுக்கு பின்…. “பொடிசுகள்” கூட்டம் போட நோட்டிஸ் ஒட்டினார்கள்.
ஆதில், பின்குறிப்பாக “பெரிசுகள்” கலந்து கொள்ளவேண்டாம் பதிலடியாக
அறிவித்திருந்தன.
                 பெரிசுகளின் மாநாடு ஒரு மண்டபத்திலும்
பொடிசுகளின் கூட்டம் இன்னொரு மண்டபத்திலும் 
ஓரே நாளில் நடைபெறுவதாய் இருந்தது. 
             மத்தியஸ்தரான சூரியன் யோசித்தார் 
       “நீங்களே ஒருவருக்கொருவர் ; சண்டைப் போட்டுக்கிட்டா எப்படி, ஒங்களுக்கு ஆதாரமே நான்தான், நான் ஒங்களை மாதிரி  நடந்துகிட்டா, ஒங்க நிலைமை மோசமா இல்ல போயிடும்” என்று
கூறியும்…            இரண்டு அணிகளுமே அவரின்        வார்த்தைகளைக் அலட்சியப்படுத்தி காதில்
வாங்கி கொள்ளவில்லை. Short stories
                        பெரிசுகளின் மாநாட்டில், “தென்ன விதை”கம்பீரமாக  தலைமை ஏற்றிருந்தது. 
                        ஓலிப்பெருக்கியில், “தென்ன விதை” இப்படியாக ஆர்ப்பரித்த்து. “நாம்தான் பெரிசுகள்.  பொடிசுகளை நாம் ஏன் அழைக்கவில்லை என்றால், பெரிசுகளான நாம், பொடிசுகளின் மேல் விழுந்தால், அவர்கள்தான் நசுங்கி விடுவார்கள்.
ஆதனால்தான் பொடிசுகளை கூப்பிடவில்லை. அவர்கள் நம்மைத் தவறாக புரிந்துக் கொண்டு
தனிக்கூட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர்;. நடத்தட்டுமே!.
நமக்கு என்ன நட்டம்” என்று உரையாற்றியது.
                        மாநாட்டின் இறுதியில் “பொடிசுகளை” நம் அணியில் சேர்க்க வேண்டாம். அவர்கள்
நம் கண்களுக்கு தெரியாதவாறு உள்ளனர். அவர்கள் ஒன்றும் அவ்வளவு முக்கியமானவர் கள்
இல்லை” என்று தீர்மானம் போட்டு மாநாட்டினை
முடித்தனர் .எண்ணத்துளி
                        பொடிசுகளின் கூட்டத்தில்  அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆரசவிதை தலைமையேற்க, 
“ஆலவிதை”, 
அத்திவிதையும்
அதற்கு ஆதரவான பொடி விதைகளாக சிலவிதைகள் பங்கேற்றன.
                        இந்த பொடிசுகளின் அணியில் கடைசியாக
ஓடோடி வந்து “வேப்ப விதை”யும் சேர்ந்துக் கொண்டது.
                        பொடிசுகளும் தத்தம்பெருமைகளைப்
பறைசாற்றி, கூட்டமுடிவில் தீர்மானம் இயற்றின.
                        தீர்மான வாசகமாக “எதிர்காலத்தில் வளர்ந்து ஆளான பிறகு…. இப்பொழுது கூப்பிடாத பெரிசுகளை
ஆதரிக்காமல், நிழல்மூலமாக அவர்களை வளரவிடாமல்
முறியடிப்பதே, நமது நோக்கமாகும். அதையே
கடைப்பிடிப்போம். ஏன்று கூட்டத்தை முடித்துக் கொண்டன.
                         தீர்மானத்தை இருஅணிகளுமே வைராக்கியமாக
கடைப்பிடித்ததன் பலன்… “பொடிசுகளின்” தீர்மானமே வெற்றி பெற்றது. “ஆலவிதை, அத்திவிதை, வேப்ப விதையும். இவர்களுக்கு அரசரனான
அரசவிதையும் அரசாட்சி புரிந்தன. அதன்கிளைகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் தங்கி கூவி
தங்கள் ஆரவார மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. Useful
tips
                        அதைப் பார்த்த “பெரிசுகள்” தங்களின் அறியாமையை நினைத்து வருந்தி, சூரியனிடம் மன்னிப்பு கேட்டு
விட்டு  அடுத்த மாநாட்டிற்கு, “பொடிசுகளை”தலைமையேற்க வாருங்கள்… வாருங்கள்….” என்று நோட்டிஸ் ஒட்டி வரவேற்றன.

Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்